சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 36

தமது மக்களினத்தின் மேலும், ஜெருசலேம் பட்டணத்தின்மேலும் ஆண்டவர் இரக்கம் காட்டுகிறார்.

1. அனைவருடையவும் கடவுளே, எங்கள்மீது இரக்கமாயிரும்; எங்களை நோக்கிப் பார்த்து உமது இரக்கங்களின் ஒளியை எங்களுக்குக் காண்பியும்.

2. உம்மைத் தேடாத மக்களினத்தார், உம்மைத் தவிர வேறு தேவன் இல்லையென்று அறிந்துகொள்ளும்படியாகவும், உமது அற்புதங்களை அவர்கள் அறிக்கையிடும்படியாகவும், அவர்கள் மீது உமது பயத்தை அனுப்பியருளும்.

3. அந்நிய மக்களினத்தார் உமது வல்லமையைக் காணும்படி அவர்கள் மீது உமது கரத்தை உயர்த்தியருளும்.

4. ஏனெனில், அவர்களது பார்வையில் எங்களில் நீர் அர்ச்சிக்கப்பட்டிருப்பது போலவே, எங்களுக்கு முன்பாக, அவர்கள் மத்தியிலும் தேவரீர் ஏற்றிப் போற்றப்படுவீர்.

5. ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுளில்லையென்று நாங்கள் அறிந்திருப்பதுபோல, அவர்களும் உம்மை அறிந்துகொள்ளும்படியாக,

6. உமது அடையாளங்களைப் புதுப்பியும், புதிய அற்புதங்களை நிகழ்த்தும்.

7. உம் கரத்தையும், வலப் புயத்தையும் மகிமைப்படுத்தும்.

8. உமது உக்கிரத்தை எழுப்பி, உமது கோபத்தைப் பொழிந்தருளும்.

9. விரோதியை அகற்றும், எதிரியை நசுக்கி விடும்.

10. உமது அற்புதச் செயல்களை அவர்கள் அறிக்கையிடும்படியாக காலத்தைத் துரிதப்படுத்தும், (உலக) முடிவை நினைத்தருளும்.

11. தப்புகிறவன் கோபாக்கினி யால் விழுங்கப்படுவானாக; உமது மக்களினத்தாரை நசுக்குகிறவர்கள் அழிந்து போவார்களாக.

12. எங்களருகில் வேறு யாரு மில்லை என்று சொல்லும் எதிரி களின் அரசர்களுடைய தலையை நசுக்கி விடும்.

13. உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று அவர்கள் அறியும் படியாகவும், உமது மாபெரும் செயல் களை அவர்கள் அறிக்கையிடும்படி யாகவும், யாக்கோபின் எல்லாக் கோத்திரத்தாரையும் ஒன்றுகூட்டும்; ஆதிமுதல் இருந்ததுபோல அவர் களை உமது உரிமைச் சொத்தாக ஏற்றுக்கொள்வீர்.

14. யார்பேரில் உமது திருப்பெயர் மன்றாடப்படுகிறதோ, அந்த உமது மக்களின்மீது இரக்கமாயிரும்; உமது தலைப்பேறாக இருக்கும்படி தேவரீர் உயர்த்திய இஸ்ராயேலர் மீது இரக்கமாயிரும்.

15. நீர் அர்ச்சித்திருக்கிற பட்டண மும், உமது இளைப்பாற்றியின் நகரமுமாகிய ஜெருசலேமின் மீது இரக்கமாயிரும்.

16. உரைக்கவியலாத உம்முடைய வார்த்தைகளால் சீயோனையும், உமது மகிமையால் உமது மக்களினத்தையும் நிரப்பும்.

17. ஆதிமுதல் உம் சிருஷ்டிகளாக இருப்பவைகளுக்கு அத்தாட்சி கொடும்; முன்னிருந்த தீர்க்க தரிசிகள் உமது திருப்பெயரால் கூறிய எழுப்பியருளும்.

18. உம்முடைய தீர்க்கதரிசிகள் பிரமாணிக்கமுள்ளவர்களாய்க் காணப் படும்படி, உமக்காகப் பொறுமை யாய்க் காத்திருப்பவர்களுக்கு வெகுமதி அளித்தருளும்; உமது ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்டருளும்.

19. உமது மக்களின்மீது ஆரோனின் ஆசீர்வாதத்தின்படி எங்கள் ஜெபங்களைக் கேட்டருளும். எங்களை நீதியின் வழியில் நடத்தும்; பூமி யிலுள்ள யாவரும் நீரே யுகங்களை யெல்லாம் காண்கிற கடவுள் என்று அறிந்து கொள்வார்களாக.

20. வயிறு எல்லா மாம்சத்தையும் விழுங்கும்; என்றாலும் ஒரு உணவு மற்றொன்றை விட மேலானது.

21. சுவைப் புலன் மானின் மாம்சத் தின் சுவையை அறிகிறது; ஞான முள்ள இருதயமும் பொய்யான பேச்சுகளை அறிகின்றது.

22. வக்கிரமுள்ள இருதயம் துயரத்தை விளைவிக்கும்; அனுபவ முள்ளவனோ அதை எதிர்ப்பான்.

23. பெண் ஒவ்வொரு மனிதனை யும் ஏற்றுக்கொள்வாள்; ஆனால் ஒரு மகள் மற்றொருத்தியை விட நல்லவள்.

24. பெண்ணின் அழகு அவளது கணவனின் முகத்தைச் சந்தோஷப்படுத்தும்; மனிதன் அதற்கு மேல் வேறொன்றும் ஆசிப்பதில்லை.

25. சுகப்படுத்த வல்ல நாவை அவள் கொண்டிருந்தால், அவ்வாறே அது (நோயைத்) தணித்து இரக்கம் காட்டும்; அவளது கணவன் மற்ற மனிதர்களைப் போல் இருப் பதில்லை.

26. நல்ல மனைவியை அடைந் தவன் ஓர் உடைமையைக் கொண் டிருக்கத் தொடங்குகிறான்; அவள் அவனுக்கு ஒப்பான உதவியாகவும், இளைப்பாற்றியின் தூணாகவும் இருக்கிறாள்.

27. வேலி இல்லாத இடத்தில் உடைமை கொள்ளையிடப்படும்; மனைவியில்லாத இடத்தில் ஏழை துக்கித்துப் புலம்புவான்.

28. கொள்ளையிடுவதில் தேர்ந்து, ஊர் ஊராய்த் திரிகிற கொள்ளை யனைப் போல், ஓய்வில்லாதவனும், இரவில் தான் எங்கிருக்க நேர்ந்தாலும் அங்கே தங்குபவனுமாகிய மனிதனை நம்புகிறவன் யார்?