உபாகமம் - அதிகாரம் 32

மோயீசனின் கடைசி சங்கீதம்--அவன் அப்ரீம் மலைமேலேறி அவ்விடத்திலிருந்து கானான் தேசத்தைத் தரிசித்தது.

1.  நான் பேசப் போகிறேன். வானங்களே செவிகொடுங்கள். பூமியே என் வாய்மொழியை உற்றுக் கேட்பாயாக.

2. (வானத்து) மழை அபரிமிதமாய்ப் பொழிவது போல் என் உபதேசம் மென்மேலும் பொழிவதாக. பனித்துளிகள் புல்லின் மேலும் மழைத்துளிகள் மைதானத்தின் மேலும் எவ்வாறிறங்குகின்றனவோ என் வசனங்கள் அவ்வாறே இறங்குவதாக.

3. நான் கர்த்தருடைய திருநாமத்தைப் போற்றித் துதித்து வருவதால் நம்முடைய தேவனை மேன்மைப்படுத்திப் பாராட்டக் கடவீர்கள்.

4. அவரால் செய்யப் பட்ட கிரியைகள் உத்தமமானவைகள். அவருடைய வழிகளெல்லாம் நாணயமுள்ளவையே.தேவன் பிரமாணிக்கமுள்ளவர். அவருக்கு யாதொரு தோஷமுமில்லை. அவர் நீதி நிதானமுள்ள தேவன்.

5.  அவர்களோ அவருக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக் கொண்டார்கள். அவர்கள் தீட்டுள்ளவர்களாயிருக்கையிலே அவருடைய பிள்ளைகளாயிராமல் துஷ்ட தீய சந்ததியாராயிருந்தார்களே!

6. மதிகெட்ட மூட ஜனங்களே, கர்த்தருக்கு அப்படியா நன்றியறிதலாயிருக்கிறீர்கள்? உன்னை ஆட்கொண்ட பிதா அவர்தானல்லவா? உன்னைப் படைத்து உன்னை உருவாக்கித் தன் வசமாக்கினவர் அவர்தான் அல்லவா?

7. பூர்வீக நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப் பார். உன் தகப்பனைக் கேள். அவன் உனக்கு அறிவிப்பான். உன் பெரியோர்களைக் கேள். அவர்கள் உனக்கு மறுமொழி சொல்லுவார்கள்.

8. மகா உன்னதமானவர் வெவ்வேறு சாதிகளுக்கு வெவ்வேறு சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாகப் பிரித்ததால் இஸ்றாயேலின் குமாரருடைய கோத்திரத் தொகைக்குத் தக்கதாகவே எல்லாச் சாதிகளின் எல்லைகளைத் திட்டம் பண்ணினார்.

9. கர்த்தருடைய ஜனமோ அவருடைய சுதந்தரம். யாக்கோபோ அவருடைய காணியாட்சியின் சங்கிலியாம்.

10. அவர் பாழான நாட்டிலும் பயங்கரத்துக்குரிய நிர்மானு´ய விஸ்தாரமான ஸ்தலத்திலும் அவனைக் கண்டுபிடித்தார். அவர் சுற்றுவழியாய் அவனை நடத்தி உணர்த்தித் தமது கண்மணியைப் போல் அவனைக் காத்தருளினார்.

11. கழுகு தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி அவைகçள் பறக்கும்படி தூண்டுவது போலவும், தன் செட்டைகளை விரித்துக் குஞ்சுகளை அதுகளின் மேல் போட்டெடுத்துச் சுமப்பது போலவும்,

12. கர்த்தர் ஒருவரே அவனை நடத்தினார். அந்நியதேவன் அவரோடிருந்ததேயில்லை. 

13. அவர் உன்னத ஸ்தானத்தின்மேல் அவனை வைத்து, வயலில் விளையும் பலன்களை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார். கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படிச் செய்தார்.

14. பசுவின் வெண்ணெயையும், ஆடுகளின் பாலையும், பாசானின் புத்திரரு டைய ஆட்டுக்குட்டி ஆட்டுக்கடாக்களுடைய கொழுப்பையும், கொழுமையான வெள்ளாடுகளையும் உத்தமமான கோதுமையையும் சாப்பிடவும் இரத்தம் போன்ற சுயமான திராட்ச இரசத்தைப் பானஞ் செய்யவும் அவனுக்குத் தந்தருளினாரே.

