இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 8

மண்கொண்ட நின்னடியர் போல்துறவு பூண்டுனது 

மலரடித் தொண்டு புரியேன்; 

மணிமாலை கொண்டுனது திருநாம மோதவொரு 

மந்திரம் தானும் அறியேன் ; 

முன்கொண்ட மாசினை யகற்றித் திருந்தவொரு 

முயற்சியும் செய்ய நினையேன்;

முற்றிலுமிவ் வுலகையே பற்றிக் கிடந்தலையும் 

மூடனையும் உந்தன் மகவாய் 

தண்கொண்ட பேரருளி னால்புரந் தாட்கொளத் 

தயை கொண்ட தெய்வ மகளுன் 

தாளினை மறந்துலகில் வாழுமிப் பேதை போல் 

தாரணியில் யாரும் உளரோ? 

கண்கண்ட தெய்வமாய் வந்தடியர் தமையெலாம் 

கடைக்கணித் தாள வென்றே, 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!