சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 39

ஞானியின் கல்வியும், கடவுள்மட்டில் அவனுக்குள்ள கவனமும், செபம் போன்ற செயல்பாடுகளும்

1. ஞானமுள்ளவன் முன்னோர் அனைவருடையவும் ஞானத்தைத் தேடுவான்; தீர்க்கதரிசனங்களை வாசிப்பதில் தன் காலத்தைக் கழிப்பான்.

2. புகழ்பெற்ற மனிதர்களின் வார்த்தைகளைக் கடைப்பிடிப் பான்; உவமைகளின் இரகசியங் களுக்குள் நுழைந்து ஆராய்ந்து பார்ப்பான்.

3. பழமொழிகளின் இரகசிய அர்த்தங்களை அவன் ஆராய்வான்; உவமைகளின் மறைபொருட்களில் பழகுவான்.

4. பெரியோருடைய நடுவில் அவன் ஊழியம் செய்வான்; ஆளுன ருக்கு முன்பாகத் தோன்றுவான்.

5. அந்நிய நாடுகளுக்குள் அவன் கடந்து போவான்; மனிதரிடையே நன்மையையும் தின்மையையும் முயன்று பார்ப்பான்.

6. அதிகாலையில் தன்னை உண்டாக்கின ஆண்டவர் வந்து தங்குவதற்கு அவன் தன் இருதயத்தைக் கையளிப்பான்; உன்னத ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவான்.

7. செபத்தில் தன் வாயைத் திறப்பான்; தன் பாவங்களுக்காக மன்றாடுவான்.

8. ஏனெனில், அது மகத்தான ஆண்டவரைப் பிரியப்படுத்து மானால் அவர் புத்தியின் ஆவியால் அவனை நிரப்புவார்.

9. தமது ஞானத்தின் வார்த்தை களை மழையைப்போலப் பொழி வார்; அவனும் தன் செபத்தில் ஆண்டவரிடம் தன் பாவங்களை ஒப்புக்கொள்வான்.

10. அவர் அவனுடைய ஆலோ சனையையும் அறிவையும் வழி நடத்துவார்; அவரது பரம இரகசி யங்களை அவன் தியானிப்பான்.

11. அவன் தான் கற்றுக்கொண்ட ஒழுங்கை வெளிப்படுத்துவான், ஆண்டவர் உடன்படிக்கையின் திருச் சட்டத்தில் மகிமைகொள்வான்.

12. பலர் அவனது ஞானத்தைப் புகழுவார்கள்; அது ஒருபோதும் மறக்கப்படாது. 

13. அவன் ஞாபகம் அகன்று போகாது; தலைமுறை தலை முறைக்கும் அவனுடைய பெயர் கொண்டாடப்படும்.

14. மக்களினத்தார் அவனது ஞானத்தை அறிக்கையிடுவார்கள், பரிசுத்த சபையும் அவனுடைய புகழ்ச்சியை வெளிப்படுத்தும்.

15. அவன் தொடர்ந்து வாழ்ந்தால் ஆயிரம்பேரைவிட மேலான ஒரு நற் பெயரை விட்டுச் செல்வான்; அவன் இளைப்பாறினால், அதுவும் அவனுக்கு அனுகூலமாகவே இருக்கும்.

16. நான் அறிக்கையிடும்படி இன்னும் தியானிப்பேன்; ஏனெனில் நான் ஒரு தீவிரமான பரிசுத்த உணர்வால் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

17. ஒரு குரலால் அவர் சொல்வதாவது; தேவ சந்ததியே, நான் சொல் வதைக் கேள், நீரோடைக் கரையில் நடப்பட்ட ரோஜாச் செடியைப் போல மொட்டு விடு.

18. தூபத்தைப்போல் இனிய வாசனை வீசுங்கள்.

19. லீலியைப்போலப் பூக்களைப் வெளியிடுங்கள், வாசனை வீசுங்கள், வரப்பிரசாதத்தில் இலைகளைப் பிறப்பியுங்கள், சங்கீதங்களால் துதி பாடுங்கள்; ஆண்டவரை அவரு டைய செய்கைகளில் வாழ்த்திப் போற்றுங்கள்.

20. அவருடைய திருப்பெயரை ஏற்றிப் போற்றுங்கள்; உங்கள் உதடு களின் குரலைக் கொண்டு அவருக்கு மகிமை செலுத்துங்கள்; உங்கள் வாய் களின் கீதங்களோடும் வீணைகளோ டும் அவரை மகிமைப்படுத்துங்கள். அவரைப் போற்றித் துதிக்கும்போது இப்படிச் சொல்லக்கடவீர்கள்: 

21. ஆண்டவரின் செய்கைகள் எல்லாம் மிகவும் நல்லவை.