15. நேசிக்கப் பட்ட (குமாரன்) கொழுத்துப் போய் உதைக்கத் துடங்கினான். அவன் கொழுத்து ஸ்தூலித்து நிணம் துன்னின போது தன்னை இரட்சிக்கும் தேவனுக்குப் புறங்காட்டி விலகினான்.

16. அந்நிய தேவர்களைச் சேவித்ததினாலே அவர்கள் அவருக்கு எரிச்சலை மூட்டி, அருவருப்பானவைகளால் அவரைக் கோபத்திற்குத் தூண்டி விட்டார்கள்.

17. அவர்கள் தேவனுக்குப் பலியிடுவதை விட்டு விட்டுத் தாங்கள் அறியாத தேவர்களாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். நூதனமாய்த் தோன்றிய, அவர்களின் பிதாக்கள் கும்பிடாத புதுத் தெய்வங்களுக்கே (பூசை பண்ணினார்கள்.)

18. (மூர்க்கனே) உன்னைப் பெற்ற தேவனை விட்டு உன்னை ஜெனிப்பித்த கர்த்தரை மறந்து விட்டாயே.

19. கர்த்தர் அதைக் கண்டார். அவருடைய புத்திரரும், புத்திரிகளும் அவருக்குக் கோபம் மூட்டி அவரைத் தூண்டுவதினிமித்தம் அவர் குரோதமுள்ளவராகி,

20. ஆ! ஆ! இவர்கள் கெட்டார்கள். வஞ்சனையுள்ள குமாரர்கள் ஆனார்கள். ஆதலால் நம் முகத்தை அவர்களுக்கு மறைத்து அவர்களுடைய முடிவு எப்படிப் பட்டதாயிருக்குமோவென்று பார்ப்போம்.

21. அவர்கள் தெய்வமல்லாதவைகளாலும் நமக்கு எரிச்சல் வரப்பண்ணித் தங்கள் வியர்த்தமான துர்க்கிரியைகளினாரும் நமக்கு முடிவு உண்டாகச் செய்தார்களே; இதோ நாம் ஜனமென்று மதிக்கப் படாத ஜனத்தின் மூலமாய் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி மதிகெட்ட சாதியார்களாலேயே அவர்களுக்குக் கோபம் உண்டாகப் பண்ணுவோம்.

22. நம்முடைய கோபத்தின் அக்கினியே மூண்டது. அது நரகத்தின் அடிமட்டும் எரியும். அது பூமியையும் அதின் விளைச்சலையும் பட்சிக்குமன்றி மலைகளின் அஸ்திவாரங்களையும் வேகப் பண்ணும்.

23. நாம் நானாவிதத் தீங்குகளை அவர்கள் மேல் குவியப் பண்ணி, நம்முடைய அம்புகளையயல்லம் அவர்கள் மேல் பிரயோகித்துத் தீர்ப்போம்.

24. அவர்கள் பசிமிகுதியால் வாடி மடிந்து போவார்கள். பட்சிகள் தங்கள் கொடிய மூக்கினால் அவர்களைக் கொத்தித் தின்னும். அவர்களை வாதிக்கக் கூரிய பற்களையுடைய துஷ்ட செந்துக்களையும், பூமியில் ஊரும் எரிபூச்சிகளையும், சர்ப்பங்களையும் அவர்களிடத்தில் விடுவோம்.

25. வெளியிலே பட்டயம், உள்ளே மகா பயம், வாலிபனையும் கன்னியையும் ஒஞ்சியுண்ணும் குழந்தையையும், கிழவனையும் அழிக்கும்.

26. நாம்: அவர்கள் எங்கே? என்றோம். மனிதருக்குள் அவர்கள் பெயர் முதலாய் அற்றுப் போகும்படி செய்வோமே.

