இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - உயிர்வருக்க மோனை

நிலமண்டில ஆசிரியப்பா.

அறமெலாந் திரண்ட அருளொரு வடிவன்
ஆருயிர்க் கிரங்குந் தாயினு மினியான்
இல்லறம் துறவற மெனப்புகல் கின்ற
ஈரறந் தம்மையும் ஓரறங் கண்டோன்
உலகெலாம் புரக்கும் ஒருவனுக் கமுதம்
ஊட்டியே புரந்த மாட்சியிற் சிறந்தோன்
எம்பெரு மாட்டியைத் தன்பெரு மாட்டியா
ஏந்து பூங் கொடியொடு வேய்ந்த பூங்கொடி யான்
ஐயந் தோற்றியோர் ஐயனிற் றெளிந்தோன்
ஒன்பது கணமுங் கும்பிடுங் கழலான்
ஓதுமென் குரையெலாந் தீதற முடிப்பான்
ஒளவிய மொழியஅவன் புக ழுரைமினே.