இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பதம்

அப்போ நினைக்கவல்லையோ? பாழுமனமே
இப்போ நினைக்கத் தொல்லையோ?

செப்பும் பிணிநிறைய தேகம்வற்றித் திரைய
இப்பாற்கண்ணுமறைய எண்ணும் எண்ணங் குறைய,

உலக முனை வெறுக்க உற்றாருங்கை விரிக்க
அலகைகளு நகைக்க அங்கங் கலகலக்க

சைகை காட்டியகையுந் தானே உயர்ந்து தொய்யும்
ஐயோவென்றாலுஞ் செய்யும் ஆதரவற்றுநையும்.

உதடுடன் பல்லுங்கிட்ட ஊணற்றுக்கன்னமொட்ட
வதனம்வேர்வுகள் தட்ட வாயாற் கவங்கள் கொட்ட.

செவியுங்கேளாதுசீறி சேத்தும்மிகமீறி
அவியும் எண்ணத்தை கூறி ஆவதொன்றுண்டோதேறி.

பஞ்சிலூட்டிக் கொடுக்கும் பாலு நில்லாதெடுக்கும்
மிஞ்சிவலிப் படுக்கும் மெவாநாற்றமெடுக்கும்.

எதையும் பார்த்து மிரண்டு இணைவிழிகள் புரண்டு
மதிமாறி நாவறண்டு மாயுங்காலத்தைக் கண்டு.

பெற்றார் கூக்குரல் போடப் பெண்டீர்கதறிவாட
சற்றிருவென்றாலுங்கூடத் தங்காதுயிர்விட்டோட.

தேவதீர்வையின் முன்னே தீப்பேய் எடுத்துச் சொன்ன
பாவமலையா யெண்ணப்படவுள நாணிக்குன்ன.

பேயினம் வந்து கட்டுஞ் சீயென்றுனையதட்டும்
தீயநரகில் நெட்டுந் தீமழுவைப் புகட்டும்.