இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். குழந்தை தெரேசம்மாள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 பரித்தியாகங்கள் வரை செய்வாள்.

அ. தாகமெடுத்து, தண்ணீர் அருந்தும் தேவை வரும்போது, உடனே நீர் அருந்தாமல், சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்துவாள்.

ஆ. மடத்துத் தாயாரை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. மனதால் முறுமுறுத்ததுமில்லை. எல்லாவற்றையும் பரித்தியாகமாக ஏற்றுக்கொண்டு, அவற்றை ஆண்டவரின் பாடுகளோடு ஒன்றித்து ஒப்புக்கொடுத்து வந்தாள்.

இ. மிகத் தாழ்மையான வேலைகளையும் கூட புன்முறுவலோடு செய்து வந்தாள். கொடுக்கப்பட்ட வேலையை சிரமேற்கொண்டு, சரியாய்ச் செய்து முடிப்பாள்.

ஈ. மற்ற சகோதரிகள் தன்னை ஏளனமாய்ப் பேசினால் பொறுத்துக்கொள்வாள்.

உ. மடத்தின் தரித்திரத்தை மனதார, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, எளிய, சுவையற்ற உணவுகளை எந்த முறைப்பாடுமின்றி உண்டு வந்தாள். பிறர் சாப்பிட்டது போக, மீதமுள்ள உணவுப் பண்டங்களை மட்டும் உண்பதில் ஆர்வம் காட்டினாள்.

ஊ. காசநோயால் வந்த கடும் வேதனையை மிகப் பொறுமையாய் ஏற்றுக்கொண்டாள்.

எ. கடுகடுப்போ, எரிச்சலோ அவளிடம் ஒரு போதும் இருந்ததில்லை. தன் மடத்து சகோதரிகளுக்கு அன்பு காட்டுவதைத் தவிர வேறு எதுவும் அவளிடமிருந்து வெளிப்பட்டதில்லை.

ஏ. தேவாலய பீடத்தை மிக அழகாகவும், நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் அவள் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தியதில்லை.