விருத்தம்.
தன்னிகரில்லாத்தேவன் தாசரைமீட்பதற்கு
உன்னருங்கருணைகொண்டு உயர்மனுவுருவாய்மேவ
இந்நிலந்தனிற்றெரிந்த இனிய மாமரியாயென்னும்
கன்னியினுற்பவத்தைக் கருத்தொடுகழறுவாமே.
அம்மானை.
இப்பெரியபட்டணத்தில் ஏற்ற விசிறேல் கிளையில்
செப்புஞ்சுவக்கீனுந் தேவியெனுமானாளும்
ஈசாக்கின் குமாரனான யாக்கோபுக்கு இசிறேல் எனும் நாமமுளது
மன்றல்புரிந்து மறையில் விதித்தபடி
என்றும் பெரியோரா யிங்கிருக்கும் நாளையிலே
தங்களுடமையெல்லாம் தரணியில் முக்கூறுசெய்து
எங்குமிரப்போருக் கிக்கூற்றிலோர் கூறும்
பங்கிட்டுக்கொண்டு பரனைப்பணிந்தேத்திக்
தங்களுக்கோர்பிள்ளை தரவேணுமென்று சொல்லி
எண்ணுங்கணக்கும் இருபயிற்றாண்டு மட்டும்
மண்ணிற் சிறந்த மலடராய்வாழ்ந்திருந்தார்
தேக்குஞ்செருசலையின் தேவாலயந்தனிலே
வாக்கியத்தின் வண்ணம் வருந்திருநாளாசரிக்க
நீதிச்சுவக்கீனும் நேசமுள்ள ஆனாளும்
ஆதிக்குநேர்ச்சிகொண்டு ஆலயத்திற்போனார்கள்
பிள்ளையில்லா மலடர் பேசரியபூசைவைத்து
உள்ள சடங்கு உபசரிக்கும் வேளையிலே
கோயிலுக்குட்புகுதல் கொள்கையல்லவென்றுசொல்லி
வாயிலுக்கப்பாலே வந்தவர்கள் நில்லுமென்றார்
கூறியகட்டளையைக் கொற்றவர்கள் வங்கிஷத்தோர்
மீறியே தங்கள் வெகுமானபத்தியினால்
வாசலைத்தள்ளி வளர் பூசைகேட்பதற்கு
ஆசையுடனே அவர்கள் வருதல்கண்டு
சாத்திரியென்னுந் தவவியக்கோவானவரும்
பார்த்திபன் றன்னைப் பகர்ந்தேயகற்றினராம்
ஈனாமலடானோ ரென்றும் போல் நில்லாமல்
வானாதிகோயிலுள்ளே வந்து புகுவானேன்
என்றிவரைச்சொல்ல விருபேரும்நாணமுற்று
மன்றிற்றவத்தோர் மறுத்து மொழிகூறாமல்
அந்தவழியாக ஆயருடை கானகத்தில்
வந்து சுவக்கீனும் மனத்துயரோடே யிருந்தார்
தேவியாரான சிறந்ததவ ஆனாளும்
மேவியதன்மனையில் மெய்தது பரோடேயிருந்தாள்
அன்னாள் து யரு மருந்தவசுங்கண்டிரங்கிப்
பொன்னானெனும்பரனும் போந்தசுவக்கீனுவுக்கு
ஆறுதல் சொல்ல அரியவொருசம்மனசைக்
கூறிவரவிடுத்தார் குவலயத்திலம்மானை
ஏரார்வனத்தில் இயக்கோபிதிர்வழிக்கு
மாராயஞ்சொல்லி மகிழ்ந்து வந்தசம்மனசு
தூண்டிச்சுவக்கீனுவுக்குச் சோபனங்கள் கூறிடுமாம்
ஆண்டவனுங்களுக்கு அன்புமிகப்புரிந்து
புத்திரியொன்றைப் புகழாய்வரவிடுவார்
சத்தியமிவ்வார்த்தை தான் சலிக்கவேண்டாம் நீர்
உன் தேவியானாள் உதரந்தனிற்செனிக்கும்
அன்புள்ள கன்னிகையால் ஆதரையு மீடேறும்
பிரியமுடன் பிறக்கும் பேரின்பக்கன்னிகைக்கு
மரியையெனும்நாமம் வழுத்திடுவாய்மா தவனே
வார்த்தைவழுவாதென் வசனமதைநம்புதற்கு
ஏற்றவடையாள மின்னமொன்றுசொல்லுகிறேன்
பொற்பூச்சுவாசலிலே போய் வேருமுதலே
கற்போடு முன் றலைவி காணவுனைத்தேடிடுவார்
அங்கவளைக்கண்டு மிக வகமகிழ்ச்சிகொண்டாடி
மங்கையும் நீயும் மனை புகுது மென்று சொல்லி
வானோன் மறைந்து மகவுரிமைவேண்டுமென்ற
ஆனாள் தனக்கு மறிக்கையிட்டானந்தமொழி
கன்னியுங்கேட்டுக் களிகூர்ந்து கொண்டாடி
