இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 4

வாணாளில் உன்வடிவு காணாத கண்களும், 

வாழ்த்தாத ஊத்தை வாயும், 

வணங்காத சென்னியும், இணங்காத நெஞ்சுமுன் 

வான்பதி புகாத தாளும்,

கோணாது நின்பணிகள் கொள்ளாத கைகளும், 

குறிதா னிடாத நுதலும், 

கொண்ட பழி காரன் நான்; எந்தவிதம் உன்னடியார் 

கூட்டத்தி லொருவன் ஆவேன்? 

பூணா யிலங்குமுன் மணிமாலை பூண்டுகுப் 

போதுமுன் னேவல் செய்தே 

புகுமடியர் தாளிலுறு புழுதிக்கும் நிகராத

புலையன் நான் உய்வ தெளிதோ! 

காணாம லொரு சிவிகை மீதூறும் அம்மையிவள் 

காணென்று கருத வந்தே 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!