சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 49

ஜோசியாஸை வாழ்த்துதல், ஜெருசலேம் அழிக்கப்பட்டது.

1. ஜோசியாஸின் ஞாபகம், வாசனைத் திரவியங்களைக் கூட்டுகிறவனால் செய்யப்பட்ட இனிய நறுமணமுள்ள தைலத்தைப் போன்றது.

2. அவரது நினைவு ஒவ்வொரு வாயிலும் உள்ள தேனைப் போல் இனிமையாயும், திராட்சை இரச விருந்தில் இசைக்கப்படும் இசையையும் போலவும் இருக்கிறது.

3. மக்கள் மனந்திரும்பித் தவம் செய்யத் தூண்டும்படி அவர் கடவுளால் நியமிக்கப்பட்டார்; அக்கிரமத்தின் அருவருப்புகளை அவர் அகற்றி விட்டார்.

4. அவர் ஆண்டவர் வழியாகத் தம் இருதயத்தைச் செலுத்தினார்; பாவிகளின் நாட்களில் தேவ பக்தியை உறுதிப்படுத்தினார்.

5. தாவீது, எசெக்கியாஸ், ஜோசி யாஸ் இவர்களைத் தவிர, எல்லோ ரும் பாவத்தைக் கட்டிக்கொண் டார்கள்.

6. ஏனெனில், யூதாவின் அரசர்கள் உந்நத கடவுளின் கட்டளையைக் கைவிட்டார்கள். தெய்வபயத்தைப் புறக்கணித்தார்கள்.

7. ஆகவே அவர்கள் தங்கள் இராச்சியத்தை மற்றவர்களுக்கும், தங்கள் மகிமையை அந்நிய மக்க ளினம் ஒன்றுக்கும் கையளித்தார்கள்.

8. அவர்கள் தெரிந்துகொள்ளப் பட்ட பரிசுத்த நகரத்தைச் சுட்டெரித் தார்கள்; ஜெரேமியாஸ் முன்னுரைத்த படி அதன் வீதிகளைப் பாழடையச் செய்தார்கள்.

9. தாய் உதரத்திலேயே தீர்க்க தரிசியாக அர்ச்சிக்கப்பட்டு இடிக்க வும், பிடுங்கவும், அழிக்கவும், மீண்டும் கட்டவும், புதுப்பிக்கவும் நியமிக்கப் பட்ட அவரைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

10. எசெக்கியேல்தான் அந்த மகிமையுள்ள காட்சியைக் கண்டார். அது ஞானாதிக்கரின் இரதத்தில் அவருக்குக் காட்டப்பட்டது.

11. ஏனெனில், மழையின் உருவில் அவர் எதிரிகளையும் சரியான வழிகளைக் காட்டியவர்களுக்கு நன்மை செய்வதையும் குறித்துக் காட்டினார்.

12. பன்னிரு தீர்க்கதரிசிகளின் எலும்புகளும் தங்கள் இடத் திலிருந்து துள்ளியெழுவனவாக; ஏனெனில் அவர்கள் யாக்கோபைப் பலப்படுத்தினார்கள், பலமான விசுவாசத்தால் தங்களை இரட்சித் தார்கள்.

13. செரோபாபேலை எப்படிப் புகழ்ந்து கொண்டாடுவோம்? ஏனெனில் வலது கையிலுள்ள மோதி ரத்தைப்போல் அவர் இருந்தார்.

14. ஜெசேதெக்கின் மகனான சேசுவும் இப்படியே இருக்கவில்லையா? அவர்களது நாட்களில் அவர் வீட்டைக் கட்டி, ஆண்டவருக்குப் பரிசுத்த ஆலயத்தை நிர்மாணித்தார், நித்திய மகிமைக்கு ஆயத்தம் செய்தார். 

15. நெகேமியாஸும் நீண்ட காலம் நினைவுகூரப்படுவாராக; அவர் இடிக்கப்பட்ட நம் மதில்களை நமக் காகக் கட்டியெழுப்பினார்; கதவு களையும், தாழ்ப்பாள்களையும் ஏற்படுத்தினார்; நமது வீடுகளை அவர் திரும்பக் கட்டினார்.

16. ஏனோக் என்பவரைப்போலப் பூமியில் எவனும் பிறக்கவில்லை; ஏனெனில் அவரும் பூமியினின்று எடுத்துக்கொள்ளப்பட்டார்.

17. தன் சகோதரர்களின் அரசராக வும், தம் குடும்பத்தின் ஆதரவாக வும், தம் சகோதரர்களை ஆண்டு நடத்துபவராகவும், மக்களின் உறுதி யுள்ள பிணைப்பாகவும் பிறந்த யோசேப்பைப் போலப் பிறந்த வனும் பூமியில் ஒருவனுமில்லை.

18. அவரது எலும்புகள் சந்திக்கப் பட்டன; சாவுக்குப் பின் அவை தீர்க்கதரிசனம் உரைத்தன.

19. சேத்தும், சேமும் மனிதரி டையே மகிமையடைந்தார்கள்; ஆதியில் ஆதாம் ஒவ்வொரு ஆத்து மத்திற்கும் மேலானவராக இருந்தார்.