அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 31

சவுலின் தற்கொலை.

1. அது நிற்க, பிலிஸ்தியர் இஸ்றாயேலரோடு யுத்தம் பண்ணினார்கள். இஸ்றாயேல் மனிதர்கள் பிலிஸ்தியருக்கு முன்பாக முறிந்தோடி கொல்போயே மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்.

2. பிலிஸ்தியர் சவுல் மேலும், அவன் மக்கள் மேலும் விழுந்து சவுலின் குமாரர் களாகிய ஜோனத்தாசையும், அபின தாபையும், மெல்கிசுவாவையும் வெட் டிப் போட்டார்கள்.

3. சவுல் இருந்த ஸ்தலத்தில் சண்டை மிகவும் உறுத்துப் போயிற்று; வில் வீரர் கள் அவனைத் துடர்ந்தார்கள். அவன் அவர்களாலே கடின காயம்பட்டான்.

4. அப்பொழுது சவுல் தன் ஆயுத தாரியை நோக்கி: அந்த விருத்த சேதன மில்லாதவர்கள் சிலவிசை வந்து என்னை அவமானப்படுத்தியே என்னைக் கொல் லுவார்கள். அது நடவாதபடிக்கு நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப் போடு என்றான். ஆயுததாரி அதிக பயங் கொண்டதினாலே அப்படிச் செய்ய மாட் டேனென்றான். ஆகையால் சவுல் தன் பட்டணத்தைத் தரையில் குத்திட்டு வைத் துத் தானாகவே அதின்மேல் விழுந் தான். 

5. ஆயுததாரி சவுல் மரித்ததாகக் கண்ட போது அவனுந் தன் பட்டயத் தின்மேல் விழுந்து அவனோடுகூடச் செத்துப் போனான்.

6. ஆகையால் அன்றையத்தினஞ் சவுலும் அவனுடைய மூன்று குமாரர் களும், அவனுடைய ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனிதர்களும் ஒருமிக்க மரித்தார்கள்.

7. அது போதாமல் இஸ்றாயேலியர் ஓடிப்போனார்கள் என்றும், சவுலும் அவன் குமாரர்களும் மரித்தார்களென் றும் பள்ளத்தாக்குக்கு அந்தண்டையும் யோர்தானுக்கு இந்தண்டையும் இருந்த இஸ்றாயேல் குமாரர் கண்டபோது அவர் கள் தங்கள் பட்டணங்களை விட்டு ஓடிப் போனார்கள். அப்போது பிலிஸ்தியர் வந்து அவைகளிலே குடி ஏறினார்கள்.

8. மறுநாள் பிலிஸ்தியர் வெட்டுண் டவர்களை உரிந்து கொள்ளையிட வந்து சவுலும் அவனுடைய மூன்று மக்களும் கெல்போயே மலையில் விழுந்து கிடக் கிறதைக் கண்டார்கள்.

9. சவுலின் தலையை வெட்டி அவன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்கள் விக்கிரகங்களுடைய கோவி லிலுஞ் சனங்களுக்குள்ளுஞ் செய்தியைப் பிரசித்தப்படுத்தும் பொருட்டு அவை களைப் பிலிஸ்தியர் தேசமெவ்விடத் துக்கும் அனுப்பினார்கள்.

10. கடைசியிலே அவர்கள் அவன் ஆயுதங்களை அஸ்தாரோத் என்னும் விக்கிரகத்தின் ஆலயத்திலே வைத்து அவன் உடலைப் பெத்சான் பட்டணத்து அலங்கத்திலே தூக்கிப் போட் டார்கள். 

11. பிலிஸ்தியர் சவுலுக்குச் செய் தவைகளைக் கலாட் தேசத்து யாபேஸ் குடிகள் கேள்விப்பட்ட போது, 

12. அதிக பலசாலியானவர்கள் எல் லாரும் எழுந்து இரா முழுதும் நடந்து போய் பெத்சானின் அலங்கத்திலிருந்து சவுலின் சடலத்தையும், அவன் குமாரர் கள் சடலங்களையும் எடுத்துக் கலாதி லிருந்த யாபேசுக்கு வந்து அவைகளை அங்கு சுட்டெரித்துப் போட் டார்கள்.

13. பின்பு அவர்களுடைய எலும்பு களைப் பொறுக்கி எடுத்து யாபேஸ் நாட்டில் அடக்கம் பண்ணி ஏழு நாள் பரியந்தம் உபவாசமாயிருந்தார்கள். அரசராகமம் முதல் புத்தகம் முற்றிற்று.