இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - தழை

கட்டளைக் கலித்துறை

இருந்தழை யா நின்ற பூம்பொழி லெண்ணூர் இறையவர்வேல்
பருந்தழை யாநின்ற மன்னர்குலத்தர் பனிவரைகாட்
டருந்தழை யாமி து கொண்டார்க்கு வாசமும் அற்புதமும்
தருந்தழை யா என்ற நல்லார்க்கு வேறு தழையில்லையே.