இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் ஆகிய பரம இரகசியங்களில் கடவுளோடு ஒத்துழைப்பவர்கள் என்ற முறையில் மாமரியின் உன்னத மகத்துவம்

நாம் விளக்கிக் காட்டியுள்ளது போல, மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் என்னும் பக்திக்குரிய பரம இரகசியங்களை நிறைவேற்றுமுன் கடவுளுக்கு மாமரியின் சம்மதம் தேவையா யிருந்தது என்பது அவர்களுடைய மகத்துவத்தின் இரண்டாவது அம்சமாகும். இந்த மகத்துவத்தின் ஈடிணையற்ற உன்னதத் தன்மை, நாம் விளக்கிக் கூறத் தேவையில்லாத அளவுக்கு மிகத் தெளி வாகவும், எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. ஆயினும், பிரபஞ்ச ஒழுங்கில் மாமரியின் மிகப் பிரமாண்டமான தெய்வீகப் பங்களிப்பைக் காண நம் வாசகர்கள் தவறி விடாதபடி, இந்த மகத்துவத்தை விளக்கிக் காட்டுவது அவசியமானதாக இருக்கிறது.

ஆகவே, இந்த மகத்துவத்தின் விளைவுகளில் அதைப் பற்றி சிந்திப்பதோடு நிறுத்திக்கொண்டு, முதலாவதாக, கடவுளின் ஒரு மிகப் பெரியதும், மிகுந்த பக்திக்குரியதும், நம்மை முற்றிலுமாகப் பரவச ஆச்சரியத்தில் அமிழ்ந்து போகச் செய்வதுமான ஒரு தெய்வீகத் தயாளம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் பகுத்தறிகிறோம்.

கடவுள் தமது அளவற்ற உன்னத மகத்துவத்தை அதன் உச்சபட்ச அளவில் தமக்கு வெளியே வெளிப்படுத்தத் தீர்மானிக்கிறார். அவர் தமது அளவற்ற பார்வையைக் கொண்டு எல்லா சாத்தியக்கூறு களையும் ஆராய்கிறார். அதன்பின் இந்த நோக்கத்தை அடைய மனிதாவதாரமே ஒரே உண்மையான, மிகச் சிறந்த வழியாக இருக்கிறது என்று தீர்மானிக்கிறார். இதனால் கிறீஸ்துநாதர் என்னும் தேவ-மனிதன் தோன்ற வேண்டும் என்று அவர் நியமம் செய்கிறார். கிறீஸ்துநாதர் தமது தனித்தன்மை இப்படி ஸ்தாபிக்கப்படுவதில், தமது அளவற்ற சுபாவம் நீங்கலாக, சுபாவமானதும், சுபாவத்திற்கு மேலானதுமான மூன்று தனித்தனி காரியங்களைத் தம்மோடு அரவணைத்துக் கொள்கிறார். இவற்றில் சுபாவமானது என்று சொல்லப்படுகிற காரியம், ஒரு மனித சரீரத்தையும், ஒரு மனித ஆத்துமத்தையும் குறிக்கிறது. இந்த மனித சரீரமானது தாதுக்களின் உலகையும், தாவர உலகையும், புலன்சார்ந்த உலகையும் தன்னோடு அரவணைத்துக்கொள்வதாக இருக்கிறது. மனித ஆத்துமம் சாத்தியமான அனைத்து ஞான ஜீவியர்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறது.

சுபாவத்திற்கு மேலான காரியம், தொடக்கமாகிய வரப்பிரசாதம் மற்றும் உத்தமதனமாகிய மகிமை ஆகிய, தனக்குக் கீழ்ப்பட்ட இரண்டு காரியங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. கிறீஸ்துநாதரின் இருத்தலைத் தங்களில் தொடங்கி வைக்கும்படியாகவும், அவரோடு ஒன்றாயிருக்கும்படியாகவும், அவரைத் தங்கள் மையமாகவும், தங்கள் அரசராகவும், தங்கள் சர்வமாகவும் ஆக்கிக்கொள்ளும் படியாகவும், மேற்கூறிய காரியங்களில் உட்பட்டிருக்கிற எண்ணற்ற வகையான தனி மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று கடவுள் தீர்மானிக்கிறார்.

