இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தெய்வீகத் தாய்மை தன்னிலேயே கொண்டுள்ள உன்னத மகத்துவம்

இந்த மகத்துவத்தின் சிருஷ்டிப்பில் கடவுளின் இலட்சணங்களை வெளிப்படுத்தியதன் மூலம், நம் தியானக் கருத்தின் இந்தத் தனிப் பட்ட கண்ணோட்டத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக் கிறோம். ஆனால், அதன் மிகத் தெளிவான மிகச் சிறந்த ஒளியிலும், அதன் மிகத் துணிவான வெளிப்பாட்டிலும் அதை விளக்குவது அவசியமாக இருக்கிறது.

அதிகத் துல்லியத்துடன் இதைச் செய்வதற்கு, தனது சொந்த உள்ளரங்க சுபாவத்தில் தியானிக்கப்படுகிற தெய்வீகத் தாய்மையின் இரண்டு பக்கங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்: முதலாவது, ஒரு பேச்சு வகைக்கு, அதன் உலகத்தன்மையான பக்கம். இரண்டாவது, அதன் முறைப்படியான பக்கம். முதலாவதைப் பொறுத்த வரை, அதாவது, மாமரி தனது சொந்தப் பொருண்மை யிலிருந்து தேவ-மனித முறையில் தேவ வார்த்தையானவரோடு ஒன்றிக்கப்பட வேண்டியதாயிருந்ததை அவர்கள் தந்தார்கள் என்ற அடிப்படையில் மரியாயின் தாய்மையை தியானிப்பதில், மிக உயர்ந்த சிருஷ்டிக்கப்பட்ட புத்தியாலும் கூட அறிய முடியாத ஒரு மகிமையையும், உயர்வையும் அது குறித்துக் காட்டுகிறது.

மாமரியின் மகத்துவத்தின் இந்தப் பக்கம் அவர்களுக்கும் தேவ சுதனுக்குமிடையே ஓர் ஒருமித்த தன்மையுள்ள உறவை ஏற்படுத்து கிறது. வார்த்தையானவர் மாம்சமாவதில், தமது சரீரத்தை உருவாக்க வேண்டியவையாக இருந்தவற்றை வேறு எந்த ஆதாரத்திலுமிருந்து எடுக்காமல், மாமரியின் மாசற்ற பொருண்மையிலிருந்தே எடுத்துக் கொண்டார். ஆகவே, தெய்வீகத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஒரு மனித ஆன்மாவோடு ஒன்றிக்கப்பட்டு, ஒரு தெய்வீக ஆளுமையை உருவாக்கிய பொருண்மையை மாமரியிடமிருந்தே அவர் எடுத்துக் கொண்டார். இந்த ஒன்றிப்பின் மூலம் அந்தப் பொருண்மை தெய்வீகமானதென அழைக்கப்பட வேண்டியதாயிற்று. ஏனெனில் கிறீஸ்துவில் மனிதன் கடவுளாகவும், கடவுள் மனிதனாகவும் இருக்கிறார்.

ஆகவே, மாமரியின் பொருண்மையின் ஒரு பாகம் தேவ-மனித ஒன்றிப்பின் முறைப்படி தேவ வார்த்தையானவரோடு ஒன்றிக்கப் பட்டது, அது கிறீஸ்துவில் கடவுளாக இருக்கிறது, அவரில் அது கடவுளென அழைக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இதன் காரணமாக, மாமரியின் மாசற்ற சரீரத்திற்குச் சொந்தமான ஒரு பகுதி, தனக்குச் சொந்தமானதென அவர்கள் உரிமை கொண்டாடக் கூடிய ஒரு பகுதி, கடவுளாக இருக்கிறது. சேசுவுக்கும், மாமரிக்குமிடையே உள்ள ஒருமித்த தன்மையுள்ள உறவு இதை விட அதிக நன்றாக நிலைநாட்டப்பட முடியுமா? திருச்சபைத் தந்தையராலும், வேதபாரகர்களாலும் உணரப்பட்டு, சுட்டிக் காட்டப் பட்ட ஓர் உறவு இது. இவர்களில் அர்ச். தமியான் இராயப்பர் இப்படிக் கூறுகிறார்: 