27. ஆனால் சத்துருக்களுடைய குரோதத்தைப் பற்றி நாம் பொறுத்து விட்டோம். சிலவிசை அவர்கள் ஆங்காரங் கொண்டு இந்தச் சகல காரியங்களையும் நாங்கள் பலத்த சுய கையினாற் செய்தோமேயன்றிக் கர்த்தர் அவைகளைச் செய்தவரல்லரென்று வீம்பு சொல்லக் கூடும்.

28. அவர்கள் மதிகெட்ட விவேகமற்ற சாதியல்லவா?

29. ஆ! அவர்கள் ஞானத்தை அடைவது எப்போதோ? அவர்களுக்கெப்போதோ அறிவு உண்டாகும்? தங்களுக்கு என்ன கதி வரப் போகிறதென்று அவர்கள் யோசிக்காதிருக்கிறதென்ன?

30. ஒருவன் ஆயிரம் பேர்களையும் துரத்துவது சாத்தியமானதோ? இரண்டு பேர் பதினாயிரம் வீரரையும் தோற்கடிக்கக் கூடுமானதோ? அவர்களுடைய தேவன் அவர்களை ஒப்புக்கொடுத்ததினாலும் கர்த்தர் அவர்களை அடைத்ததினாலும் தானே அது சம்பவிக்கக் கூடும்!

31 அவர்கள் தெய்வம் போல் அல்ல நம்முயை தேவன். இது உண்மையயன நம் சத்துருக்களே சாட்சியாயிருக்கின்றனர்.

32. அவர்களுடைய திராட்சக் கொடி சொதோமிலும், கொமோராப் பட்டணத்திலும் பயிராகிவிட்டது. அவர்களுடைய திராட்சப் பழம் பிச்சுப் பழமே. அவர்களுடைய திராட்சக் குலைகள் கைப்பும் கசப்புமுள்ளவைகளே.

33. அவர்களுடைய திராட்ச இரசம் வலுசர்ப்பங்களின் பித்தமும், கத்தரிப் பாம்புகளின் கொடிய விஷமும் போலாம்.

34. இது நம்மிடத்தில் அடைக்கப் பட்டு நம் பொக்கிஷங்களில் வைத்து முத்திரை போடப் பட்டிருக்கிறதல்லவா? 

35. பழிக்குப் பழி வாங்குவதும், ஏற்ற காலத்தில் அவர்களுக்குக் கால் தள்ளாடச் செய்து பதிலுக்குப் பதில் அளிப்பதும், நம்முடைய தொழிலே! அவர்களுடைய அழிவு நாள் இதோ சமீபித்திருக்கிறது. குறிக்கப் பட்ட காலங்கள் ஓடிவருகின்றனவே.

36. கர்த்தர் தம் ஜனத்தை நியாயந்; தீர்த்துத் தம்மை நேசித்துச் சேவித்தவர்களின் மேல் மனமிரங்குவார். அவர்களுக்குக் கை தளர்ந்ததென்றும், அடைக்கப்பட்டவர்கள் முதலாய்ச் சோர்ந்து போனார்கள் என்றும், மீதியானவர்கள் சோ´த்துச் சிதைந்தார்கள் என்றும் காண்பார்.

37. அப்பொழுது அவர்: அவர்கள் நம்பிக் கொண்டிருந்த தேவர்களெங்கே?

38. இவர்களுக்கு அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்றார்களே. பானப்பலிகளின் திராட்ச இரசத்தைக் குடித்தார்களே. இப்போது (அந்தத் தேவர்கள்) எழுந்து நெருக்கத்தில் அகப்பட்ட உங்களுக்குச் சகாயம் பண்ணட்டும் (பார்ப்போம்.)

39. யோசனை பண்ணுங்கள். நாம் மட்டும் இருக்கிறோம். நம்மை விட வேறு தேவனில்லை. நாம் மட்டும் கொல்லுகிறோம். உயிர்ப்பிக்கிறோம். நாம் மட்டும் காயப்படுத்திக் காயப் பட்டவனைச் சொஸ்தமாக்குகிறோம். நம் கையில் அகப்பட்டோரைத் தப்புவிப்பாரில்லை.

