இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் அன்றாட வாழ்வில் இரட்சணியத்திற்கு மிக அவசியமான முக்கிய தேவத்திரவிய அனுமானங்கள்:

1. பாவசங்கீர்த்தனம், 2. திவ்விய நற்கருணை. 

பாவசங்கீர்த்தனம் செய்வதற்கான அவசியமும், சரியான முறையும்

பாவசங்கீர்த்தனமின்றி பாவ மன்னிப்பில்லை. சாவான பாவங்கள் சாதாரணமாக, பாவசங்கீர்த் தனத்தாலன்றி, வேறு எந்த விதத்திலும் மன்னிக்கப்படுவதில்லை. இது கத்தோலிக்க போதனை. ப்ரொட்டஸ்டாண்ட், பெந்தேகோஸ்தே சபைகளின் பாதிப்பால், இன்று கத்தோலிக்கரிடை யிலும் கூட இதற்கெதிரான பல கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மையான கத்தோலிக்கக் குருக் களிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதால் மட்டுமே சாவான பாவங்கள் மன்னிக்கப்பட முடியும்.

பலர் வாடிக்கைக்காகப் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்; பாவங்களை மனப்பாடமாக ஒப்பிக் கிறார்கள்; ஞாயிறன்று நன்மை வாங்குவதற்காக வழக்கப் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள். இதையெல்லாம் தவிர்த்து, சாவான பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியம் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல், தகுந்த ஆயத்தத்தோடும், நல்ல மனஸ்தாபத்தோடும் பாவசங்கீர்த்தனம் செய்வது அவசியம். இல்லையேல் பாவத்தைத் தவிர்க்கும் ஆன்ம பலம் நம்மிடம் சிறிதளவும் இருக்காது என்பதால், பாவங்களைத் தவிர்க்க நம்மால் கொஞ்சமும் இயலாது. 

திவ்விய நன்மை

இதிலும் வாடிக்கை கூடாது. நன்மை வாங்குவதற்கு முந்தின இரவில் ஜெபங்கள் மற்றும் தியானங்களின் மூலம் ஆத்துமத்தைத் தெய்வீக விருந்தாளியின் வருகைக்காகத் தயாரித்து வைக்க வேண்டும். அர்ச். குழந்தை சேசுவின் தெரேசம்மாளைப் போல, சேசுவுக்காக நம் ஆன்மாக்களை அலங்கரிக்கும்படி தேவமாதாவை அன்போடு அழைக்க வேண்டும். நல்ல ஆத்தும் சரீர ஆயத்தத் தோடு திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும். ஆண்டவர் நம் ஆத்துமத்தில் வந்த பின் குறைந்தது 15 நிமிடமாவது அவருக்கு ஆராதனையும், நன்றியறிந்த தோத்திரமும் செலுத்திக் கொண் டிருப்பது மிக முக்கியம். அவரை மிகுந்த வணக்கத்தோடும், ஆராதனையோடும் மாதாவிடம் அழைத்துச் சென்று, அவர்களிடம் அவரை ஒப்படைத்து, அவர்கள் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டிருப்பது இன்னும் மிகுந்த பலன் தரும். இவற்றைச் சரியாகச் செய்வோம் என்றால், மாபெரும் வரப்பிரசாதங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்வோம். ஆண்டவரும் நம் இருதயங்களைத் தம் திரு இருதயத்திற்கு ஒத்தவையாக மாற்றுவார்.. 

சுத்தபோசனம்

இக்காலத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், தபசு, நோன்பு நாட்களிலும் கூட, சலேத்தில் மாதா கூறியது போல, மக்கள் மாம்சத்தைத் தேடி நாய்களைப் போல் அலைகிறார்கள். போசனப்பிரியம் மற்ற எல்லாப் பாவங்களுக்கும் ஒரு தூண்டுகோலாக செயல்படுகிறது. மாதாவின் பிள்ளை களாகிய நாமாவது வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், திருச்சபையால் குறிக்கப் பட்டுள்ள சுத்தபோசன நாட்களிலும் மாம்சத்தை அடியோடு விலக்குவோமாக.

இன்று வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்யும் வழக்கம் வந்து விட்டது. கத்தோலிக்கப் பாரம்பரியம் திருச்சபையில் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் இது கற்பனைக்கும் எட்டாத தீமையாக இருந்தது. ஏனெனில் கிறீஸ்துநாதர் நமக்காகப் பலியானது வெள்ளிக்கிழமை என்பதால் எல்லா வெள்ளிக்கிழமைகளையும் சுத்த போசன நாட் களாகத் திருச்சபை அறிவித்திருந்தது. இன்று அது மாறி விட்டதால், வெள்ளிக்கிழமைத் திருமணங்கள் சுத்தபோசனக் கட்டளையை (மாமிச உணவை விலக்குதல்) வெளிப்படையாக மீறும் செயலாக ஆகியுள்ளன. நாமாவது இந்தத் தீமையைத் தவிர்க்கப் பிரயாசைப்படுவோம்.

அடுத்தது ஞாயிறு கடவுளுக்கு மட்டுமே உரியது. இந்தப் பரிசுத்தமான நாளில் கடவுளை மகிமைப்படுத்துவதும், சரீரப் பிரயாசையான வேலைகளிலிருந்து ஓய்ந்திருப்பதும் நம் கடமை. இந்நாளில் திருமணப் பூசையையோ, அடக்கப் பூசையையோ திருச்சபை உறுதியாகத் தவிர்த்து வந்தது. ஆனால் 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு, இந்தப் பரிசுத்த நாள் மற்ற நாட்களைப் போலவே சாதாரண நாளாகவும், கேளிக்கைகளுக்குரிய நாளாகவும் பாவிக்கப்படுகிறது. எனவே, மாதாவின் பிள்ளைகளாகிய நாமாவது ஞாயிற்றுக்கிழமையைக் கடவுளின் நாளாகப் பாவித்து, திருமணம் போன்ற விசேஷங்களைத் தவிர்த்து விட்டு, அந்நாளை அவருக்கு மட்டுமாக ஒப்புக் கொடுத்து, அவருக்குப் பிரியமான காரியங்களை மட்டும் செய்யக் கருத்தாயிருப்போமாக.