‘அனைத்திலும் ஒரு மும்மடங்கான விதத்தில் இருக்கும் கடவுள், மாமரியில் நான்காவதான ஒரு விசேஷமான முறையில் இருக்கிறார், அதாவது, தமது ஒத்த தன்மையின்படி அவர்கள் இருப்பது போலவே அவரும் இருக்கிறார். எனவே, இங்கே ஒவ்வொரு சிருஷ்டியும் அச்சத்தோடு மவுனமாயிருக்கக் கடவது; ஏனெனில் இத்தகைய மகத்துவத்தின் பிரமாண்டத்தை ஆராய்ந்தறியக் கூடியவன் யார்?'' அடுத்து அர்ச். அகுஸ்தினார்:

‘கிறீஸ்துவின் மாம்சம் மரியாயின் மாம்சமாகும். உயிர்ப்பின் மகிமையால் அது உயர்த்தப்பட்டுள்ளது என்றாலும், அது இன்னமும் கூட மாமரியிடமிருந்து எடுக்கப்பட்ட மாம்சமாகவே நிலைத்திருக் கிறது.'' கிறீஸ்துநாதரிலுள்ள மாம்சமானது, அவருடைய ஆள்தன்மையோடு ஒன்றாயிருக்கிறது என்பதிலிருந்து, மாமரி ஓர் ஒருமித்த தன்மையின் உறவால் கடவுளோடு ஒன்றிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விளங்குகிறது.

ஒரே வார்த்தையில் சொன்னால், இந்தக் கண்ணோட்டத்தில் மாமரியின் மகத்துவத்தைப் பற்றி தியானிக்கும்போது, அவர் களுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள ஐக்கியம் இரத்த உறவாக இருக்கிறது. மாமரி நிஜமாகவும், உண்மையாகவும் கடவுளோடு இரத்த உறவுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நிஜமாகவும், உண்மையாகவும் கடவுளின் தெய்வீகத் தாயாராக இருக்கிறார்கள்.

அடுத்து இந்த மகத்துவத்தை அதன் முறையான பக்கத்தில் பார்ப்போம், அதாவது தேவ தாயாராக இருப்பதை நிஜமாகவும், உண்மையாகவும் அவர்களுடைய மகிமையாக ஆக்குகிற பக்கத் திலிருந்து நாம் இந்த மகத்துவத்தைப் பார்ப்போம். ஏனெனில் நமதாண்டவரின் திருச்சரீரத்தை உருவாக்கும் தனது பொருண்மை யின் ஒரு பகுதியை மட்டும் மாமரி தருகிறார்கள் என்று சிந்திப்பது முற்றிலும் தற்செயலானது. அது மாமரி பற்றிய ஒரு முறையான அறிவையும், அவர்களது பண்புகளையும் குறித்துக் காட்டுவதில்லை. அவர்கள் இருக்க வேண்டிய முறையில் உண்மையாகவும், நிஜமாகவும் கடவுளின் தாயாராக இருப்பதற்கு வேறு ஒன்று தேவைப்பட்டது. அந்த வேறு ஒன்றைத்தான் நாம் முறையான பக்கம் என்று அழைக்கிறோம்.