22. அவர் வார்த்தையால் தண்ணீர் ஒரு குவியலைப் போல நின்றது; அவருடைய வாயின் வார்த்தை களால் நீர் நிரம்பிய அணைக்கட்டு ளைப் போலாயின.

23. ஏனெனில், அவர் உத்தரவால் தயவு காட்டப்படுகிறது; அவரது இரட்சணியத்தில் குறைவொன்று மில்லை.

24. மாம்சத்தின் வேலைகள் யாவும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய கண்களுக்கு மறை வானது ஏதுமில்லை.

25. யுகயுகமாக அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்; அவரது சமுகத் தில் அதிசயமானது ஏதுமில்லை.

26. இது என்ன, அது என்ன என்ற பேச்சு இல்லை. ஏனெனில் சகலமும் அதனதன் காலத்தில் தேடப்படும்.

27. அவரது ஆசீர்வாதம் நதியைப் போலப் பொங்கி வழிந்தது.

28. பெருவெள்ளம் பூமியை நீரால் நிரப்பியது போலவே, அவரது கடுஞ் சினம் அவரைத் தேடாத மக்களினங் களைச் சுதந்தரித்துக் கொள்ளும்.

29. அவர் எப்படி நீர்நிலைகளை வறண்ட நிலமாக மாற்றியதால் பூமி எப்படி வறண்டுபோனதோ, அவரது வழிகள் அவர்களது பயணத்திற்காக எப்படிச் சமதளமாக்கப்பட்டனவோ, அப்படியே, பாவிகளுக்கு அவரது கடுஞ்சினத்தில் அவை இடறு கற்களாயிருக்கின்றன. 

30. ஆதியிலிருந்து நல்லவர்களுக்காக நன்மையான காரியங்கள் படைக்கப்பட்டன; அவ்வாறே தீயோருக்காக நன்மையும் தீமையும் உண்டாக்கப்பட்டன.

31. மனிதரின் வாழ்வுக்கு அவசியமானவை; தண்ணீர், நெருப்பு, இரும்பு, உப்பு, பால், கோதுமை உரோட்டி, தேன், திராட்சைக்குலை, எண்ணெய், உடைகள்.

32. இவையெல்லாம் பரிசுத்தர் களின் நன்மைக்காக இருப்பதுபோல பாவிகளுக்கும் அவபக்தியுள்ளவர் களுக்கும் இவை தீமையாக மாற்றப் படுகின்றன.

33. பழிவாங்குதலுக்காகப் படைக் கப்படுகிற ஆவிகள் உண்டு. அவை தங்கள் கோபவெறியில் தங்கள் கொடிய வாதைகளை இட்டு வைக்கின்றன.

34. அழிவின் காலத்தில் அவை தங்கள் ஆற்றலைப் பொழியும், அவர் களைப் படைத்தவரின் கோபத்தை அவை சாந்தப்படுத்தும்.

35. நெருப்பும், கல்மழையும், பஞ்சமும், சாவும் இவையெல்லாம் பழிவாங்குதலுக்காக உண்டாக்கப் பட்டன.

36. மிருகங்களின் பற்களும், தேள்களும், பாம்புகளும், வாளும் அவபக்தி யுள்ளவர்களை அழித்து விடப் பழி வாங்கும் ஆயுதங்களாயிருக்கின்றன. 

37. அவருடைய கட்டளைகளில் அவை விருந்தாடும், தேவை இருக்கும் போது பூமியின்மீது அவை தயாரா யிருக்கும், அவற்றின் காலம் வரும் போது, அவை அவருடைய கட்டளையை மீறாது.

38. ஆகவே ஆதியிலிருந்தே நான் உறுதிப்படுத்தப்பட்டேன்; நான் தியானித்தேன், இவற்றைப் பற்றிச் சிந்தித்து, அவற்றை எழுதி வைத்தேன்.

39. ஆண்டவருடைய செய்கைகள் எல்லாம் நல்லவை; உரிய காலத்தில் ஒவ்வொரு செயலையும் கொடுத் தருள்வார்.

40. இது அதைவிடத் தீமையானது என்று சொல்லலாகாது; ஏனெனில் அனைத்தும் அவற்றின் காலத்தில் நன்றாய் அங்கீகரிக்கப்படும்.

41. ஆகவே இப்போது முழு இருத யத்தோடும் வாயோடும் அவரைப் புகழுங்கள், ஆண்டவரின் திருப் பெயரைப் போற்றித் துதியுங்கள்.