சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 28

பழிவாங்காதிருப்பதும், மன்னிப்பு அளிப்பதும்

1. பழிவாங்கத் தேடுகிறவனை ஆண்டவர்தாமே பழிவாங்குவார். அவனது பாவங்களை அவர் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்.

2. உன் அயலான் உன்னை நோகச் செய்திருந்தால் அவனை மன்னித்து விடு. அப்போதுதான், நீ ஜெபிக்கும் போது உன் பாவங்கள் மன்னிக்கப் படும்.

3. மனிதனுக்கு மனிதன் கோப வைராக்கியம் கொள்கிறான், அப்படி யிருக்க அவன் கடவுளின் மன்னிப் பைத் தேடுகிறானா?

4. தன்னைப்போன்ற மனிதனுக்கு அவன் இரக்கம் காட்டுவதில்லை; அப்படியிருக்க, அவன் தன் பாவங்களின் மன்னிப்பிற்காக மன்றாடுகிறானா?

5. அழிவுக்குரிய மாம்சமாக மட்டுமே இருக்கிறவன் கோபத்தைப் போஷித்து வளர்க்கிறான்; அப்படியிருக்க, அவன் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறானா? அவனுடைய பாவங்களின் மன்னிப்புக்காக மன்றாடுகிறவன் யார்?

6. உன் கடைசிக் காரியங்களை நினைத்துக்கொள், பகைமை நின்று போகட்டும்.

7. சர்வேசுரனுடைய கட்டளைகளின் மீது அழிவும் மரணமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. 

8. தெய்வபயத்தை நினைத்துக் கொள்; உன் அயலான்மீது கோபங் கொள்ளாதே.

9. உன்னதக் கடவுளின் உடன் படிக்கையை நினைத்துக்கொள்; உன் அயலானின் அறியாமையைச் சட்டை பண்ணாதே.

10. சண்டையைத் தவிர்த்துவிடு! அப்போது உன் பாவங்களைக் குறைப்பாய்.

11. ஏனெனில், கோபமுள்ளவன் சண்டை மூட்டுகிறான்; பாவமுள்ள மனிதன் தன் நண்பர்களைக் கசங்கச் செய்வான்; சமாதானமுள்ளவர்கள் நடுவில் வாக்குவாதத்தை விளைவிக் கிறான்.

12. ஏனெனில், காட்டின் மரங்கள் எப்படியோ, அப்படியே அக்கினி பற்றியெரியும்; மனிதனின் பலம் எப்படியோ, அப்படியே அவன் கோபமுமிருக்கும்; தன் செல்வங் களுக்குத் தக்கபடியே அவன் தன் கோபத்தைப் பெருகச் செய்வான்.

13. அவசரப்பட்டுச் செய்யும் வாக்குவாதம் நெருப்பை மூட்டு கிறது; அவசரச் சண்டை இரத்தத் தைச் சிந்துகிறது; சாட்சி சொல்லும் நாவு சாவைக் கூட்டி வருகிறது.

14. தீப்பொறியை ஊதினால் அது பற்றிக்கொள்ளும்; அதன் மீது துப்பி னால் அது அணைக்கப்படும்; இரண் டும் வாயினின்று புறப்படுகின்றன.

15. புறணி சொல்கிறவனும், இரட்டை நாக்குள்ளவனும் சபிக்கப் பட்டவர்கள்; ஏனெனில், இவர்கள் சமாதானமுள்ள அநேகரைக் கலக்கத்திற்கு உட்படுத்தினார்கள்.

16. மூன்றாவது மனிதனின் நாவு பலரின் மன அமைதியைக் கெடுத் தது; அவர்களை நாட்டுக்கு நாடு சிதறடித்தது.

17. அது செல்வந்தர்களின் பல முள்ள நகரங்களை அழித்தது; பெரிய மனிதர்களின் வீடுகளை விழத் தாட்டியது.

18. அது மக்களினங்களின் படைகளைத் துண்டு துண்டாக வெட்டியது, பலம் மிக்க நாடுகளைப் பலமற்றவை ஆக்கியது.

19. மூன்றாம் மனிதனின் நாவு வீரமிக்க பெண்களை வீழ்த்தியது; அவர்களது உழைப்புகளின் பலனை அவர்கள் பெறாமல் தடுத்தது.

20. அது சொல்வதைக் கேட்பவன் ஒருபோதும் இளைப்பாற்றிஉ அடையமாட்டான்; யாரில் தான் இளைப்பாற்றியைக் கொண்டிருக்க முடியுமோ அப்படிப்பட்ட ஒரு நண்பனையும் கொண்டிருக்க மாட் டான்.

21. கசையடி தழும்பு உண்டாக்கு கிறது; நாவின் அடியோ, எலும்பு களை முறித்து விடும்.

22. வாள் முனையால் அநேகர் இறந்தார்கள்; ஆனால் தங்கள் நாவால் மாண்டவர்களை விட இவர்கள் அதிகமல்ல.

23. தீய நாவினின்று காக்கப்படு கிறவனும், அதன் கோபத்திற்குள் அகப்படாதவனும், அதன் நுகத் தடியை இழுக்காதவனும், அதன் சங்கிலிகளால் கட்டப்பட்டிராதவனும் பாக்கியவான்.

24. ஏனெனில், அதன் நுகத்தடி இரும்பு நுகத்தடியாயிருக்கின்றது; அதன் கட்டுகள் வெண்கலக் கட்டுகளாகும்.

25. அதனால் வரும் சாவு, மிகவும் அவலமான சாவு; அதைவிடப் பாதாளமே மேல்.

26. அது நீண்டகாலம் தொடராது; ஆனால் அது அநீதருடைய வழிகளைக் கொண்டிருக்கும்; நீதிமான்கள் அதன் அக்கினியால் எரிக்கப்பட மாட்டார்கள்.

27. கடவுளைக் கைவிட்டவர்கள் அதில் விழுவார்கள்; அவர்களிடம் அது எரியும், அணைக்கப்படாது; அது சிங்கத்தைப்போல அவர்கள் மேல் ஏவப்படும்; சிறுத்தையைப் போல் அவர்களைக் கிழித்துப் போடும்.

28. உன் செவிகளை முட்களால் அடைத்துக்கொள்; தீய நாவு சொல்வதைக் கேளாதே; உன் வாய்க்குக் கதவுகளும், தாழ்ப்பாள்களும் போடு.

29. உன் பொன்னையும் உன் வெள்ளியையும் உருக்கி, உன் வார்த்தைகளுக்கு ஒரு தராசும், உன் வாய்க்கு நீதியான கடிவாளங்களும் செய்துகொள்.

30. வாய் வார்த்தையால் கெட்டு உனக்காகப் பதிவிருக்கும் உன் எதிரிகளின் பார்வையில் நீ விழுந்து விடாதபடியும், உன் வீழ்ச்சி மரணத் திற்கு ஏதுவாக குணப்படுத்தப்பட இயலாததாகவும் இராதபடி விழிப்பாயிரு.