இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - கார்

கட்டளைக் கலித்துறை.

ஆடிய வேனிலுந் தண் பனிக் காலமு மாங்கொழியத்
தேடிய கார் வந்து மின்னும் வராததென் சிந்தனையோ?
நீடிய வாகை யுடையவெண் ணூரார் நினைவு தப்பி
வாடிய சென்னை மறந்தனரோ? என்ன வாய்மையிதே!