இதனாலேயே இந்த எல்லாக் காரியங்களிலும் பிரபஞ்சம், அதாவது தாது உலகமும், தாவர உலகமும், புலன் சார்ந்த உலகமும், ஞான அல்லது சம்மனசுக்களுக்குரிய உலகமும், ஆன்மாவும் சரீரமும் இணைந்த மனிதர்களுமாகிய அனைத்தும், உண்டாக்கப்பட்டன. சம்மனசுக்களும், மனிதர்களும், அவர்களை விடத் தாழ்ந்த சிருஷ்டி களும், கிறீஸ்துவின் திருச்சட்டத்திற்கு உட்பட்டவையாகிய மற்ற இரண்டு காரியங்களில், அதாவது வரப்பிரசாதத்திலும், மகிமை யிலும் பங்கடைய வேண்டியவையாக இருக்கின்றன. இவற்றில் தேவதூதர்களும் மனிதர்களும் நேரடியாக கிறீஸ்துவின் வழியாகவும், தாழ்நிலையிலுள்ள மற்ற எல்லா சிருஷ்டிக்கப்பட்ட பாகங்களும் மறைமுகமான முறையில் மனிதன் வழியாகவும் பங்குபெற வேண்டும்; ஏனெனில் தாதுக்களின் உலகமும், தாவர உலகமும், புலன்களால் உணரக்கூடிய உலகமும் மனித சுபாவத்தின் ஒரு பாகமாக இருக்கின்றன. அவை அவனது வரப்பிரசாத உயர்விலும், மகிமையில் வரப்பிரசாதத்தின் பூரணத்திலும் பங்கடைய வேண்டி யவையாக இருக்கின்றன.

மனிதன் பாவத்தினால் தேவ கட்டளையை மீறி வீழ்ச்சியடை கிறான், அவன் இவ்வாறு இந்தத் திட்டம் முழுவதையும் சீர்குலையச் செய்கிறான். இதன் காரணமாக கடவுள், அதிக நன்மைத்தனமுள்ள தயாளத்தோடும், மனிதாவதாரத் திட்டமாக மட்டும் இருந்ததை இரட்சணிய திட்டமாக மாற்றியமைக்கிறார், அவர் இதைக் கொண்டு மனிதனை அவனது முந்தைய நிலையில் மீண்டும் ஸ்தாபிக்கிறார், அதிக மேலானதும், அதிக இணக்கமுள்ளதுமாகிய ஓர் ஒழுங்கை அவர் மீண்டும் ஏற்படுத்துகிறார். மேலும் அதிக நன்றாகவும், அதிக மேன்மையான விதத்திலும், அதிக மகிமையுள்ள விதத்திலும் தம்மை வெளிப்படுத்தவும் செய்கிறார்.

ஆனால் இந்த முழுத் திட்டத்திலும், அனைத்திலும் அற்புத மானதும், அனைத்திலும் அதிக தாராளமுள்ளதுமான கடவுளின் நன்மைத்தனத்தால் ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அதுவே மனுவுருவான வார்த்தையானவரின் தாயாக இருக்கும்படி தாம் நியமித்திருக்கிற ஒரு கன்னிகையின் மனித சித்தமாகும். இந்த சித்தம் கடவுளுக்கும் அவரது கைவேலைக்கு மிடையே மத்தியஸ்தம் செய்வதாக ஆக்கப்படுகிறது. மாமரியின் சித்தம், மாமரியின் சுய சித்தம், தனது சுதந்திரமான, தடையற்ற சம்மதத்தைத் தரவில்லை என்றால் கடவுளின் அளவற்ற உன்னத மகத்துவம் வெளிப்படுத்தப்படாது, அவரது தயாளத்தின் அற்புத மான சாட்சியங்கள் தரப்படாது, அந்த மேன்மையான, பக்திக்குரிய செயல்கள் நிறைவேற்றப்படாது. கடவுளின் இந்தத் தீர்மானத் திற்கான காரணங்களை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். இத்தகைய மகத்துவத்தின் அதியற்புதத் தன்மையை விரித்துரைக்க மட்டுமே இந்த இடத்தில் நாம் விரும்புகிறோம் என்பதால், அந்தக் காரணங்களை நாம் மீண்டும் விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. மனித அல்லது சம்மனசுக்குரிய அறிவு இதை விட மேலானதும், பக்திக்குரியதும், பிரமாண்டமானதுமான மகத்துவத் தைக் கற்பனை செய்ய முடியுமா? 

