அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 24

நபுக்கோதொனோசோர்.

1.  யோவாக்கிம் நாட்களிலே பாபிலோன் அரசனான நபுக்கோதொனோசோர் யூதாவிற்கு விரோதமாய் வந்தான். யோவாக்கிம் அவனுக்கு மூன்று வருஷம் கீழ்ப்படிந்து பிறகு அவனைச் சேவிக்காத படிக்குக் கலகம் பண்ணினான்.

2. கர்த்தர் கல்தேயாவினின்றும், சீரியாவினின்றும், மோவாபினின்றும், அம்மோன் புத்திரர்களினின்றுங் கொள் ளைக்காரரைஅவன்மீது வரவிட்டார். அவர் தமது அடியாரான தீர்க்கத்தரிசி களால் சொல்லியிருந்த வாக்கியப்பிரகா ரம் அந்தத் தண்டுகளை யூதாவை நாசப் படுத்தவே அனுப்பிவிட்டார்.

3. மனாசே செய்திருந்த எல்லா அக்கிரமங்களின் நிமித்தங் கர்த்தர் யூதா வைத் தமது சமுகத்தினின்று அகற்றி அழிக்க வேணுமென்று அவர் யூதாவுக்கு விரோதமாய்ச் சொல்லியிருந்த வாக்கியத் தின்படியே அது சம்பவித்தது.

4. அன்றியும் அவன் சிந்தின குற்ற மற்ற இரத்தத்திற்காகவும், எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற் காவும் கர்த்தர் மன்னிப்புக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை.

5. யோவாக்கிமின் மற்ற வர்த்த மானங்களும் அவன் செய்தவை யாவும் யூதாவின் இராசாக்களுடைய நாளாகமப் புத்தகத்தில் அல்லோ வரையப்பட்டுள் ளன. யோவாக்கீம் என்போனுந் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தான்.

6. அவன் குமாரன் யோவாக்கீன் அவன் ஸ்தானத்தில் அரசாண்டான்.

7. எஜிப்த்து இராசா அப்புறந் தன் தேசத்திலிருந்து புறப்பட்டுவரத் துணிய வில்லை. ஏனெனில், எஜிப்த்தின் நதி முதல் ஐப்பிராத்து நிதிமட்டும் எஜிப்த் தின் இராசாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் அரசன் பிடித்திருந்தான்.

8. யோவாக்கீன் இராசாவானபோது அவனுக்குப் பதினெட்டு வயது இருந்தது. எருசலேமில் மூன்றே மாதம் அரசாண் டனன். எருசலேமிய எல்னாத்தானின் குமாரத்தியான அவன் தாயின் பேர் நோயஸ்தாள்.

9. அவன் தன் தகப்பன் செய்தபடி யெல்லாங் கர்த்தருடைய சமுகத்திற்கு ஏராததைச் செய்தனன்.

10. அக்காலத்திலே பாபிலோனரச னின் சேவகர்கள் எருசலேம் பட்டணத் துக்கு விரோதமாய்ப் புறப்பட்டு வந்து நகரத்தை முற்றுகையிட்டார்கள்.

11. பாபிலோன் அரசனாகிய நபுக்கோ தொனோசோர் தானுந் தன் சனங்க ளோடு பட்டணத்தைப் பிடிக்க வந்தனன்.

12. அப்போது யூதாவின்அரச னானப் யோவாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியர்களும், அவன் அண்ணகர்களும் பாபிலோனின் இராசாவிடத்தில் சரண மடையப் புறப்பட்டார்கள்; பாபிலோ னின் அரசன் தன் இராஜரீகத்து எட்டாம் வருஷத்திலே அவனை கொலுவிலேற் றுக் கொண்டனன்.

13. பின்பு அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்தும், இராச மாளிகையி லிருந்தும் சகல திரவியங்களையும் எடுத்துக் கொண்டு போனான்; கர்த்தர் சொல்லிய வாக்கியப்பிரகாரம் இஸ்றா யேலின் அரசனான சலொமோன் தேவா லயத்தில் செய்துவைத்திருந்த எல்லாப் பொன் பணிமூட்டுகளையும் உடைத்துப் போட்டு,

14. எருசலேம் நகரத்து முதன்மை யானவர்களையும்: பிரபுக்களையும், பலாஷ்டிகமுள்ள பதினாயிரம் வீரர் களையும், சிற்ப ஆசாரிகளையும், இரத் தினம் சாணைப்பிடிக்கிறவர்களையும் சிறைப் பிடித்துப் பாபிலோன் பட்டணத் துக்குக் கொண்டுபோனான்; தேசத்தில் உள்ள ஏழைகள் மாத்திரம் ஊரில் இருந்து விட்டார்கள். 

15. யோவாக்கீனையும், அவன் தாயா ரையும், பட்டத்து ஸ்திரீகளையும், அரண் மனையின் கோசாக்களையும் பாபிலோ னுக்கு சிறைபிடித்துக் கொண்டு போனான்; அவ்விடத்து நீதியதிபதிகளை யும் எருசலேமினின்று பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.

16. பின்னும் தேச பலாஷ்டிகரானவர் களில் ஏழாயிரம் பேர்களையும், சிற்ப ஆசாரிகளிலும், இரத்தினஞ் சாணைப் பிடிக்கிறவர்களிலும் ஆயிரம் பேர்களை யும், திடகாத்திரமுடையோரையும், வீர பராக்கிரமசாலிகளெல்லோரையும் அரசன் சிறைபிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

17. யோவாக்கீனுக்குப் பதிலாக அவ னுடைய சிறியதகப்பனாகிய மாத்தானி யாஸ் என்போனை அரசனாக வைத்து அவனுக்குச் செதேசியாஸ் என மறு பெயரிட்டனன்.

18. செதேசியாஸ் இராசாவானபோது இருபத்தொரு வயதுடையவனாயிருந் தான்; எருசலேமில் பதினொரு வருஷம் அரசாட்சி செய்தான். லெப்னா ஊரா னாகிய எரேமியாசுடைய புத்திரியான அவன் தாயின் பெயர் அமித்தாள்.

19. யோவாக்கீன் செய்தபடி எல்லாம் செதேசியாசும் கர்த்தருடைய சமுகத் திற்குத் தின்மையானதைச் செய்தான்.

20. எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தமது சமுகத்தினின்று நிராகரித் துத் தள்ளித் தீருமளவும் அதுகளின்மேல் வரவர அதிக கோபமுள்ளவராயிருந்தார். செதேசியாஸ் பாபிலோன் இராசா வுடைய நுகத்தடியை உதறிப்போட் டான்.