சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 50

ஒனியாஸின் மகனான சீமோன் வாழ்த்தப்படுதல்.

1. ஒனியாஸின் மகனும், பெரிய குருவாயிருந்தவருமான சீமோன்; அவர் தமது வாழ்நாளில் இல்லத் தைத் தாங்கினார்; தம் நாட்களில் தேவாலயத்தைப் பலப்படுத்தினார்.

2. தேவாலயத்தின் அஸ்திவாரம் அவரால் போடப்பட்டது; தேவாலயத்தின் இரட்டைக் கட்டிடங்களும் உயர்ந்த மதில்களும் அவரால் செய்யப்பட்டன.

3. அவருடைய காலங்களில் தண்ணீர்க் கிணறுகள் நிரம்பி வழிந்தன; அவை அளவுக்கு அதிகமாக கடலைப் போல நிரப்பப்பட்டன.

4. அவர் தம் நாட்டின்மீது அக்கறை கொண்டிருந்தார்; அதை அழிவினின்று விடுவித்தார்.

5. அவர் நகரத்தை விரிவாக்குவதில் வெற்றி பெற்றார்; மக்களோடு உரையாடுவதில் மகிமையடைந்தார்; ஆலயத்தினுடையவும், மண்டபத்தினுடையவும் நுழைவாயிலை விரிவாக்கினார்.

6. மேகத்தின் மத்தியில் உதயகால நட்சத்திரத்தைப் போலவும், பூரண நிலவைப்போலவும் பிரகாசித்தார்.

7. மிகுந்த ஒளிவீசும் சூரியனைப் போல் அவரும் கடவுளின் ஆலயத் தில் ஒளிவீசினார்.

8. பிரகாசமுள்ள மேகங்களில் ஒளி தரும் வானவில்லைப்போலவும், வசந்தகாலத்தின் ரோஜா மலரைப் போலவும் நீர்க்கரையிலுள்ள லீலி யைப் போலவும், கோடை காலத் தில் இனிய வாசனை தரும் தூபத்தைப்போலவும் 

9. பிரகாசமான அக்கினியைப் போலவும், அக்கினியில் எரியும் தூபத்தைப் போலவும்,

10. கெட்டியாய்ச் செய்யப்பட்டு சகலவித விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட பொற்பாத்திரத் தைப்போலவும்,

11. அவர் மகிமையின் ஆடையை அணிந்துகொண்டபோதும், முழு அதிகாரத்தால் உடுத்தப்பட்ட போதும், துளிர்விடும் ஒலிவ மரத் தைப் போலவும், உயர்ந்த இடங் களில் வளரும் சைப்ரஸ் மரத்தைப் போலவும் அவர் காணப்பட்டார்.

12. அவர் பரிசுத்த பீடத்தில் ஏறியபோது தமது பரிசுத்ததனத்தின் உடுப்புக்கு மகிமை தந்தார்.

13. அவர்தாமே பீடத்தின் பக்கத் தில் நின்றுகொண்டு குருக்களின் கையினின்று பலியின் பாகங்களைப் பெற்றுக்கொண்டபோதும் அப்படியே செய்தார். அவரைச் சுற்றிலும் அவரது சகோதர்களின் வளையம் இருந்தது. அவர் லீபான் மலையில் நடப்பட்ட கேதுரு மரத்தைப் போல் இருந்தார்.

14. பனை மரங்களின் கிளைகளைப் போல் அவர்கள் அவரைச் சுற்றி நின்றார்கள். ஆரோனின் புதல்வர்கள் எல்லோரும் அப்படியே தங்கள் மகிமையில் அவரைச் சுற்றி நின்றார்கள்.

15. இஸ்றாயேலின் முழுச் சபைக்கு முன்பாக ஆண்டவரின் காணிக்கை, அவர்களுடைய கைகளில் இருந்தது; மகா உன்னத அரசரின் காணிக் கையை மகிமைப்படுத்தும்படி, பீடத்தின்மீது தமது பணியை அவர் முடித்தார்.

16. பான பலியின்மீது அவர் தம் கையை நீட்டி, திராட்சையின் இரத்தத்தை ஒப்புக்கொடுத்தார்.