40. நம் கரத்தை வானத்திற்குத் தூக்கி: இதோ நாம் நித்தியகாலமாய் ஜீவித்திருக்கிறவர் என்போம்.

41. நாம் மின்னலைப் போல் நமது பட்டயத்தைக் கூராக்கி, நம் கரத்தால் நியாயத்தைப் பிடித்து வருவோமாகில் நம் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி நம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பதில் அளிப்போம் அன்றோ?

42. கொலையுண்ட பேர்களின் இரத்தத்தைப் பற்றியும் சிறைப்பட்ட மொட்டையரான பகைஞரைப் பற்றியும் நம் அம்புகளை இரத்த வெறியாக்கி நம் பட்டயம் மாம்சங்களைப் பட்சிக்கச் செய்வோம்.

43. ஜனங்களே அவருடைய பிரஜையைப் போற்றி ஸ்துதியுங்கள். ஏனெனில் அவர் தம் ஊழியர்களின் இரத்தத்திற்குப் பழி வாங்கி, அவர்களுடைய சத்துருக்களுக்குப் பதில் அளித்துத் தம் ஜனத்தின் தேசத்தின் மேல் கிருபையுள்ளவராவாரே என்றனன்.

44. மோயீசனும் நூனின் குமாரன் ஜோசுவாவும் வந்து இந்தச் சங்கீதத்தின் வசனங்களையயல்லாம் ஜனங்கள் கேட்கத் தக்கதாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

45. பேசிமுடித்தபிறகு மோயீசன் இஸ்றாயேல் சபையார் எல்லோரையும் நோக்கி:

46. இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளை எல்லாம் கவனித்துக் கற்றுக் கொள்ளக் கடவீர்கள். உங்கள் பிள்ளைகள் அவைகளைக் கைக்கொண்டு அநுசரிக்கும்படி சாக்கிரதையாயிருக்கச் சொல்லுங்கள். இந்த நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்ட கமஸ்த வார்த்தைகளின்படி நடந்து கொள்ள வேணுமேன்று கற்பிக்கக் கடவீர்கள். அவையும் உண்மையானவையயன்று நானே சாதிக்கிறேன்.

47. அவைகள் உங்களுக்குக் கற்பிக்கப் பட்டது வியர்த்தமல்ல. உங்களுக்கு அவைகள் ஜீவனாயிருக்கும்படியாகவும், நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கும் பொருட்டுப் பிரவேசிக்கப் போகிற தேசத்தில் நீடூழியாய் வாழும்படியாகவுமே (அந்தப் பிரமாணத்தின் கட்டளைகள் விதிக்கப் பட்டன.) என்று சொல்லிப் பேசி முடித்தான்.

48. அந்த நாளில்தானே கர்த்தர் மோயீசனை நோக்கி:

49.  நீ எரிக்கோ (பட்டணத்திற்கு) எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அப்ரீம், அதாவது: கடத்தலென்னப் பட்ட மலைகளில் நெபோ பர்வதத்தின் மேலேறி நாம் இஸ்றாயேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கப் போகிற கானான் தேசத்தைப் பார்த்து அவ்விடத்தில்தானே உயிரை விடுவாய்.

50-51-52. உள்ளபடி நீயும் ஆரோனும் இருவரே சின் வனாந்தரத்திலுள்ள காதேசில் வாக்குவாதத் தண்ணீர் என்னும் ஸ்தலத்திலே நமக்கு விரோதமாய் நடந்து இஸ்றாயேல் புத்திரர் நடுவிலே நம்மைப் பரிசுத்தம் பண்ணாமல் நம் கட்டளையை மீறினதினாலே, உன் சகோதரனாகிய ஆரோன் ஓர்ப் என்னும் மலையிலே மரித்துத் தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப் பட்டது போல, நீயும் ஏறப் போகிற மலையில் ஏறிப்போய், மரித்து உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப் படுவாய். நான் இஸ்றாயேல் புத்திரருக்குக் கொடுக்கப் போகிற தேசத்தை நீ தரிசிப்பாய். தரிசித்தாலும் அதற்குள் நீ பிரவேசிப்பாயில்லையயன்று திருவுளம்பற்றினார்.