அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 26

சவுல் மறுபடியும் தாவீதைக் கொல்லத் தேடியது.

1. ஜீப் ஊரான் காபாவிலிருந்த சவுல் அண்டைக்கு வந்து: இதோ தாவீது வனாந்தரத்துக்கு எதிரான அக்கிலா குன்றின் ஒளிந்திருக்கிறானென்று சொன் னார்கள்.

2. சவுல் எழுந்து ஜீப் வனாந்தரத்திற் குப் புறப்பட்டான். இஸ்றாயேலில் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் மனிதர்கள் அவனோடு ஜீப் வனாந்தரத் தில் தாவீதைத் தேடப் போனார்கள்.

3. சவுல் வனாந்தரத்துக்கு எதிரே அக்கிலா வழியண்டையிலிருந்த காபா விலே பாளையம் இறங்கினான். ஆனால் தாவீது வனாந்தரத்தில் தங்கியிருந்தான். சவுல் தன்னைத் துடர்ந்து வனாந்தரத்தில் வருகிறதாகக் கேள்விப்பட்டு,

4. வேவுக்காரரை அனுப்பி, சவுல் அங்கு வந்தது நிச்சயமென்று அறிந்து கொண்டான்.

5. அப்பொழுது தாவீது இரகசிய மாய் எழுந்து சவுலிருந்த இடத்துக்கு வந்தான். சவுலும் அவன் படைத்தலை வனாகிய நேர் குமாரனான அப்நேரும் நித்திரை செய்யும் இடத்தை விசாரித்து சவுல் கூடாரத்தில் நித்திரை செய்கிற தையும், மீதியாகிய சனங்கள் அவனுக்குச் சுற்றிலும் நித்திரை செய்கிறதையுங் கண்டு,

6. தாவீது எத்தேயனாகிய அக்கிமெ லேக்கையும், ஜோவாபின் சகோதரனுஞ் சர்வியாவின் குமாரனுமாகிய அபிசாயி யையும் நோக்கி: என்னுடன் சவுல் இடத்திற்குப் பாளையத்தில் இறங்கு கிறவன் ஆரென்று கேட்டான். அதற்கு அபிசாயி நான் உம்முடன் இறங்கி வரு கிறேனென்றான்.

7. அப்படியே தாவீதும் அபிசாயியும் இராத்திரியிலே சனங்கள் இருந்தவிடத் திற்கு வந்து சவுல் தன் கூடாரத்தில் படுத்து நித்திரை செய்கிறதையும், அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி தரை யில் குத்தியிருக்கிறதையும், அப்நேரும் மற்றச் சனங்களும் அவனைச் சுற்றிலும் நித்திரை செய்கிறதையுங் கண்டார்கள்.

8. அபிசாயி தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உமது கையில் ஒப்புக்கொடுத்தார். இந் நேரம் நான் அவனை ஈட்டியினாலே இரண்டு குத்தாகக் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்திலுருவக் குத்தப் போகி றேனென்றான்.

9. தாவீது அபிசாயியை நோக்கி: அவரைக் கொல்லாதே, ஆண்டவ ருடைய கிறீஸ்துவின் மேல் கை நீட்டு பவன் எவனோ அவன் குற்வாளியாவா னன்றோவென்று சொன்னான்.

10. மேலும் தாவீது: கர்த்தர் அவரை யடித்து அல்லது காலம் வந்ததினாலே அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்தில் இறங்கி மாண்டாலொழிய,

11. நான் கர்த்தருடைய கிறீஸ்துவின் மேல் என் கை நீட்டாதபடி கர்த்தர் எனக்குத் தயவாயிருப்பாராகவென்று சொல்லி, கர்த்தரின் ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சபதங் கூறினான். இப் போது அவர் தலைமாட்டிலிருக்கிற ஈட்டி யையும், ஜல பாத்திரத்தையும் நீ எடுத்துக் கொள், போவோமென்று மறுவுத்தாரஞ் சொன்னான்

12. ஆகையால் தாவீது ஈட்டியையும், சவுல் தலைமாட்டிலிருந்த ஜல பாத்திரத் தையும் எடுத்துக் கொண்ட மாத்திரத்தில் இருவரும் புறப்பட்டுப் போய்விட்டார் கள். ஒருவரும் விழித்துக் கொள்ளவு மில்லை, கண்டதுமில்லை, கேட்டது மில்லை, கர்த்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நித்திரையை அனுப்பியிருந்தபடியால் அவர்கள் எல்லோருந் தூங்கிக் கொண் டிருந்தார்கள்.

