இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - குறம்

ஆறுசீராசிரிய விருத்தம்.

காலமெலாங் குறி தெரிவேன் மடந்தையரே! மருந்தறிவேன்
கருத்துத் தேர்வேன்
சால மெலாந் தெரிந்தாரைப் புறங்காண்பேன் கூடைமுறக்
தனித்துச் செய்வேன்
கூல மெலாம் பொன் கொழிக்கு நதிபுடைசூழ் எண்ணூர் வாழ்
குறத்தி நானே
தாலமெலாங் கு றம்பாடி வருமென்னைக் கேட்டதெல்லாஞ்
சாற்று வேனே.