இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - இரங்கல்

கலிநிலை வண்ணத் துறை.

இருபுடை யமரர்கள் பரவியது திநிறை யெண்ணூரார்
வருதிரு மகனொடு கரமிசை வளரமறந்தாரோ?
மருமலர்க் கொடியினி லொருமல ரருளியு வந்தாரேல்
திருவடி மலரிலன் னுளமல ருறவெனச் சேராதோ?

சேரார்ப் புறங்கண்ட செங்கோல் தவிதாசன்
போார் குலத்திற் பிறந்துமதி-யோரேழிற்
சென்ம வினை துடைத்தான் சேர்ந்தாரை யெண்ணூரிற்
கன்ம வினை துடைத்தான் காத்து

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்.

காத்தானை யுலகமுத லுயிர் கள் யாவுங்
கண்டானைக் கொண்டாடித் திண்புயத்தே
சேர்த்தானை யெனையடிமை கொண்டாள் வானைத்
தெய்வகன்னி நாயகனைச் சிந்தை நோயைத்
தீர்த்தானைத் திருமறையைப் போதித்தானைத்
தேசமெங்கும் மணம் பரப்பி வாடாச் செங்கோல்
பூத்தானைப் பெரியவர் வாழ் எண்ணூரானைப்
போற்றாதே நாள் பலவும் போக்கினே னே .

ஒருபொருண்மேல் மூன்றடுக்கிவந்த வஞ்சித்தாழிசை.

பதியானை மெஞ்ஞான
மதியானை யெண்ணூரின்
நிதியானை நினைவார்செய்
துதியானைப் பணிவரே.
பெரியானை யெண்ணூரென்
புரியானைக் கொடிநிழல்
உரியானை யெங்கெங்கும்
அரியானைப் பணிவீரே.
முன்னவனை யெண் ரின்
மன்னவனை மாதாவை
அன்னவனை யார்யார்க்கும்
பொன்னவனைப் பணிவீரே

வஞ்சித்துறை.

பண்ணூர் வாயனை
எண்ணூர் நாதனை
நண்ணீர் நாளையே
விண்ணீ ரென்பரே