சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 32

விருந்தினர் நடந்துகொள்ள வேண்டிய விதம்.

1. அவர்கள் உன்னை ஆட்சியாள னாக ஏற்படுத்தியிருக்கிறார்களா? அதனால் நீ கர்வங்கொள்ளாதே. அவர்களில் ஒருவனைப்போல அவர்களோடிரு.

2. அவர்கள் மீது அக்கறை காட்டு; ஆகவே கீழே உட்கார்; உன் வேலையெல்லாம் முடிந்தபிறகு நீயும் உன் இடத்திற்குப் போ.

3. அவர்களைப் பற்றி நீ அக்களிப் புக் கொள்ளும்படியாகவும், வரப்பிரசாதத்தின் ஆபரணமாக ஒரு முடியைப் பெற்றுக்கொள்ளும்படி யாகவும், உன் பங்களிப்பிற்குரிய மரியாதையைப் பெறும்படியாகவும் உன் இடத்திற்குப் போ.

4. மூப்பனே! நீ பேசு; ஏனெனில், அது உனக்குத் தகுதியானது.

5. முதல் வார்த்தையைக் கவன முள்ளஅறிவோடு பேசு. இசையைத் தடுக்காதே.

6. கேட்கப் பிரியமில்லாத இடத் தில் உன் வார்த்தைகளைக் கொட் டாதே; தகாத சமயத்தில் உன் ஞானத்தைப் பற்றிப் பெருமை பாராட்டாதே.

7. மதுபான விருந்தில் இசைக் கச்சேரி, பொன்னில் பதித்த மாணிக்கக் கல் போன்றது.

8. பொன்னாபரணத்தில் பதித்த சிறு மரகத முத்திரை போன்றது, இன்பமான, மிதமான மதுவோடு சேரும் இன்னிசை.

9. மெளனமாய்க் கேள்; உன் மரியாதைக்காக நல்ல வரப்பிரசாதம் உன்னிடம் வரும்.

10. வாலிபனே! உன் சொந்தக் காரியங்கள் பற்றி அரிதாய்ப் பேசு.

11. இருமுறை நீ கேள்வி கேட்கப் பட்டால் உன் பதில் சுருக்கமா யிருக்கட்டும்.

12. பல காரியங்களில் அறியாதவனைப் போலிரு; மெளனத்திலும், அறிந்துகொள்ளும் ஆவலோடும், கூறப்படுவதைக் கேள்.

13. பெரியோர் சபையில் முந்திப் பேசாதே; மூப்பர்கள் கூட்டத்தில் அதிகமாய்ப் பேசாதே.

14. புயலுக்கு முன் மின்னல் வெட்டுகிறது, அடக்கவொடுக்கத் திற்கு முன் தேவ உபகாரம் போகி றது; உன்னுடைய இந்த மரியாதைக் காக நல்ல வரப்பிரசாதம் உன்னிடம் வரும்.

15. எழுந்திருக்கும் நேரமானபோது சோம்பலாயிராதே; ஆனால் உன் வீட்டுக்கு ஓடிப் போவதில் முதலாவதாயிரு. அங்கு தனித்திரு; அங்கு உன் பொழுதுபோக்கில் ஈடுபடு.

16. உன் மனதில் இருப்பதைச் செய்; ஆனால் பாவத்தில் அல்ல, ஆங்காரமுள்ள பேச்சிலும் அல்ல.

17. உன்னை உண்டாக்கி, தமது எல்லா நன்மைகளாலும் உன்னை நிரப்பி உன்னைப் புதுப்பிக்கிற ஆண்டவரை இவை எல்லாவற்றிற் காகவும் வாழ்த்திப் போற்று.

18. ஆண்டவருக்குப் பயப்படுகிற வன் அவருடைய போதக ஒழுங்கைப் பெற்றுக்கொள்வான்; அதிகாலை யில் அவரைத் தேடுபவர்கள் ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள் வார்கள்.

19. திருச்சட்டத்தைத் தேடுகிறவன் அதனால் நிரப்பப்படுவான்; அதை வஞ்சகமான முறையில் கையாள் பவன் அதில் ஓர் இடறுகல்லை எதிர் கொள்வான்.

20. ஆண்டவருக்குப் பயப்படுகிற வர்கள், நீதியான தீர்ப்பைக் காண் பார்கள்; விளக்கின் சுடரைப்போல நீதியைத் தூண்டுவார்கள்.

21. பாவியான மனிதன் தான் கண்டிக்கப்படுவதினின்று விலகி யோடுவான், தன் சித்தப்படி சாக்குப்போக்குக் கண்டுபிடிப்பான்.

22. முன்யோசனையுள்ள மனிதன் புத்தியை அலட்சியம் செய்ய மாட் டான், அந்நியனும் ஆங்காரியுமான மனிதன் பயத்திற்கு இடங் கொடுக்க மாட்டான்.

23. தான் முன்யோசனையின்றி பயத்தோடு செய்து விட்ட பிறகும், தானே விரும்பித் தேடிய காரியங்களால் அவன் கட்டுப்படுத்தப் படுவான்.

24. என் மகனே! ஆலோசிக்காமல் ஒன்றும் செய்யாதே; அப்போது செய்த பிறகு அதற்காக மனம் வருந்த மாட்டாய்.

25. அழிவின் வழியில் செல்லாதே; அப்போது, கற்களில் கால் இடற மாட்டாய்; உன் ஆத்துமத்திற்கு ஓர் இடறுகல்லை நீயே ஏற்படுத்தாத படி, கரடுமுரடான வழிக்கு உன் னைக் கையளிக்காதே.

26. உன் சொந்தப் பிள்ளைகளிடம் எச்சரிக்கையாயிரு; உன் வீட்டா ரிடம் கவனமாயிரு.

27. உன் ஒவ்வொரு செயலையும் ஆத்தும விசுவாசத்தோடு செய்; ஏனெனில், அதுவே தேவ கட்டளை களை அனுசரிப்பதாயிருக்கிறது.

28. கடவுளை விசுவசிக்கிறவன் கட்டளைகளை அனுசரிப்பதில் கவனமாயிருக்கிறான்; அவரில் தன் நம்பிக்கையை வைக்கிறவன், ஒருபோதும் அதிகத் தீமையானதை எதிர்கொள்வதில்லை.