மாமரியை ஏறக்குறைய மற்றொரு கடவுளைப் போலத் தோன்றச் செய்யும் அளவுக்கு அவர்களுடைய ஆத்துமத்தின் சாராம்சத்திலும், அவர்களது அறிவிலும், சித்தத்திலும், அவர்களது சுபாவம் மற்றும் சத்துவங்கள் முழுவதிலும் மேன்மை மிக்கதும், மிகத் தீவிரமானதும், மிக ஆழ்ந்ததும், மிக வல்லமையுள்ளதும், மிகப் பிரமாண்டமானதும், மிகவும் ஒப்பற்றதும், ஈடிணையற்றதும், முற்றிலும் புரிந்துகொள்ள இயலாததுமான ஒர் ஒருமித்த தன்மையை, தெய்வீகத்தில் அவர்கள் பங்கு பெறுதலை, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேதசாஸ்திரிகளால் தாய்மையின் வரப்பிரசாதம் என்று அழைக்கப்படுகிற காரியத்தை அது குறித்துக் காட்டுகிறது.

நம் வாசகர்கள் புரிந்துகொள்ளுமாறு, நாம் இந்த வரப்பிர சாதத்தை இவ்வாழ்வில் தேவ இஷ்டப்பிரசாதத்தின் தொடக்க நிலை யிலும், மறு வாழ்வில் அதன் உத்தம நிலையிலும் இந்த இஷ்டப் பிரசாதத்தோடு இங்கு ஒப்பிட்டுக் காட்டுவோம். திருச்சபையின் சகல வேதபாரகர்களும், இந்த இரண்டு நிலைகளிலும் தேவ இஷ்டப் பிரசாதத்தைப் பற்றிப் பேசும்போது, அது தெய்வீகத்தில் பங்கு பெறுதலாக இருக்கிறது என்பதை ஒருசேர ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் இந்தப் பங்குபெறுதல் நுட்பமாக எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பதில் அவர்கள் வேறுபடுகிறார்கள். அவர்கள் அனைவருமே சத்தியத்தின் வரம்புகளுக்குள்தான் இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாகத் தோன்றுகிற ஒரு குறிப்பிட்ட பக்கத்தை வலியுறுத்துகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால், இந்த முழு விவாதப்பொருளுடையவும் ஒரு தெளிவான கருத்து நமக்குக் கிடைக்கும்.

அவர்களுடைய வாதங்கள் பின்வரும் அம்சங்களோடு ஒத்துப் போகின்றன: முதலாவது, தேவ இஷ்டப்பிரசாதம் தெய்வீகத்தில் பங்குபெறுதலாக இருக்கிறது. ஏனெனில் தெய்வீகம் நீதிமான் களுக்குத் தரப்படுவதற்குப் பயன்படுகிற ஒரு பந்தனமாக அல்லது ஐக்கியமாக அது இருக்கிறது. தேவ பிதா கொண்டுள்ள அதே தேவ சுபாவம் தேவ சுதனுக்கும் தரப்படுவதால் அவர் தேவ சுதனாக இருக் கிறார். அவ்வாறே நீதிமான் எதன் மூலம் கடவுளிடமிருந்து தனது சொந்த பங்குபெறுதலைப் பெற்றுக்கொள்கிறானோ அந்த ஐக்கியம் வரப்பிரசாதமாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வரப்பிரசாதம் தெய்வீகத்தோடு நம்மை இணைக்கும் பந்தனமாக அல்லது கட்டுதலாக இருக்கிறது. ஏனெனில் அது தன்னோடு சேர்ந்து தேவசுபாவத்தை இழுத்து வருகிறது. இந்த தேவ சுபாவம் நம்மில் பிரசன்னமாகி நம்மில் வாழும்படி செய்கிறது. எந்த முறையில் எனில், தெய்வீகமானது மிகப் பெரியதாக இல்லாமலும், எல்லா இடங்களிலும் தங்கி வாசம் செய்வதாக இல்லாமலும் இருந்திருந்தால், அது அந்நியோந்நியமான முறையில் நம்மில் பிரசன்னமாகியிருக்கும்படி வரப்பிரசாதம் செய்திருக்கும். ஏனெனில் வரப்பிரசாதத்தின் வழியாகக் கடவுளுக்கும் நமக்குமிடையே உள்ள ஐக்கியம் வெறும் ஆசாபாசத்தின் ஐக்கியமல்ல, மாறாக, அது தேவ இஸ்பிரீத்து வானவர் நிஜமாகவே தரப்படுதலாகவும், அவர் நம்மில் வசிப் பதாகவும் இருக்கிறது.

