சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 37

உண்மையான நண்பனும், பொய்யான நண்பனும்

1. ஒவ்வொரு நண்பனும், நானும் அவனுடைய நண்பன்தான் என்று சொல்வான். ஆனால் பெயருக்கு மட்டும் நண்பனாயிருப்பவன் இருக்கிறான். இது மரணத்தையும் கூட விளைவிக்கும் துக்கம் அல்லவா?

2. ஆனால் தோழனும் நண்பனும் எதிரிகளாக மாறுவார்கள்.

3. ஓ! தீய தகாத் துணிவே! பூமியை உன் துர்க்குணத்தாலும், வஞ்சகத் தாலும் மூடும்படி நீ எங்கிருந்து வந்தாய்?

4. தன் நண்பனின் சந்தோஷங் களில் அவனோடு அக்களிக்கிற தோழன் இருக்கிறான், ஆனால் துன்ப காலத் திலோ இவன் அவனுக்கு எதிராக இருப்பான்.

5. தன் வயிற்றின் பொருட்டுத் தன் நண்பனோடு துக்கம் கொண் டாடும் தோழன் இருக்கிறான்; இவன் விரோதிக்கு எதிராகக் கவசத்தை எடுப்பான்.

6. உன் மனதில் உன் நண்பனை மறவாதே; உன் செல்வங்களில் அவனை நீ நினையாமல் இராதே.

7. உனக்குக் கண்ணியை இட்டு வைக்கிறவனோடு ஆலோசனை செய்யாதே; உன்மீது பொறாமை கொண்டுள்ளவர்களிடமிருந்து உன் ஆலோசனையை மறைத்துக்கொள்.

8. ஆலோசனையாளன் ஒவ்வொரு வனும் ஆலோசனை தருகிறான்; ஆனால் தனக்குத்தானே ஆலோச னைக்காரனாக இருப்பவன் இருக் கிறான்.

9. ஆலோசனைக்காரனைப் பற்றி எச்சரிக்கையாயிரு; அவனுக்குத் தேவையானது என்னவென்று முதலில் அறிந்துகொள்; ஏனெனில், அவன் தன் சொந்த மனதின்படியே திட்டமிடுவான்.

10. அவன் பூமியில் முளையடித்து உன்னிடம்:

11. உன் வழி நல்ல வழிதான் என்று சொல்வான், அதன் பின் உனக்கு என்ன நடக்கப்போகிறதென்று பார்க் கும்படி மறு பக்கத்தில் நின்றுகொள் வான்.

12. வேதத்தை அனுசரிக்காதவ னோடு பரிசுத்ததனத்தைப் பற்றியும், அநீதனோடு நீதியைப்பற்றியும், ஒரு பெண்ணைத் தொட்டுக்கொண்டு, அவள் காய்மகாரப்படுகிறவளைப் பற்றியும், கோழையிடம் போரைப் பற்றியும், வியாபாரியோடு கொடுக் கல் வாங்கலைப்பற்றியும், வாங்குபவ னிடம் விற்பது பற்றியும், பொறாமை யுள்ளவனோடு நன்றியறிதலைப் பற்றியும் பேசாதே.

13. அவ்வாறே அவபக்தியுள்ளவ னிடம் பக்தியைப் பற்றியும், நேர்மை யற்றவனிடம் நேர்மையைப் பற்றி யும், தடை செய்யப்பட்ட வேலை யாளிடம் வேலைகளைப் பற்றியும் பேசாதே.

14 .வருட ஒப்பந்த வேலைக்காரனோடு வருட முடிவைப் பற்றியும், சோம்பேறியான ஊழியனோடு ஓயாத வேலையைப்பற்றியும் பேசாதே; எந்த ஒரு ஆலோசனை யின் காரியத்திலும் இவற்றிற்கு முக்கியத்துவம் தராதே.

15. ஆனால் தேவபயத்தை அநுசரித்து நடப்பதாக நீ அறிந்திருக்கிற பரிசுத்த மனிதன் யாராயினும் தொடர்ந்து அவனோடு இரு.

16. அவனுடைய ஆத்துமம் உன் ஆத்துமத்திற்குத் தகுதியானதாக இருக்கிறது. நீ இருளில் கால் இடறும்போது, அவன் உனக்காக வருந்துவான்.

