இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 3

மருவுபொரு ளாசையொடு பெண்ணாசை யுங்கொண்டுன் 

மலரடி யினைத் துறந்தே 

மதிகெட் டலைந்தவன், மறைசற்று முணராது 

மாபாதகம் செய் தவன், 

குருவினுப தேசமும் கொள்ளா தவன், திருக்

கோவிலிற் புகுதா தவன், 

குறைதான் மிகுந்தவன், பழியே சுமந்தவன், 

கொடும்பவச் சுமை பொறாமல் 

இருவிழியி னீர்சொரிந் துனதுபத மலர் கழுவி 

என்புருகி நெக்கு விட்டே 

எண்ணாதும் எண்ணியே புண்ணாகினேன்; இந்த 

ஏழையென் துயர் களைகுவாய் 

கருதுமொரு குழி நீரினாற்பிளவை தீர்ந்திடக் 

கருணைசெய் தாண்ட கனியே! 

களிகொண்டு மிக்கபே ரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!