உபாகமம் - அதிகாரம் 30

யூதர்கள் மனந்திரும்புவார்கள், அப்போது தேவன் அவர்கள் மீதிரங்குவார்,-தேவனுடைய கட்டளைகளை அனுசரிப்பது மனுஷனுக்கு அசாத்தியமானதல்ல.--நல்லவர்களுக்கு நன்மையும் தீயோர்களுக்குத் தீமையும் வரும்.

1. ஆகையால் நான் உன் கண்களுக்கு முன் எடுத்துக் காட்டிய ஆசீர்வாதத்திற்கும் அல்லது சாபத்திற்கும் அடுத்த இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் நடந்தேறின பின்பு உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதறடித்த எல்லாச் சாதிகளுக்குள்ளிருந்து நீ உன் இருதயத்தில் மனஸ்தாபப் பட்டு,

2. அவரிடத்திற்கே திரும்பி இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடி நீயும் உன் பிள்ளைகளும் முழு இருதயத்துடனும், முழு ஆத்துமத்துடனும், அவருடைய கட்டளைகளை அனுசரித்து நிறைவேற்றுவீர்களேயாகில்,

3. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறையினின்று விடுதலையாக்குவார். அவர் உனக்கிரங்கி உன்னைச் சிதறடித்த எல்லா ஜனங்களிடத்திலும் நின்று உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளுவார்.

4. நீ வானத்தின் கடையயல்லைகள் மட்டுஞ் சிதறுண்டிருந்தாலும் உன் தேவனாகிய கர்த்தர் அங்கேயிருந்து உன்னைக் கூட்டிக் கொண்டு வருவார்.

5. அவர் உன்னை எடுத்து உன் பிதாக்கள் சுதந்தரித்துக் கொண்ட தேசத்தில் உன்னைச் சேர்த்து அதைச் சுதந்தரிக்கப் பண்ணி, தம் ஆசீர்வாதத்தினால் உன் பிதாக்களைப் பார்க்கிலும் உன்னை அதிகமாய்ப் பெருகச் செய்வார்.

6. மீளவும் நீ பிழைக்க வேண்டுமென்று உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் சிநேகிக்கக் தக்கதாக உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததி யாரின் இருதயத்தையும் விருத்தசேதனம் பண்ணி,

7. இந்தச் சாபங்களையயல்லாம் உன் சத்துருக்களின் மேலும் உன்னைப் பழித்து உபாதித்த உன் பகையோர்களின் மேலும் விழப் பண்ணுவார்.

8. நீயோ மனந்திரும்பினவனாய் உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்çக் கேட்டு, இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கற்பனைகளின்படியயல்லாம் நடப்பாய்.

9. அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனிகளிலும், உன் மிருகஜீவனின் பலன்களிலும், உன் நிலத்தின் விளைவுகள் முதலிய சகல நன்மைகளிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார். ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களின் மீது சந்தோஷப்பட்டது போல உன்னிடத்திலும் பிரியப்பட்டு எல்லா நன்மைகளையும் அபரிமிதமாய் உனக்கு அருளிச் செய்யும்படித் திரும்பி வருவார்.

10. ஆனால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்துக்குச் செவிகொடுத்து, இந்தப் பிரமாணத்தில் எழுதப்பட்ட அவருடைய கற்பனைகளையும், ஆசாரமுறைமைகளையும் கைக்கொண்டு அனுசரித்து, உன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பினால் அல்லோ (முன் குறிக்கப் பட்ட நன்மைகளைப் பெறுவாய்.)

11. இன்று நான் உனக்குக் கற்பிக்கின்ற இக்கற்பனை உன் சத்துவத்துக்கு மேற்பட்டதுமல்ல, உனக்குத் தூரமானதுமல்ல,

12. நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதின்படி செய்யும்பொருட்டு எங்கள் நிமித்தம் வானத்திலேறிக் கொண்டுவரத் தக்கவன் ஆர் என்று நீ சொல்லாதபடிக்கு (அந்தக் கற்பனை) வானத்தில் வைக்கப்பட்டதுமல்ல,

13. நாங்கள் அதைக் கண்டுபிடித்து அதின்படி நடக்கும் பொருட்டு எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைத் தாண்டிக் கொண்டு வரத்தக்கவன் ஆர் என்று நீ சாக்குப் போக்காய்ச் சொல்லாதபடிக்கு (அந்தக் கற்பனை) சமுத்திரத்தின் அப்புறத்தில் வைக்கப்பட்டதுமல்ல.

14. நீ அந்தக் கற்பனையின்படி நடக்கும் பொருட்டு அது உனக்கு மிகவும் சமீபமாயிருக்கிறது. அது உன் வாயிலும் உன் இருதயத்திலும் உண்டு.

15. இன்று நான் ஒரு பக்கத்திலே ஜீவனையும், நன்மையையும், மற்றொரு பக்கத்திலே மரணத்தையும், தின்மையையும் வைத்து உனக்குக் காண்பித்தேனென்று யோசித்துப் பார்.

16. நீ பிழைத்துப் பெருகும்படிக்கும் நீ சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும் நீ அவரிடத்தில் அன்புகூரவும், அவருடைய வழிகளில் நடக்கவும் அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும், இரீதி ஆச்சாரங்களையும் கைக்கொண்டு அநுசரிக்கவும் கடவாய்.

17. ஆனால் உன் இருதயம் பேதலித்து நீ உன் காதை அடைத்து மதிமயங்கிப் பொய்யைப் பின்பற்றி அந்நிய தேவர்களைப் பணிந்து சேவிப்பாயாகில்,

18. நீ அழிந்து போவாயயன்றும், யோர்தானைக் கடந்து நீ சுதந்தரிக்கிறதற்குப் பிரவேசிக்கப் போகிற தேசத்திலே கொஞ்ச காலத்தில் மடிவாயயன்றும் இன்று நான் உனக்கு முன்னறிவித்துச் சொல்லுகிறேன்.

19. நான் ஜீவியத்தையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உங்களுக்கு முன்வைத்துக் காட்டினேன் என்று வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன். ஆதலால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கத் தக்கதாகவும்,

20. உன் ஜீவனும் உன் தீர்க்க ஆயுளுமானவராகிய கர்த்தர் அபிரகாம், இசாக், யாக்கோப் என்னும் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுப்பேனென்று சொல்லிய தேசத்திலே நீ குடியேறத் தக்கதாகவும், நீ ஜீவனைத் தெரிந்து கொண்டு உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து அவருடைய திருவுளத்திற்கு அமைந்து அவரைப் பற்றிக் கொள்ளக் கடவாயாக.