சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 34

கனவுகளின் வியர்த்தம்.

1. புத்தியற்ற மனிதனின் நம்பிக்கைகள் வீணானவையும், ஏமாற்றுபவையுமாக இருக்கின்றன. கனவுகள் மூடர்களை உயர்த்துகின்றன.

2. பொய்யான காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவன் நிழலைப் பிடிப்பவனைப் போலவும், காற்றைப் பின்தொடர்பவன் போலவும் இருக் கிறான்.

3. கனவின் காட்சியானது ஒன்றைப் போல மற்றொன்று தோன்றுவதாக இருக்கிறது; அது ஒரு மனிதனின் முகத்திற்கு முன்பாக அவனுடைய சாயல் இருப்பதைப் போன்றது.

4. அசுத்தத்தால் எது சுத்தமாக்கப்பட முடியும்? பொய்யானதில் இருந்து எந்த உண்மை வர முடியும்?

5. ஏமாற்றும் சகுனமும், பொய்யான குறிகளும், தீமை செய்பவர்களின் கனவுகளும் விணானவையாயிருக் கின்றன.

6. பிரசவ வேதனைப்படும் பெண் கனவு காண்பது போல, இருதயமும் கற்பனை செய்கிறது; உந்நத கடவுளிடமிருந்து அனுப்பப்படும் காட்சியாக அது இருந்தால் தவிர, அதன்மீது உன் இருதயத்தை இருத்தாதே.

7. ஏனெனில் கனவுகள் அநேகரை ஏமாற்றியுள்ளன; அவற்றில் நம்பிக்கை வைத்தவர்கள் தோற்றுப் போயினர்.

8. திருச்சட்ட வார்த்தை பொய் இன்றி நிறைவேற்றப்படும், பிரமாணிக்க முள்ளவனின் வாயில் ஞானம் அப்பட்டமாக ஆக்கப்படும்.

9. பரிசோதிக்கப்படாதவன் எதை அறிவான்? அதிக அனுபவமுள்ளவன் பல காரியங்களை யோசிப்பான்; பல காரியங்களைக் கற்றறிந்தவன் தன் புத்தியை வெளிப்படுத்துவான்.

10. அனுபவம் இல்லாதவன் கொஞ்சமாய் அறிந்திருக்கிறான்; பல காரியங்களில் அனுபவமுள்ளவன் விவேகத்தைப் பெருக்குகிறான்.

11. பரிசோதிக்கப்படாதவன், எவ்விதமான காரியங்களை அறிந் திருக்கிறான்? ஆச்சரியப்படுத்தப் பட்டிருப்பவன் உணர இயலாத காரியங்களால் மிருந்திருப்பான்.

12. பயணங்களால் அநேக காரியங் களைக் கண்டிருக்கிறேன்; அநேக வழக்கங்களை அறிந்திருக் கிறேன்.

13. சில சமயங்களில் இந்தக் காரியங்களால் மரண ஆபத்தில் நான் இருந்திருக்கிறேன்; ஆனால் தேவ வரப்பிரசாதத்தால் நான் விடுவிக்கப் பட்டிருக்கிறேன்.

14. கடவுளுக்குப் பயப்படுகிறவர் களின் உணர்வு தேடப்படுகின்றது; அவர் பார்வையில் அது ஆசீர்வதிக் கப்படும்.

15. ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கை தங்களை இரட்சிக்கிறவர் மேல் இருக்கிறது; கடவுளின் கண்கள் அவரை நேசிக்கிறவர்கள் மீது இருக்கின்றன.

16. ஆண்டவருக்குப் பயப்படுகிற வன் எதைக் கண்டும் நடுங்க மாட்டான், பயப்பட மாட்டான்; ஏனெனில் அவரே அவன் நம்பிக் கையாயிருக்கிறார்.

17. ஆண்டவருக்குப் பயப்படு கிறவனுடைய ஆத்துமம் பாக்கிய மானது.

18. அவன் யாரைப் பார்க்கிறான்? அவனுக்குப் பலமாயிருப்பவர் யார்?

19. ஆண்டவருடைய கண்கள் அவருக்குப் பயப்டுகிறவர்கள்மேல் இருக்கின்றன; அவரே அவர்களது வல்லமையுள்ள பாதுகாவலரும் பலமான பிடிமானமும், வெப்பத்தில் இருந்து பாதுகாவலும், நண்பகலின் சூரிய வெப்பத்தில் நிழலுமாக இருக்கிறார். 

20. அவரே தள்ளாட்டத்தில் பாதுகாப்பு, விழாமல் காப்பாற்றும் உதவி; அவர் ஆத்துமத்தை உயர்த்து கிறார், கண்களைப் பிரகாசிப்பிக் கிறார், உடல் நலமும், உயிரும், ஆசீர்வாதமும் கொடுக்கிறார்.

21. தவறான முறையில் சம்பாதிக் கப்பட்ட பொருளைப் பலி கொடுப் பவனின் காணிக்கை கறைபட்டது; அநீதருடைய கேலி பரிகாசங்கள் அவருக்கு உகந்தவைகளல்ல.

22. ஆண்டவர் உண்மையினுடை யவும், நீதியினுடையவும் வழியில் தமக்கு ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமே உரியவராயிருக்கிறார்.

23. தீயவர்களின் தானங்களை உன்னதக் கடவுள் அங்கீகரிப்ப தில்லை; அக்கிரமிகளின் காணிக்கை களை அவர் மதிப்பதில்லை; அவர் களுடைய பாவங்களால் விளைந்த அவரது கோபம் அவர்களுடைய ஏராளமான பலிகளால் தணிக்கப் படுவதில்லை.

24. ஏழைகளின் பொருட்களைக் கொண்டு பலி ஒப்புக்கொடுக்கிறவன் தகப்பன் கண் முன்பாக மகனைக் கொலை செய்கிறவன் போலிருக் கிறான்.

25. வறியவர்களின் அப்பம் ஏழைகளின் வாழ்வு; அதில் அவர்களை ஏமாற்றுகிறவன், இரத்தத்தின் மனிதனாயிருக்கிறான்.

26. உடல் வியர்க்க சம்பாதித்த அப்பத்தைப் பறிக்கிறவன், தன் அயலானைக் கொலை செய்கிறவனைப் போன்றவன்.

27. இரத்தத்தைச் சிந்துபவனும், கூலிக்கு அமர்த்திய வேலையாளை ஏமாற்றுபவனும் சகோதரராயிருக்கிறார்கள்.

28. ஒருவன் கட்டுகிறான், மற்றொருவன் இடிக்கிறான்; உழைப்பைத் தவிர அவர்கள் பெற்ற ஆதாய மென்ன?

29. ஒருவன் ஜெபிக்கிறான், மற்றொருவன் சபிக்கிறான், எவனுடைய குரலைக் கடவுள் கேட்பார்?

30. மரித்தவனைத் தொட்டபின் குளித்தவன், திரும்பவும் பிணத்தைத் தொடுவான் என்றால், அவன் குளித்ததால் பயன் என்ன?

31. அப்படியே தன் பாவங்களுக் குப் பரிகாரமாக உபவாசம் இருக்கிறவன், திரும்பவும் பாவங்களைச் செய்தால், தன்னைத் தாழ்த்துவதால் அவனுக்கு வந்த ஆதாயம் என்ன? அவன் ஜெபத்தைக் கேட்பவர் யார்?