சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 44

பிதாப்பிதாக்களையும், தீர்க்கதரிசிகளையும், அரசர்களையும் புகழுகிறார்.

1. இப்போது புகழ்பெற்ற மனிதர்களையும் நமது பிதாக்களையும் அவர்களுடைய சந்ததியில் போற்றிப் புகழ்வோம்.

2. ஆதியிலிருந்தே ஆண்டவர் தமது மகத்துவமுள்ள வல்லமையின் வழியாக மிகுந்த மகிமையுள்ளவர்களைப் படைத்திருக்கிறார்.

3. அப்படிப்பட்டவர்கள் தங்கள் ஆளுகைகளில் ஆட்சி செலுத்தினார்கள்; மிகுந்த வலிமையுள்ள மனிதர்களாயிருந்தார்கள், ஞானத்தால் நிரப்பப்பட்டிருந்தார்கள். தீர்க்கதரிசனங்களில் தீர்க்கதரிசிகளின் மகத்துவத்தை வெளிப்படுத்தினார்கள். 

4. தங்கள் காலத்து மக்களை ஆண்டு நடத்தினார்கள்; ஞானத்தின் பலத்தைக்கொண்டு மக்களுக்கு மிகப் பரிசுத்தமான வார்த்தைகளில் போதித்தார்கள்.

5. அப்படிப்பட்டவர்கள் தங்கள் திறமையால் இசையின் ஸ்வரங்களைக் கண்டுபிடித்து, வேதாகம சங்கீதங் களை வெளியிட்டார்கள். 

6. புண்ணியத்தில் செல்வந்தர் களாகவும், அழகியலின் தன்மையை ஆராய்பவர்களுமாயிருந்தார்கள்; தங்கள் இல்லங்களில் சமாதானமாய் வாழ்ந்தார்கள்.

7. இவர்கள் எல்லோரும் தங்கள் சந்ததிகளில் மகிமைபெற்றிருக் கிறார்கள்; தங்கள் நாட்களில் இவர்கள் புகழப்பட்டார்கள்.

8. அவர்களிடமிருந்து பிறந்தவர்கள், தங்கள் புகழ்ச்சிகள் எடுத்துரைக்கப் படும்படியாக ஒரு நற்பெயரை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

9. நினைவுகூரப்படாத சிலர் இருக் கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் இருந்திராதவர்களைப்போல ஒழிந்து போனார்கள்; அவர்களும், அவர் களோடு அவர்களது பிள்ளைகளும் ஒருபோதும் பிறந்திராதவர்களைப் போல் ஆனார்கள்.

10. ஆனால் இவர்கள் இரக்கமுள்ள மனிதர்களாக இருந்தார்கள், இவர் களுடைய பக்திக்குரிய செயல்கள் மங்கி மறைந்து போகவில்லை.

11. அவர்களுடைய சந்ததியில் நற்காரியங்கள் தொடர்கின்றன.

12. அவர்களுடைய சந்ததி ஒரு பரிசுத்த உரிமைச் சொத்தாயிருக் கிறது; அவர்களது சந்ததி உடன்படிக் கைகளில் நிலைகொண்டது.

13. அவர்கள் நிமித்தமாக அவர் களது பிள்ளைகளும் சதாகாலத் திற்கும் நிலைத்திருப்பார்கள்; அவர்களது சந்ததியும், அவர்களது மகிமையும் கைவிடப்படாது.

14. அவர்களது சரீரங்கள் சமாதா னத்தில் அடக்கம்பண்ணப்பட்டன; அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறையாய் ஜீவித்திருக்கும்.

15. மக்கள் தங்கள் ஞானத்தைக் காட்டுவார்களாக, பரிசுத்த சபை அவர்களது புகழ்ச்சியை அறிக்கை யிடுவதாக.

16. ஏனோக் கடவுளைப் பிரியப் படுத்தினார்; மக்களினங்களுக்குத் தவத்தைப் போதிக்கும்படியாக, அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

17. நோவே உத்தமராகவும், நீதிமா னாகவும் காணப்பட்டார்; தேவகோபத்தின் காலத்தில் அவர் சமாதான பந்தனமானார்.

18. ஆனதால் பெருவெள்ளம் வந்த போது மிகச் சிலர் மட்டுமே பூமியில் விடப்பட்டார்கள்.

19. மனிதர் பெருவெள்ளத்தால் இனி அழிக்கப்படுவதில்லை என்று அவரோடு உலகின் உடன்படிக் கைகள் செய்துகொள்ளப்பட்டன.

20. அபிரகாம் திரளான மக்களினங் களின் பிதாப்பிதாவாயிருந்தார்; மகிமையில் அவருக்கு ஒப்பான ஒரு வரும் காணப்பட்டதில்லை; அவர் உன்னத தேவனின் திருச்சட்டத்தை அனுசரித்தார்; அவருடன் உடன் படிக்கையிலிருந்தார்.

21. அவர் தமது சரீரத்தில் உடன் படிக்கையை ஏற்படுத்தினார்; சோதனையில் பிரமாணிக்கராய்க்  காணப்பட்டார்.

22. ஆகையால் கடவுள் ஒரு வாக்குத் தத்தத்தால் அவருடைய சந்ததியில் அவருக்கு மகிமையளித்தார். அவர் பூமியின் புழுதியைப போல் அவரது சந்ததி பெருகும் என்றும்,

23. நட்சத்திரங்களைப்போல அவரது சந்ததியை உயர்த்துவதாக வும், ஒரு கடலினின்று மற்றோர் கடல்வரைக்கும், நதியினின்று பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர்கள் பூமி யைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றும் வாக்குத்தத்தம் பண்ணி னார்.

24. இவ்வாறே ஈசாக்கிடமும், அவரது தந்தை அபிரகாமின் பொருட்டு அவர் செய்தருளினார்.

25. சகல மக்களினங்களின் ஆசீர் வாதத்தையும் ஆண்டவர் அவருக்குத் தந்தார், யாக்கோபின் சிரசின்மேல் தமது உடன்படிக்கையை உறுதிப் படுத்தினார்.

26. தம்முடைய ஆசீர்வாதங்களில் அவர் அவரை அங்கீகரித்தார்; அவருக்கு ஓர் உரிமைச் சொத்தைத் தந்தார்; பன்னிரண்டு கோத்திரங் களில் அவருடைய பாகத்தைப் பிரித் தார்.

27. மாம்சம் அனைத்தினுடையவும் கண்களில் தயவைக் கண்டடைந்த இரக்கத்தின் மனிதர்களை அவருக் காகக் காப்பாற்றினார்.