இரண்டாவதாக, தேவ இஷ்டப்பிரசாதம் சுபாவத்திற்கு மேலானதும், பொதுவானதுமாகிய காரியமாக இருக்கிறது. அது அறிவு மற்றும் சித்தத்தின் சுபாவத்திற்கு மேற்பட்ட செயல்கள் அனைத்தோடும் தன்னை ஒன்றித்து, இவ்வாறு ஆன்மாவின் பொருண்மையை உயர்த்தி, உத்தமமானதாக்குகிறது.

மூன்றாவது, தேவ இஷ்டப்பிரசாதம் ஆத்துமத்தினுள் ஈர்த்துக் கொள்ளப்படுகிற தெய்வீகத்தின் சாயலாகவும், ஒத்த தன்மை யாகவும் இருக்கிறது. அது பொருண்மை சார்ந்த சிருஷ்டிப்பின் ஒவ்வொரு ஒத்த தன்மைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.

இந்த எல்லாக் கண்ணோட்டங்களையும் ஒரு சில வார்த்தைகளில் ஒன்றாக சேர்க்கும்படி, நாம் இப்படிச் சொல்வோம்: தேவ இஷ்டப்பிரசாதம் ஒரு நிஜமான, உண்மையான அந்தரங்க ஜீவியத்தால் தெய்வீகத்தை ஆன்மாவினுள் கொண்டு வருகிறது. இத்தகைய அந்தரங்க ஜீவியம் ஆத்துமத்தில் கடவுளுக்கு ஒப்பான ஒரு நிலையை விளைவிக்கிறது. கடவுளுக்கு இணையான இந்த நிலை எவ்வளவு உண்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக் கிறது என்றால், அது படைக்கப்பட்ட சகல ஒத்த தன்மைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. மேலும் இந்தப் பிரசன்னமும், ஒத்த தன்மையும் இணைந்தும், ஒன்றாகவும் ஆத்துமத்தின் சுபாவத்திற்கு மேலான செயல்களின் பொது அடிப்படை விதியாக இருக்கின்றன.

இனி, தாய்மையின் வரப்பிரசாதம் இதைப் போன்றதாக, ஆனால் இதை விட அளவற்ற விதமாக மேற்பட்டதாக இருக்கிறது. ஏனெனில் அது மாமரிக்குள் தெய்வீகத்தை, பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவைக் கொண்டு வருகிறது. தெய்வீகம் தரப்படுதலுக்குரிய சாத்தியமான எல்லா வழிகளையும் கடந்ததும், தேவ-மனித ஒன்றிப் பிற்கு மட்டுமே கீழானதுமாகிய மிக நெருக்கமான, மிக அந்நியோந்நியமான, மிகவும் நேரடியான ஒரு விதத்தில் தேவ ஆட்களை அது மாமரிக்குள் கொண்டு வருகிறது. மாமரி ஏறக் குறைய மற்றொரு கடவுளைப் போலத் தோன்றச் செய்யும்படி இது மிக உண்மையானதும், ஆழமானதும், தீவிரமானதும், பக்திக் குரியதும், வெளிப்படையானதும், மிக அழகியதுமான, கடவுளுக்கு ஒப்பான தன்மையை மரியாயின் ஆத்துமத்தில் விளைவிக்கிறது. முற்றிலும் அதியற்புதமானதும், சகல மனிதச் செயல்களுக்கும் மேலான மகிமையுள்ளதுமான செயலை, படைக்கப்பட்ட ஆற்றலின் மிக உயர்ந்தவையும், உத்தமமானவையுமான எல்லாச் செயல் களுக்கும் அப்பாற்பட்ட செயலை, காலத்திலும் நித்தியத்திலும் மற்ற எல்லாச் செயல்களுக்கும் மேலாக, தனது பக்திக்குரிய தன்மையிலும், உன்னத மகத்துவத்திலும் உயர்ந்தோங்கி நிற்கும் செயலை, சர்வேசுரனுடைய திருச்சுதனைக் கருத்தரிக்கும் செயலைச் செய்ய வல்லவர்களாக மாமரி இருப்பது ஏன் என்பதற்கு இவை இரண்டுமே காரணங்களாக இருக்கின்றன.

