சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 41

இன்ப சுகத்தில் வாழ்பவர்களுக்கு மரணம் கசப்பாயிருக்கின்றது.

1. ஓ! மரணமே! தன் செல்வங்களில் சமாதானத்தைக் கொண்டிருக்கும் மனிதனுக்கு உன் நினைவு எவ்வளவு கசப்பாயிருக்கிறது!

2. இளைப்பாற்றியில் இருப்பவனும், எல்லாக் காரியங்களிலும் தன் வழிகளில் செழிப்புள்ளவனும், என்றாலும் உணவு உட்கொள்ளக் கூடியவனாயிருப்பவனுமான மனிதனுக்கு மரணம் எவ்வளவோ கசப்பானது.

3. ஓ! மரணமே! வறுமையுள்ள மனிதனுக்கும், பலம் குறைந்தவனுக்கும் உன் தீர்ப்பு வரவேற்புக் குரியதாயிருக்கிறது.

4. வயதில் தளர்ந்தவனும், சகலத்திலும் கவலையுள்ளவனும், பொறுமையை இழக்கிற நம்பிக்கையற்ற மனிதனும் அதை வரவேற்கிறான்..

5. சாவின் தீர்ப்புக்கு அஞ்சாதே; உனக்கு முன்னிருந்தவையும், உனக்குப் பிறகு வரப்போகிறவற் றையும் நினைத்துக்கொள்; இந்தத் தீர்ப்பு சகல மனிதருக்குமே ஆண்டவ ரால் விதிக்கப்பட்டது.

6. நல்லதாயிருக்கிற உன்னத கடவுளின் பிரியப்படி உனக்கு நடக் கப் போவதென்ன? பத்து, நூறு, அல்லது ஆயிரம் வருஷங்கள் ஜீவித் தாலும் உனக்கு ஆகப்போவதென்ன?

7. மரித்தவர்கள் நடுவே சீவியத் தின் குற்றஞ்சாட்டுதலில்லை.

8. பாவிகளின் பிள்ளைகள் அருவருப்பின் பிள்ளைகள் ஆகி றார்கள். அவபக்தியாளரின் வீடு களின் அருகே நின்று உரையாடுபவர் களும் அப்படியே ஆகிறார்கள்.

9. பாவிகளின் மக்களின் வாரி சுரிமை அழிந்துபோகும், அவர் களுடைய சந்ததியில் தீராத நிந்தை நிலைத்திருக்கும்.

10. தீயவனான தந்தையைப் பற்றிப் பிள்ளைகள் முறையிடு கிறார்கள்; ஏனெனில் அவனால் அவர்கள் நிந்தைக்கு ஆளாகிறார்கள்.

11. உந்நத ஆண்டவரின் கட்டளை யைக் கைவிட்டுவிட்ட அவபக்தி யாளர்களான மனிதரே, உங்களுக்கு ஐயோ கேடு!

12. நீங்கள் பிறப்பதாயிருந்தால், சாபத்தில் பிறப்பீர்கள்; நீங்கள் சாவதாயிருந்தால் சாபமே உங்கள் பாகமாகும்.

13. பூமியினின்று உண்டாவதெல்லாம் பூமிக்கே திரும்பும்; அவ்வாறே அவபக்தியாளரும், சாபத்தினின்று அழிவுக்குக் கடந்து போவார்கள்.

14. மனிதர்களின் துக்கம் அவர் களுடைய சரீரத்தைப் பற்றியதாக இருக்கிறது. ஆனால் அவபக்தியாள ரின் பெயர் துடைத்தகற்றப்படும்.

15. நற்பெயரைப்பற்றி அக்கறை கொள், ஏனெனில், ஆயிரம் பெரிய விலையுயர்ந்த பொக்கிஷங்களை விட அதிகமாக அது உன்னோடு தொடர்ந்து நிலைத்திருக்கும்.

16. ஒரு நல்ல வாழ்வு குறித்த வாழ்நாட்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. நற்பெயரோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

17. என் மக்களே! நல்லொழுக்கத் தைச் சமாதானத்தில் காப்பாற் றுங்கள்; ஏனெனில், மறைந்திருக்கும் ஞானமும் காணப்படாத பொக்கிஷமும் ஆகிய இவை இரண் டிலும் என்ன பயன் இருக்கிறது?

18. தன் ஞானத்தை மறைக்கும் மனிதனைவிட, தன் மூடத்தனத்தை மறைக்கிறவன் மேலானவன்.

19. ஆனதால் நான் இப்போது பேசப் போகிற இந்தக் காரியங் களைக் கேட்டு நாணமடையுங்கள்.

20. ஏனெனில், சகலத்திலும் வெட்கம் கொள்வது நல்லதல்ல; கருத்தில் எல்லோருக்கும் எல்லாக் காரியங்களும் பிரியமானவையாக இருப்பதில்லை.

21. தந்தை தாய்க்கு முன்பாக விபசாரத்தைப் பற்றியும், ஆளுனனுக்கும் அதிகாரமுள்ள மனிதனுக்கும் முன்பாக பொய் பேசுவது பற்றியும், வெட்கப்படுங்கள்.

22. பிரபுவின் முன்னும்நீதிபதியின் முன்னும் ஒரு குற்றத்தைப்பற்றியும், சங்கத்திற்கும், ஒரு மக்களினத்திற்கும் முன்பாக அக்கிரமத்தைப்பற்றியும்;

23. தோழனுக்கும், நண்பனுக்கும் முன்பாக அநியாயத்தைப்பற்றியும், நீ வசிக்குமிடத்தைப் பொறுத்த வரை,

24. திருட்டைப்பற்றியும், பொய் கடவுளைப் பற்றிய சத்தியம் மற்றும் உடன்படிக்கையைப் பற்றியும், உணவு மேசையில் முழங்கை ஊன்றிச் சாய்வதைப்பற்றியும், கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது பற்றியும்;

25. உனக்கு வணக்கம் செலுத்து பவர்கள் முன் மெளனத்தைப் பற்றி யும் வேசியை நோக்குவது பற்றியும், உறவினனிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்வதைப்பற்றியும் பேச வெட்கப்படுங்கள்.

26. உன் அயலானிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே; அவனுக்குச் சொந்தமான ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டபின் அதைத் திருப்பித் தராமல் இராதே.

27. மற்றொருவனின் மனைவியை உற்றுநோக்காதே; அவனுடைய ஊழியக்காரியைப் பற்றி வினோதப் பிரியம் கொள்ளாதே; அவளுடைய படுக்கையை நெருங்கிப் போகாதே.

28. நண்பர்கள் முன் நிந்தைக்குரிய வார்த்தைகளைச் சொல்ல வெட்கப்படு; நீ அவர்களுக்குக் எதை யேனும் கொடுத்து விட்டு, பிறகு அவர்களை நிந்தியாதே.