இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 6

பற்றுடைய னாயுனது பாதம் பணிந்திலேன் 

பாரிலுன் மறை தனக்காய்ப் 

பலியான தொண்டரைப் பார்த்தும் அறிவுற்றிலேன் 

பாழுமுடல் பேணுதற்கே 

முற்றும் பெருங்கவலை கொண்டதல் லாலுக 

முடிவிலே சம்பவிக்கும்

முறைதா னுணர்ந்தும் உணராதவன் போலவே 

முழுமாயை யுற்றலைந் தேன்; 

மற்றுன் திருப்பதியில் வந்தடிய ரொடுமுனது 

மகிமையைக் கண்டு கொள்ளேன்; 

மாடாடு போலவே சீவித் திருக்குமென்

மதியையென் னென்று புகழ்வேன்? 

கற்றறிவி லாதவென் குற்றம் பொறுத்தெனைக் 

கைதூக்க வேண்டும் அம்மா! 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!