அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 29

பிலிஸ்தியரால் தாவீது கைவிடப்பட்டது.

1. பிலிஸ்தியர் படைகளெல்லாம் அபேக்கில் கூடின; ஆனால் இஸ்றாயேலர் ழெஸ்றாயேலிலிருந்த துரவு அண்டை யில் பாளையம் இறங்கினார்கள்.

2. பிலிஸ்தியர் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேவகர்களோடு நடந்து போவார்கள். தாவீதும் அவனுடைய மனுஷர்களும் ஆக்கீசோடு கடைத் தண்டிலிருந்தார்கள்.

3. பிலிஸ்தியர் அதிபதிகள் ஆக்கீசை நோக்கி: இந்த எபிறேயர் என்னத்துக்கு என்றார்கள். ஆக்கீசு பிலிஸ்தியர் அதிபதி களை நோக்கி: இஸ்றாயேலரின் அரசனான சவுலுடைய ஊழியனாயிருந்த இந்தத் தாவீது வெகு நாள் வெகு வருஷமாய் என்னோடு இருக்கிறான். நீங்கள் அவனை அறியாதிருக்கிறீர்களா? அவன் என்னிடத்தில் வந்த நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் ஒரு குற்றமும் நான் அவனில் கண்டதில்லை என்றான்.

4. பிலிஸ்தியரின் பிரபுக்கள் மிகவுங் கோபங் கொண்டு அவனை நோக்கி: இந்தத் தாவீதை நீர் எந்த ஊரில் ஸ்தாபித் திருந்தீரோ அந்த ஊருக்கு அவன் திரும்பிப் போக வேண்டும். நம்மோடு கூட அவன் யுத்தத்திற்கு வரலாகாது. யுத்தம் ஆரம்பித்தபோத அவன் நமக்கு எரியாகிவிடக் கூடுமல்லோ? உள்ளபடி அவன் எதினாலே தன் ஆண்டவனோடு ஒப்புரவாவான்? நம்முடைய தலைகளி னால் அல்லவா?

5. சவுல் ஆயிரம் பேரைக் கொன் றான், தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றானென்று சொல்லி இஸ்றாயே லியர் ஆடிப்பாடி ஸ்துதித்தார்களே. இவன் அந்தத் தாவீது தானல்லவா வென்று சொன்னார்கள்.

6. ஆக்கீசு தாவீதை அழைத்து அவனை நோக்கி: கர்த்தருடைய ஜீவ னாணை! நீர் உத்தமன். என் சமுகத் துக்கு நல்லவராயிருக்கிறீர்; நீர் பாளை யத்தில் என்னோடுகூட போக்கும் வரத்து மாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது. நீர் என்னிடத்தில் வந்த நாள் முதற் கொண்டு இந்நாள் பரியந்தம் உம்மில் தின்மையானது நான் ஒன்றுங் கண்ட தில்லை.

7. ஆகையால் நீர் பிலிஸ்தியப் பிரபுக் களுக்கு இடறு கட்டையாகாதபடிக்கு  இப்போதே சமாதானமாய்ப் போய்விடு மென்றான்.

8. தாவீது ஆக்கீசை நோக்கி: ஏன்! நான் செய்தது என்ன? நான் வந்து இராசாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடு யுத்தம் பண்ணாத படிக்கு நான் உம்மிடத்தில் வந்த நாள் முதற்கொண்டு இந்நாள் பரியந்தம் உமது தாசனாகிய என்னிடத்தில் என்ன குற்றங் கண்டீரென்றான்.

9. ஆக்கீசு தாவீதைப் பார்த்து தேவனுடைய சம்மனசைப்போலே நீர் என் பார்வைக்கு நல்லவராயிருக்கிறீ ரென்று எனக்குத் தெரியும்; ஆனாலும் இவன் எங்களுடன் யுத்தத்திற்கு வர லாகாதென்று பிலிஸ்தியரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.

10. ஆகையால் நீரும் உம்முடன் வந்த உம் ஆண்டவருடைய ஊழியர் களும் நாளை அதிகாலையில் எழுந்திருங்கள்; இப்படி இராத்திரியில் எழுந்து விடியத் துவக்கும் நேரத்திலே நீங்கள் புறப்பட்டுப் போவீர்களென் றான்.

11. அப்படியே தாவீதும் அவனு டைய மனிதர்களும் அதிகாலையில் எழுந்து பிலிஸ்தியர் நாட்டுக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டார்கள். பிலிஸ்தியரோ ழெஸ்றாயேலுக்குப் போனார்கள்.