17. மகா உன்னத அரசருக்குப் பீடத்தின் அடியில் ஒரு தெய்வீக வாசனையை ஊற்றினார்.

18. அப்போது ஆரோனின் புதல் வர்கள் பேரொலியிட்டு வெள்ளி யினால் அடிக்கப்பட்ட எக்காளங் களை ஊதினார்கள்; கடவுளுக்கு முன்பாக ஞாபகத்திற்காகப் பெருஞ் சப்தம் கேட்கப்படச் செய்தார்கள்.

19. அப்போது சகல சனங்களும் ஒன்றாக விரைந்து வந்து, தங்கள் தேவனாகிய ஆண்டவரை ஆராதிக் கவும், மகா உன்னதரான சர்வ வல்லபரிடம் ஜெபிக்கவும், பூமியில் முகங்குப்புற விழுந்தார்கள்.

20. பாடகர்கள் தங்கள் குரல்களை உயர்த்தினார்கள்; பெரிய தேவால யத்தில் இனிய இசையின் சப்தம் அதிகரிக்கப்பட்டது.

21. ஆண்டவர் ஆராதிக்கப்படுவது முழுமை பெறும்வரை, மக்கள் ஜெபத்தில் மகா உன்னத ஆண்டவரை மன்றாடினார்கள், தங்கள் ஊழியத்தை அவர்கள் நிறைவேற்றி முடித்திருந் தார்கள்.

22. அப்போது அவர் இறங்கி வந்து, கடவுளுக்குத் தமது உதடு களால் மகிமையளிக்கும்படி யாகவும், அவரது திருநாமத்தில் தாம் மகிமை பாராட்டும்படியாகவும் தமது கரங்களை இஸ்றாயேல் மக்க ளின் முழுச் சபை மீதும் விரித்தார்.

23. கடவுளின் பலத்தைக் காட்ட வேண்டி அவர் மீண்டும் ஜெபித்தார்.

24. பூமியெங்கும் மகத்தான காரியங்களைச் செய்துள்ளவர்களும், நமது தாயின் உதரத்திலிருந்து நமது நாட்களை அதிகரித்தவர்களும், தம் இரக்கத்திற்கேற்றபடி நம்மை நடத் தியவர்களுமாகிய அனைவருடை யவும் கடவுளை நோக்கி இப்போது ஜெபியுங்கள்.

25. அவர் நமக்கு இருதய சந்தோஷத்தைத் தந்தருள்வாராக; நமது காலத்தில் இஸ்றாயேலில் என்றென்றும் சமாதானம் இருக்கும் படி செய்வாராக.

26. தமது நாட்களில் நம்மை இரட் சிக்கும்படி, கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கும் என்று இஸ்ரா யேல் நம்பும்படி அவர் செய்வாராக.

27. இரு மக்களினங்களை என் ஆத்துமம் அருவருக்கிறது; நான் வெறுக்கும் மூன்றாவது, ஒரு மக்களினமே அல்ல. 

28. அவர்கள் யாரெனில் சேயிர் மலைமீது அமர்ந்திருப்பவர்களும், பிலிஸ்தியரும், சிக்கேமில் வசிக்கும் மூடத்தனமுள்ள மக்களினமும் ஆவர்.

29. தன்னிருதயத்திலிருந்து ஞானத் தைப் புதுப்பித்த ஜெருசலேம் வாசி யான சீராக்கின் மகனான சேசு, இந்தப் புத்தகத்தில் ஞானத்தினுடை யவும் நற்படிப்பினையினுடைவும் போதகத்தை எழுதினார்.

30. இந்த நற்காரியங்களில் நல்ல பரிச்சயமுள்ளவன் பாக்கியவான்; தன் இருதயத்தில் அவற்றை வைத்துக் காப்பாற்றுகிறவன் எப்போதும் ஞானமுள்ளவனாயிருப்பான்.

31. ஏனெனில், அவன் அவற்றைச் செய்தால் எதைச் செய்யவும் பலமுள் ளவன் ஆவான்; ஏனென்றால் கடவுளின் ஒளி அவனுடைய காலடிகளை வழிநடத்துகிறது.