13. தாவீது அப்பாலே கடந்து சற்றுத் துலைவிலிருந்த மலையின் கொடுமுடி யிலே சேர்ந்து இவர்களுக்கும் அவர் களுக்குந் தூரமென்று கண்டு,

14. அவ்விடத்திலிருந்து தாவீது சனங்களையும், நேர் குமாரனாகிய அப்நேரையுங் கூப்பிட்டு: அப்நேரே நீர் மறுமொழி சொல்ல மாட்டீரோ என்றான். அதற்கு அப்நேர்: கூவுகிறவ னாகிய நீர் ஆர்? அரசனைத் தொந்தரவு பண்ணுகிறவன் ஆரென்று கேட்டான்.

15. தாவீது அப்நேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்றாயேலில் உமக்குச் சரியொத்தவரார்? பின்னும் நீர் உம் முடைய ஆண்டவனாகிய இராசாவை ஏன் காக்கவில்லை? ஜனங்களில் ஒருவன் உமது ஆண்டவனாகிய இராசாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.

16. தேவ ஜீவனைக் கொண்டு நீர் செய்தது நல்லதல்ல. கர்த்தருடைய கிறீஸ்துவாகிய உங்கள் ஆண்டவனைக் காக்காத நீங்கள் சாவின் மக்களாயிருக் கிறீர்கள். இப்போது அரசனுடைய ஈட்டி எங்கே என்றும், அவர் தலைமாட்டி லிருந்த ஜல பாத்திரம் எங்கேயென்றும் பாரென்று சொன்னான்.

17. அந்நேரத்தில் சவுல் தாவீதி னுடைய குரலை அறிந்து கொண்டு; என் குமாரனாகிய தாவீதே இது உன் குரல் சத்தந்தானாவென்று சொன்னதற்கு தாவீது: என் ஆண்டவனாகிய இராசாவே, ஆம் இது என் குரல் சத்தந் தானென்று சொன்னான்.

18. இன்னமுஞ் சொல்லுகிறான்: என் ஆண்டவன் தன் ஊழியனைத் துன்பப்படுத்த வேண்டியதென்ன? நான் என்ன செய்தேன்? என் கையில் என்ன குற்றம் இருக்கிறது?

19. என் ஆண்டவனாகிய இரா சாவே, உம்மை மன்றாடுகிறேன். உம்முடைய அடியானுடைய வார்த்தை களைக் கேளும். கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாய் எழுப்பினதுண்டானால் அவர் பலி வாசனை முகர்வாராக! ஆனால் மனுமக்கள் உம்மை அப்படி ஏவி எழுப்பினதாமாகில் அவர்கள் கர்த்த ருடைய சுதந்தரத்திலிருந்து என்னைத் துரத்திவிட்டு, நீ போ, அந்நிய தேவர் களைச் சேவியென்று என்னைத் தள்ளிப் போட்டார்களன்றோ?

20. இன்று கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தந் தரையில் சிந்தப்படாமல் இருப்பதாக! மலைகளில் ஒரு கவு தாரியை வேட்டையாடுவதுபோல் இஸ் றாயேலின் இராசா ஒரு தெள்ளுப் பூச்சி யைத் தேட வந்தாரே என்றான்.

21. அப்பொழுது சவுல்: என் குமார னாகிய தாவீதே நான் பாவஞ் செய்தேன்; நீ திரும்பி வா. என் உயிர் இன்று உன் கண்களுக்கு அருமையாயிருந்தபடியால் இனிமேல் உனக்கு நான் தின்மை செய்யவே மாட்டேன். மூடத்தனமாய் நடந்தேனென்றும், அநேக காரியங்களை அறியாதிருந்தேனென்றுந் தெரிய வரு கின்ற எனக்கு வெகுவாய்த் தெரி யாதென்று சொன்னான்.

22. தாவீது மறுமொழியாக: இதோ இராசாவினுடைய ஈட்டி இங்கேயிருக் கிறது. இராசாவின் ஊழியர்களில் ஒருவன் இவ்விடம் வந்து அதை எடுத்துக் கொண்டுபோகட்டும்.

23. ஆனால் கர்த்தர் ஒவ்வொருவனுக் கும் அவனவன் நீதிக்கும், உண்மைக்குந் தகுந்தபடி பலன் கொடுப்பார். கர்த்தர் உம்மை இன்று என் கையில் ஒப்புக் கொடுத்தார். நானோ கர்த்தருடைய கிறீஸ்துவின்மேல் கையை நீட்ட மனந் துணியவில்லை.

24. உமது உயிர் இன்று என் கண் களுக்கு அருமையாயிருந்தது போல என் உயிர் ஆண்டவர் கண்களுக்கு அருமையா யிருக்கக்கடவது. அவர் எல்லா இக்கட் டிலும் என்னை மீட்பாராகவென்று சொன்னான்.

25. சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப் பட்டவன்; நீ நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பாய்; பலவானாவாயென்று சொன்னான். பின்பு தாவீது தன் வழியே திரும்பிப் போய்விட்டான். சவுல் தன் இடத்துக்குத் திரும்பி வந்தான்.