17. நல்ல ஆலோசனையுள்ள ஓர் இருதயத்தை உனக்குள் ஸ்தாபித்துக் கொள்; ஏனெனில், அதைவிட அதிக மதிப்புள்ள வேறு எதுவும் உனக்கு இல்லை.

18. கண்காணிப்பதற்காக உயர மான இடத்தில் உட்கார்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட அதிகமாக, சில சமயங்களில் பரிசுத்தமுள்ள மனிதனின் ஆத்துமம் உண்மையான காரியங்களைக் கண்டுபிடிக்கிறது.

19. ஆனால் இந்த எல்லாக் காரியங் களுக்கும் மேலாக உந்நத கடவுள் சத்தியத்தில் உன்னை வழிநடத்தும் படி அவரை மன்றாடு.

20. உன் எல்லா வேலைகளிலும், உண்மையான வார்த்தை உனக்கு முன்பாகவும், திடமான ஆலோசனை ஒவ்வொரு செயலுக்கும் முன்பாக வும் செல்லக் கடவதாக.

21. ஒரு கொடிய வார்த்தை மிருகத்தை மாற்றும், அதினின்று நன்மை தீமை, வாழ்வு சாவு என்னும் நான்கு வகையான காரியங்கள் எழு கின்றன. நாவுதான் தொடர்ந்து இவற்றை ஆள்கிறது. மிகுந்த அறிவுள் ளவனும், பலருக்கு ஆசிரியனுமான ஒருவன் இருக்கிறான், ஆனால் அவன் தன் சொந்த ஆத்துமத்திற்குப் பயனற்றவனாக இருக்கிறான்.

22. திறமையுள்ளவன் பலருக்குக் கற்பித்திருக்கிறான், அவன் தன் ஆன்மாவுக்கு இனியவனாயிருக்கிறான்.

23. உலக ஞானத்தோடு நாகரீக மாகப் பேசுபவன் வெறுப்புக்குரி யவன்; அவன் ஒவ்வொரு காரியத் திலும் குறைவுள்ளவனாயிருப்பான்.

24. ஆண்டவரிடமிருந்து வரப் பிரசாதம் அவனுக்கு அளிக்கப்பட வில்லை; ஏனெனில் எல்லா ஞான மும் அவனிடமிருந்து விலக்கப்பட் டிருக்கிறது.

25. தன் ஆத்துமத்திற்கு ஞான முள்ளவனான ஞானி இருக்கிறான்; அவனுடைய புத்தியின் கனி புகழத் தக்கதாயிருக்கிறது.

26. ஞானமுள்ளவன் தன் சொந்த மக்களுக்குப் போதிக்கிறான்; அவனுடைய புத்தியின் கனிகள் பிரமாணிக்கமுள்ளவை.

27. ஞானமுள்ளவன் ஆசீர்வாதங் களால் நிரப்பப்படுவான்; பார்க்கிறவர்கள் அவனைப் புகழுவார்கள்.

28. மனிதனின் வாழ்வு அவனு டைய வாழ்நாட்களின் எண்ணிக்கை யாகும். ஆனால் இஸ்றாயேலின் நாட்களோ எண்ணற்றவை.

29. ஞானமுள்ளவன் தன் மக்கள் நடுவில் நன்மதிப்பைச் சுதந்தரித்துக் கொள்வான். அவனுடைய பெயர் என்றென்றும் வாழும்.

30. என் மகனே, வாழ்நாளில் உன் ஆத்துமத்தின் தகுதியை நிரூபி; அது தீயதாயிருந்தால், அதற்கு அதிகாரம் கொடாதே.

31. ஏனெனில் அனைத்தும் அனை வருக்கும் தகுதியானதல்ல; ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு ஆன்மாவையும் மகிழ்விக்காது.

32. எந்த விருந்திலும் பேராசை கொள்ளாதே; எவ்வித பதார்த்தத்தை யும் பேராவலோடு உண்ணாதே.

33. ஏனெனில், பல வகைப் பதார்த்தங்களோடு வியாதியும் சேர்ந் திருக்கும். பேராசை வயிற்றுப் போக்காக மாறிவிடும்.

34. போசனப்பிரியத்தால் பலர் இறந்தார்கள்; மட்டசனமுள்ள வனோ வாழ்நாளை அதிகரிப்பான்.