நாம் தெய்வீகத்தின் மூன்று தேவ ஆட்களையும் ஒரு பக்கத்திலும், வீழ்ச்சிக்குப் பிந்திய எல்லா நூற்றாண்டுகளையும், தலைமுறைகளையும் மறு பக்கத்திலும் பார்க்கிறோம். இருவரும் ஒருவருக்கெதிராக மற்றவர் ஆயுதம் தரித்திருக்கிறார்கள். மனிதன் தனது அக்கிரமங்களைக் கொண்டு கடவுளுக்கு எதிராக எழும்புகிறான்; கடவுளின் நீதி மனிதனைத் தண்டிக்கும் விதமாக அவனுக்கு எதிராகப் பற்றியெரிகிறது.

மங்கள வார்த்தை தினத்தன்று, மாமரி சம்மனசானவரிட மிருந்து தனது தெய்வீகத் தாய்மையாகிய பக்திக்குரிய கதி பற்றிய நல்ல செய்தியைக் கேட்டார்கள். அதை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தனது கன்னிமையுள்ள மகிமைக்குப் பங்கம் வராமல் இது நிகழ்த்தப்பட முடியுமா என்று அவர்கள் தூதரிடம் கேட்டார்கள். இச்சமயத்தில் கடவுளும், மனிதத் தலைமுறைகள் அனைத்தும் (மாமரியின் இல்ல வாசலில்) நின்று தங்கள் கதியை மாமரியிடமிருந்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். மாமரி இவர்கள் இருவருக்குமிடையே மத்தியஸ்தியாக அமர்ந்தார்கள். அவர்கள் தனது ஆகக்கடவது என்ற வார்த்தையை, ஃபியாத்தைக் கூறி இருவரின் கதியையும் முத்திரையிட்டு உறுதிப்படுத்தினார்கள். 

இது கடவுளுக்கு, வேறு எந்த முறையிலும் அவர் பெற முடியாத ஒரு மகிமையை, அவரது அளவற்ற மகத்துவத்திற்கும், உன்னத மேன்மைக்கும் முழுமையாகவும், பூரணமாகவும் தகுதியுள்ள ஒரு மகிமையை அளித்தது; தம்மை ஆராதிப்பவரும், தமது மகிமைக் காகப் பலியாகிறவரும், சாராம்சத்திலும், உன்னத மகத்துவத்திலும் அளவற்றவருமாகிய ஒரு கடவுளைக் கொண்டிருக்கும் மகிமையைக் கடவுளுக்கு இது அளித்தது. மனிதர்களுக்கு அந்த வார்த்தை ஒரு தேவ-மனிதனைத் தந்தது; அவர்களது சுபாவத்தை அது அளவற்ற விதமாக உயர்த்தியது; அவர்களது ஆளுமையையும் அது அளவற்ற விதமாய் உயர்த்தியது. அது அவர்களுக்கு வரப்பிரசாதத்தையும், மகிமையையும், மூன்று தேவ ஆட்களுடனான தெய்வீக உறவையும் அளித்தது. அது முழு சிருஷ்டிப்புக்கும் ஒரு பக்திக்குரிய தன்மையையும், ஓர் அளவற்ற தன்மையையும், ஒரு நம்பிக்கையையும் தந்தது.

இதை விட மேலானதும், அதிக பக்திக்குரியதும், முற்றிலும் ஒப்பற்றதுமாகிய ஓர் உன்னதத் தன்மையை, ஒரு மேலான கதியை, ஒரு மகிமையை, ஒரு மகத்துவத்தை நாம் கற்பனை செய்ய முடியுமா?

‘இங்கே சிருஷ்டிகள் அனைத்தும் அச்சத்தோடு மெளனமா யிருக்கக்கடவன; ஏனெனில் இத்தகைய மகத்துவத்தின் பிரமாண்டத்தை யாரால் அளக்க முடியும்?'' என்று நாமும் அர்ச். தமியான் இராயப்பரோடு அதிசயித்தபடி கூறுவோமாக.