நண்பகல் சூரியனின் முழுப் பிரகாசத்திற்குத் திறப்பாக வைக்கப் படுகிற ஒரு பிரகாசமான, சுத்தமான கண்ணாடி, நாம் சொல்ல வரும் காரியத்திற்கு ஒரு மங்கலான உதாரணமாக இருக்கிறது. மிகப் பரிசுத்தமான படிகத் துண்டு ஒன்றை நண்பகல் சூரிய ஒளி படும் இடத்தில் வையுங்கள், என்ன நிகழ்கிறது? சூரியன் அந்தக் கண்ணாடி யைத் தனது மிகப் பிரகாசமான ஒளிக்கதிர்களால் நிரப்புகிறது. அது ஒளியைக் கருத்தரித்திருக்கிறது, ஒளியில் ஊறியிருக்கிறது என்று சொல்லப்படும் அளவுக்கு சூரிய ஒளி அதை முற்றிலுமாக ஊடுருவு கிறது. இந்தக் கருத்தரித்தல் அந்தக் கண்ணாடியை மற்றொரு சூரியனைப் போல உத்தமமான முறையில் தோன்றச் செய்கிறது. தனக்குரிய அதே பரிசுத்தத்தோடும், அதே பிரகாசத்தோடும், அதே வலிமையோடும், கண்ணைப் பறிக்கிற அதே ஒளியோடும் அந்தக் கண்ணாடி பிரதிபலிக்க அதற்கு உதவி செய்கிறது.

