சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 45

மோயீசனும், ஆரோனும் வாழ்த்தப்படுதல்

1. மோயீசன் சர்வேசுரனாலும், மனிதராலும் நேசிக்கப்பட்டவராக இருந்தார்; அவருடைய ஞாபகம் ஆசீர்வதிக்கப் பட்டதாயிருக்கிறது.

2. மகிமையிலுள்ள அர்ச்சியசிஷ் டவர்களோடு அவரைச் சமமாக்கி னார்; எதிரிகளின் பயத்தில் அவரை மகிமைப்படுத்தினார்; அவருடைய வார்த்தைகளால் வாதைகள் நின்று போகச் செய்தார்.

3. அரசர்களுக்கு முன்பாக அவரை மகிமைப்படுத்தினார், தமது மக்க ளுக்கு முன்பாக அவருக்குக் கட்டளை களைத் தந்தார்; அவருக்குத் தமது மகிமையைக் காண்பித்தார்.

4. தமது விசுவாசத்திலும், சாந்த குணத்திலும் அவரை அர்ச்சித்தார். சகல மாம்சத்தினின்றும் அவரைத் தெரிந்துகொண்டார்.

5. அவருக்குச் செவிகொடுத்தார்; அவருடைய குரலைக் கேட்டார்; அவரை மேகத்திற்குள் கூட்டிப் போனார்.

6. அவர் யாக்கோபுக்குத் தமது உடன்படிக்கையையும், இஸ்ராயே லுக்குத் தமது தீர்மானங்களையும் கற்பிக்கும்படியாக, அவர் தமது திருமுகத்திற்கு முன்பாக, அவருக்குக் கட்டளைகளையும், வாழ்வின் திருச் சட்டத்தையும், போதகத்தையும் தந்தருளினார். 

7. அவரது சகோதரன் ஆரோனை யும் உயர்த்தி, லேவி கோத்திரத்தில் அவருக்கு ஒப்பானவராக்கினார்.

8. அவரோடு நித்திய உடன் படிக்கை செய்துகொண்டார்; மக்க ளினத்தின் குருத்துவத்தை அவருக்கு அளித்தார்; மகிமையில் அவரைப் பாக்கியவானாக்கினார்.

9. மகிமையின் இடைக்கச்சை யால் அவரை வரிந்து கட்டினார்; மகிமையின் வஸ்திரத்தால் அவரை உடுத்தினார்; மகத்துவமுள்ள ஆடை யால் அவருக்கு முடி சூட்டினார்.

10. பாதம் வரை தொங்கும் அங்கி யும், குறுங்கால் சட்டையும் எபோத் தையும் அவருக்கு அணிவித்தார்; அவரது உடலைச் சுற்றிலும் பல சிறு பொன் மணிகளைக் கட்டினார்.

11. தமது மக்களின் மக்களுடைய ஞாபகத்திற்காக, அவர் போகும் போது சத்தம் எழுப்பவும், தேவால யத்தில் கேட்கக் கூடிய ஓசை எழுப் பவும் இந்த மணிகளைக் கட்டினார்.

12. தீர்மானமும் சத்தியமுமுள்ள ஞானமுள்ள மனிதனின் பின்ன லாடையாகிய, பொன், நீல, ஊதா நூல்களால் நெய்யப்பட்ட பரிசுத்த உடையை அவருக்குக் கொடுத்தார்.

13. இந்த வேலையானது இஸ்றா யேலின் கோத்திரங்களின் எண்ணிக் கைப்படி, ஒரு ஞாபகார்த்தமாக, உடைகள் வடிவமைக்கும் கலை ஞனின் கைவேலையாக, முறுக்கப் பட்ட செந்நிற இழைகளால் பின்னப் பட்டு, இரத்தினக் கல் இழைக்கிறவனால் பொன்னில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஆடையை அவருக்குத் தந்தார்.

14. மேலும் பரிசுத்தனம் செதுக்கப்பட்டிருந்ததும், பதவியின் மகத்துவமுள்ள ஆபரணமாய் இருந்ததும், அதிகாரத்தைக் குறிக்கும் வேலையாயிருந்ததும், தன் அழகால் கண்களுக்கு இன்பம் தருவதுமான ஒரு பொன்முடியையும் அவருக்குத் தந்தார். 

15. ஆதியிலிருந்தே அவரை விட அழகானவன் யாரும் இருக்கவில்லை.

16. அதை அந்நியன் ஒருவனும் ஒருபோதும் அணிந்ததில்லை; ஆனால் அவர் மக்களும் பேரப் பிள்ளைகளும் மாத்திரமே எக்காலத் திலும் அதை அணிந்திருந்தார்கள்.

