இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்காவலூர்த் திருப்பதிகம் - பதிகம் 1

உலகமிசை யிலகுதுய ரகலவும், புவிமாந்தர் 

உய்வுபெற் றே மகிழவும், 

உரிய துணை யாயடைக் கலந்தந்து காத்திடும் 

உயர்தவச் செல்வ மகளாய்

நிலவுபொழி கருணைவிழி திகழவும், இருபாத 

நிழலடைந் தவரை யாள 

நீட்டிய கரங்கள் நெறிகாட்டவும், உடுவின் முடி 

நின்றுசிர மீ தொளிரவும், 

பல திசையி னுறுமடியர் குலம் வந்து கூடவும், 

பக்தருன் புகழ்பா டவும், 

பரவிநின் றவர்குறைகள் இரவிமுன் பனிபோலப் 

பாரினில் அகன் றோடவும் 

கலகலெனும் ஒலிபெருகு காவிரியின் வட கரையில் 

கண்கவர் திருக்கோவிலில் 

களிக்கொண்டு மிக்கபேரளிகொண்டு நிலைகொண்டு 

காவலூர் வாழும் அனையே!