இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - மதியொடு உசாவல்

பததடியான் வந்த - பஃறொடை வெண்பா.

தவளமால் சங்கந் தனித்தனியே யூர்ந்து
பவள மால் பூங்கொடியின் பந்தரின் கீழ்ப்போய்
முத்தீனுஞ் செந்நெல் முளை விதைத்த பண்ணை வாய்க்
கொத்தீனும் பாக்குக் குலைசாய்த் தெழில்வாளை
வெள்ளத்தி னூடே விளையாடு மெண் ணூர் வாய்
உள்ளத்தினாலும் உரையாலும் போற்றொண்ணா
வள்ளலார் மீது மயலாகி மாமதியே!
உள்ளவனப்பும் ஒடுங்கக் கலைதேய்ந்து
நின்றாயோ? என்போல நீளிரவு தூங்காமல்
அன்றாடம் விண்மேல் அலைந்து.