மாமரியிடமும் இதுவே நிகழ்ந்தது. தாய்மையின் வரப்பிரசாதத்தால் தெய்வீகம் முழுவதும் ஓர் ஒப்பற்ற முறையில் வந்து அவர்களில் தங்கியது; அவர் எல்லாவிடங்களிலும் தங்குவது போன்ற அதே முறையில் அல்ல ; இவ்வாழ்வில் அல்லது நித்தியத்தில் நீதிமானின் அல்லது அனைத்து நீதிமான்களின் ஆத்துமங்களில் அவர் தங்கி வாசம் செய்யும் அதே முறையில் அல்ல, தேவ இஷ்டப்பிரசாதத்தால் மாமரியின் ஆத்துமத்தில் அவர் தங்கியிருந்த அதே முறையிலும் கூட அல்ல, ஏனெனில் இது தாய்மையின் வரப்பிரசாதத்திலிருந்து வேறுபட்டதாக இருந்தது. ஆனால் தாய்மையின் வரப்பிரசாதத்தின் மூலம் தெய்வீகம் மாமரியில் வந்து தங்கிய செயல் முற்றிலும் வேறுபட்டதும், ஒப்பற்றதும், தனிப் பட்டதும், இணையற்றதுமான முறையில் நிகழ்ந்தது. மிக நெருக்கமானதும், மிக அந்நியோந்நிய மானதும், மிக நேரடியானதுமான அந்தப் பிரசன்னத்தால், மிகவும் அடக்கியாள்வதும், ஆட்கொள்வதுமான அரவணைப்பால், மிகக் கனிவுள்ளதுமான சீராட்டலால் அவர் அவர்களுடைய சுபாவம் முழுவதையும், அவர்களுடைய ஆத்துமம் முழுவதையும், அவர்களுடைய சத்துவங்கள் அனைத்தையும் நிரப்பினார், அவற்றை முற்றிலுமாக ஊடுருவி, அவற்றைப் பொதும்பச் செய்து, தம்மைக் கொண்டு அவை போதை கொள்ளச் செய்து, தமது சாயலை அந்த ஆத்துமத்திலும், அந்த சத்துவங்களிலும் அவர் பதித்தார். இந்த தேவ சாயல் எந்த அளவுக்கு உண்மையானதாகவும், பிரகாசமானதாகவும், தன்னையே வெளிப்படுத்துவதாகவும், மிகுந்த உயிரோட்டமும், தீவிரமும், உத்தமதனமும் உள்ளதாகவும் இருந்தது என்றால், அது மாமரியை ஒரு கடவுளைப் போலவே தோன்றச் செய்தது, இவ்வாறு, மாமரியும் நீதியின் தெய்வீக சூரியனாகிய அவரைப் போலவே, இவ்வுலகில் வருகிற எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியை வீசுகிற மற்றொரு சூரியனைப் போலாக்கியது. ஆ, நாம் மனித வார்த்தைகளைப் பயன்படுத்தலாம், ஆனால் கெருபிம்களின் கண்களையும் கூசச் செய்கிற, அல்லது செராபின்களின் தீவிர நேசத்திற்கும், பக்திக்கும் சவால் விடுக்கிற ஒரு காரியத்தை எடுத் துரைக்க மனித வார்த்தைகளுக்கு சக்தி ஏது? இந்தக் காரியம், அர்ச். அகுஸ்தினார் சொல்வதுபோல, மாமரியிடமிருந்து தமது சுபாவத்தை எடுத்துக்கொண்ட கடவுள் மட்டுமே அறிந்துள்ள ஒன்றாக இருக் கிறது. தாய்மையின் இந்த வரப்பிரசாதத்தைப் பற்றி அர்ச். சியென்னா பெர்னார்தீன் என்ன சொல்கிறார் என்று கேட்போம்: எடுத்துக்கொண்ட கடவுள் மட்டுமே அறிந்துள்ள ஒன்றாக இருக் கிறது. தாய்மையின் இந்த வரப்பிரசாதத்தைப் பற்றி அர்ச். சியென்னா பெர்னார்தீன் என்ன சொல்கிறார் என்று கேட்போம்:

‘கடவுள் ஒரு கடவுளைக் கருத்தரிப்பதற்கு எந்த வகையான ஒழுங்கும், ஏற்பாடும் தேவையில்லாதிருந்தது. ஏனெனில் மொத்தத்திலும், எல்லா விதத்திலும் தமக்குச் சரிசமமான ஒரு வார்த்தையானவரை, ஓர் அகச் செயல்பாட்டின் வழியாகக் கருத்தரிப்பது அவரது தேவ சுபாவத்திற்கு முற்றிலும் உகந்ததாக இருந்தது. ஆனால் ஒரு பெண் ஒரு கடவுளைக் கருத்தரித்துப் பெற் றெடுப்பது என்பது, புதுமைகளில் எல்லாம் மேலான புதுமையாக இருந்தது; ஏனெனில், நான் இப்படிச் சொல்லலாம் என்றால், இந்தப் பெண் தெய்வீக உத்தமதனங்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் ஓர் அளவற்ற தன்மையால், தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்படுவது அவசியமாயிருந்தது. இவை இதே அளவில் வேறு எந்த சிருஷ்டிக்கும் ஒருபோதும் தந்தருளப்படவில்லை. இதன் காரணமாக, தெய்வீக உற்பவத்தின் வேளையில் தெய்வீகக் கன்னிகையின் மீது பொழியப் பட்ட இஸ்பிரீத்துசாந்துவானவரின் நேசச் சீராட்டல்களின் ஊடுருவப்படாத பாதாளத்தின் ஆழத்தைக் கண்டறிய எந்த மனித அறிவாலும், சம்மனசுக்களின் அறிவாலும் ஒருபோதும் இயலாது'' (ம்e Veஆழி, ஸலியி. ஷ்ஷ். ஸ்ரீ. 14).