17. அவருடைய பலிகள் நாள் தோறும் நெருப்பால் சுட்டெரிக்கப் பட்டன.

18. மோயீசன் அவருடைய கைகளைப் பரிசுத்த தைலத்தால் நிரப்பி அவரை அபிஷேகம் செய்தார்.

19. இது குருத்துவ அலுவலை நிறைவேற்றவும், புகழ்ச்சியைக் கொண்டிருக்கவும், அவருடைய பெயரால் அவரது மக்களினத்தை மகிமைப்படுத்தவும், பரலோக நாட் களைப் போல, அவரோடும் அவரு டைய வித்தோடும் நித்திய உடன் படிக்கையாக ஏற்படுத்தப்பட்டது.

20. கடவுள் தம் மக்களினத் தாரோடு சமாதானம் செய்து கொண் டதன் ஞாபகார்த்தமாக, சர்வேசுர னுக்குப் பலியையும், தூபத்தையும், நல்ல சுகந்தத்தையும் ஒப்புக் கொடுக்கவும், உயிர் வாழ்பவர் களாகிய சகல மனிதர்களிலும் அவரைத் தேர்ந்து கொண்டார்.

21. அவர் யாக்கோபுக்குத் தமது சாட்சியங்களைக் கற்பிக்கும்படியாகவும், இஸ்ராயேலுக்குத் தமது திருச்சட்டத்தில் ஒளியைத் தரும்படி யாகவும் அவருக்கு அதிகாரம் தந்தார். 

22. ஏனெனில், அந்நியர் அவருக்கு விரோதமாய் நின்றார்கள்; பொறாமையால் தாத்தானோடும், அபிரோனோடும், தங்கள் கோபத்தில் கோரே என்பவனின் கூட்டத்தோடும் இருந்தவர்கள் வனாந்தரத்தில் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.

23. ஆண்டவராகிய கடவுள் அதைக் கண்டார்; அது அவருக்குப் பிரியப்படவில்லை; அவரது கோப உக்கிரத்தில் அவர்கள் சுட்டெரிக்கப் பட்டார்கள்.

24. அவர் அவர்கள் மீது அற்புதங் களை நிகழ்த்தி, தீச்சுவாலை அவர் களை விழுங்கச் செய்தார்.

25. அவர் ஆரோனின் மகிமையை அதிகரித்து, அவருக்கு ஓர் உரிமைச் சொத்தைக் கொடுத்து, பூமியின் தானிய மிகுதியின் முதற்பலன்களை அவருக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

26. முதலில் அவர்கள் திருப்தி யடையும்படி அப்பத்தை ஆயத்தம் செய்தார்; ஏனெனில், அவருக்கும் அவர் வித்துக்கும் ஆண்டவரால் தரப்பட்டிருந்த அவருடைய பலி களையும் அவர்கள் உண்பார்கள்.

27. ஆனால் நாட்டு மக்களி டையே அவர் எதையும் சுதந்தரித் துக் கொள்ள மாட்டார்; மக்களினத் தார் நடுவில் அவருக்குப் பங்கில்லை; ஏனெனில் அவரே தம் பாகமாகவும், உரிமைச் சொத்தாகவும் இருக்கிறார்.

28. எலேயாசாரின் மகனான பினேயஸ் என்பவர், தேவ பயத்தில் அவரைக் கண்டுபாவித்ததால் மகிமையில் மூன்றாவதாக இருக் கிறார்.

29. மக்களின் அவமானமுள்ள வீழ்ச்சியில் அவர் எழுந்து நின்றார்; தமது ஆத்துமத்தின் நன்மைத்தனத் திலும், சுறுசுறுப்பிலும் அவர் இஸ்ரா யேலுக்காகக் கடவுளின் கோபத்தை சாந்தப்படுத்தினார்.

30. ஆகையால், அவரும் அவருடைய வித்தும் என்றென்றும் குருத்துவ மகிமையைக் கொண்டிருக்கும்படியாக, அவர் தேவாலயத்தினுடையவும், தம் மக்களினுடை யவும் அதிகாரியாயிருக்குமாறு ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்; 

31. யூதா கோத்திரத்தின் ஜெஸ்ஸே யின் மகனான தாவீதரசர், நீதியில் தம் மக்களுக்குத் தீர்ப்பிடும்படி, நம் இருதயங்களுக்கு ஞானத்தைத் தரும் படியாகவும், அவர்களது நற்காரி யங்கள் அழிக்கப்படாதபடியும், அவை நித்திய நாட்டில் அவர்களது மகிமையாக ஆக்கப்படும்படியாக வும் ஆண்டவர் அவரோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்; அவருக்கும் அவர் சந்ததிக்கும் ஓர் உரிமைச் சொத்தைத் தந்தருளினார்.