இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - வருகை

எழுசீராசிரிய விருத்தம்.

பதியாவும் போற்ற நிலைபெற்ற வெண் ணூர்ப்
பதிமேவுஞ் சூசை முனியே!
விதியாவு மோதி யெமையாள வந்து
வினை தீர்க்கு முனது புகழைத்
துதியாத வாயன் குவியாத கையன்
தொழுகாத மெய்ய னெனினும்
மதியாதுன் சேயும் மனையாளும் நீயும்
வரவேண்டு மென்ற னகமே.

இதுவுமது

அரணெற்றி வான முகமற்ற மாட
வணி கொண்ட வெண்ணூ ரரசே!
சரணங்கள் கோடி தருமுன் றன் மைந்தன்
றனையா தரித்து கறையுங்
கரணங்க ளோய்ந்து புலனைந்தும் தீர்ந்து
கடை வாயில் பாலதொழுகும்
மரணத்துன் சேயும் மனையாளும் நீயும்
வர வேண்டு மென்ற னகமே.