ஜோசுவாவின் திருவாகமம் - முகவுரை

மகா அருமை பொருந்திய இந்த வேதாகமத்தை இயற்றி எழுதிய ஆசாரியர் ஜோசுவா பிரபுதானென்று வேதபாரகர் உத்தேசிக்கின்றமையாலும், மோயீசன் இறந்த நாள் முதல் அவருடைய பிரதிநிதியாகக் கர்த்தரால் நேமிக்கப்பட்ட ஜோசுவாவின் ஆளுகை காலத்தில் தேவ பிரசை விஷயத்திலே நடந்தேறின பிரதான வர்த்தமானங்கள் அதில் விபரமாய் எழுதியிருக்கின்றமையாலும், மேற்படி திருப்புத்தகத்திற்கு ஜோசுவா என்னும் பேர் உண்டாயிற்று. நல்ல கிறீஸ்துவர்கள் யாவரும் இன்றியமையாத இந்த வேதாகமத்தைப் பக்தியோடு வாசித்து இன்புறுவாரன்றி ஞானப்பயனையும் அடைவரென்பதற் கையமில்லை.