இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தாழிசை

திரையுறு முலகம் யாவையு மமைத்து
   சேண்டல மேத்துந்தெய் வீகன்
திகழ்தரு மாத னேவைசெய் பவத்தைச்
   சிதைத்திட வெனதுபா லுதித்து
மரையருள் ஞானம் வழுத்தியே மகிமேல்
   மாநவந் தனைபுரிந் திலங்க
மடையர்கள் சீறி மாசிலாப் பரனை
   மாவலு கயிறுகொண் டிறுக்கி
சரிரநைந் திடவே சவுக்குவார் கசையாற்
   சாற்றறு பதின்மரு மடிக்க
தலையின்முண் முடியைம் மூவடி சிலுவை
   தாங்கியே கொல்கதா மலைமே
லருவழி கடந்த சுதனைக்கண் டீரோ
   வன்புறும் ஜெருசலை நகரீர்!
ஆதிமக் யாச னறைந்தவர் சகமோ
   அந்தோயான் காணுமா றிதுவோ.