உன்னியேபொற்பூச்சி லோடிவந்தாளம்மானை
வாசலாம்பொற்பூச்சில் மங்கையருங்காதலனும்
ஆசில்லாவண்ண மருள்வானோன் சொன்னபடி
சந்தித்துக்கொண்டாடித் தற்பானையும் புகழ்ந்து
முந்துற்ற தங்கள் முதுமனையில்வாழ் திருந்தார்
ஆதியுரை தவறா தானாள் திருவயிற்றில்
ஓதியநற்கன்னிகையு முற்பவித்தாளம்மானை
பண்டார்க்குமிந்தப் பலன் கிடைத்ததில்லையென்று
விண்டார்க்குமின்பம் விளைவிக்குஞ்சோபனமாய்
பெற்றிடும்புத்திரிக்குப் பேராஞ்சுசொன்னபடி
உற்ற திருநாம முரைத்தார்மரியவென்று
பரலோகர்கொண்டாடும் பாக்கியமாய்வந்துதித்தாள்
நரலோகர்போற்றி செய்ய நாயகமாய்வந்துதித்தாள்
ஆஞ்சுகளெல்லாம்வணங்க அரும்பொருளாய்வந்து தித்தாள்
வாஞ்சையுடன் புண்ணியர்கள் வணங்குதற்குவந்து தித்தாள்
புண்ணிய அப்போஸ்தலர்கள் போற்றுதற்குவந்து தித்தாள்
விண்ணுலகுக்கோர்வழியாய் மேதினியில்வந்துதித்தாள்
கன்னியர்க்கிராக்கினியாய்க் காசினியில்வந்துதித்தாள்
மின்னுசுவிசேஷகர்க்கு விளக்கொளியாய்வந்துதித்தாள்
வகையாயலகைவினை மாற்றுதற்குவந்துதித்தாள்
பகையானபாவமெல்லாம் பற்றறுக்கவந்துதித்தாள்
புகல்வேதசாட்சிகட்குப் புத்தியெனவந்துதித்தாள்
சகலமனிதருக்குந் தாயாகவந்து தித்தாள்
பாவிகளையீடேற்றப் பார்மீதில்வந்துதித்தாள்
நாவாற்று திக்கரிய நாயகியாய்வந்துதித்தாள்
புண்ணியவானோர்க்குப் பூஷணமாய்வந்துதித்தாள்
எண்ணிமுடியாதவங்கள் ஏற்றுதற்குவந்து தித்தாள்
மண்ணோர்கள் செய்தபவ மானதெல்லாம்மாற்றிவைக்க
விண்ணோன் சமுகமதில் வேண்டல் செய்யவந்துதித்தாள்
நாணுகின்றபேய்கள் மதம் நானிலத்திலேயடக்க
சேணுலகமோட்சந் திறக்கவென்றுவந்துதித்தாள்
ஆதனுடனேவைபிழை யகற்றிநமையீடேற்ற
நாதன்றிருத்தாயாய் நானிலத்தில்வந்தவட்கு
வேதவிதிப்படியே மிக்க சடங்குசெய்து
ஓதுமரியவென உவந்திருநாமமிட்டு
ஆனந்தங்கொண்டாடி. அந்நாள் முறைப்படியே
வானந்திறந்தருள் வந்தவளைத்தான் வளர்த்தார்
பெண்ணார்க்காசியுமாய்ப் பேரின்பக்கன்னியுமாய்
எண்ணாக்தவசுக் கினியாபரணமுமாய்
பூவேந்தர்வங்கிஷத்திற் பொற்பாளுதித்ததினால்
காவேந்து மண்ணினுள்ள கற்றவரும்மற்றவரும்
மன்னுமான்பத மடியிலிருப்போரும்
பொன்னுலகத்தோரும் புகழ்ந்தோதியென்ன சொல்வார்
ஆதிமனுஷன் புரிந்த அவ்வினையால் வந்தடைந்த
நீதிபரன்சாபம் நீணிலத்தில் நீங்குமினி
தூங்குமிருளகலத் தோன்றுவிடிவெள்ளியதாய்
தேங்கும்புவிதனிலே தேவகன்னிதானுதித்தாள்
மிக்கவொளிவிடுக்கும் மேலான சூரியனும்
இக்கணந்தோற்று மெனவே மகிழ்ந்தெவரும்
மங்களங்கள் கொண்டாடி மாபுவியிலுள்ளவர்கள்
பங்கையவாண்முகமாய் பாடினாரம்மானை
அத்தன்சுவக்கீனு மன்னையெனுமானாளும்
சித்தங்களிக்கச் சிறந்தாண்டு மூன்று மட்டும்
பாலகிதன்னைப் பரிவாகவே வளர்த்தார்
காலமுதலே கருதியிருந்தபடி
தேவாலயத்தினுக்குத் திருமகவைத்தானெடுத்துக்
கோவானோர்வங்கிஷத்தோர் கொண்டுசென்றாரம்மானை