அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 24

தாவீது-சவுல் சந்திப்பு.

1. தாவீது அங்கிருந்து புறப்பட்டு எங்காதிலே அதிக பதனமான இடங்களில் தங்கியிருந்தான்.

2. சவுல் பிலிஸ்தியரைத் தொடர்ந்த பின் திரும்பி வந்தபோது: இதோ தாவீது எங்காதி வனாந்தரத்திலிருக்கிறானென்று சொல்லி அவனுக்குத் தெரிவித்தார்கள்.

3. அப்பொழுது சவுல் இஸ்றாயே லிலெல்லாந் தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்களிலே மூவாயிரம்பேரை எடுத் துக் கொண்டு காட்டாடுகள் மாத்திரம் ஏறக் கூடுமான செங்குத்தான பாறைகளில் முதலாய் தாவீதையும் அவ னுடைய மனிதர்களையுந் தேடப் போனான்.

4. வழியோரத்தில் ஆட்டு மந்தை களின் தொழுவங்கள் காணப்பட்டன; அவ்விடத்தில் ஒரு கெபி இருந்தது. அதிலே சவுல் மலபாதைக்குப் போனான். தாவீதும் அவனுடைய மனிதர்களும் கெபியின் உட்புறத்துக்குள் ஒளித்துக் கொண்டிருந்தார்கள்.

5. தாவீதின் மனுஷர்கள் இவனை நோக்கி: இதோ நாம் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக் கொடுப்போம். உன் மனதுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்வாயென்று கர்த்தர் உன்னோடு சொன்ன நாள் இதுதானே என்று அவனுக்குச் சொன்னார்கள். தாவீது எழுந்து போய் சவுலுடைய போர்வை யின் தொங்கலை அறுத்துக் கொண் டான்.

6. அதன்பின் சவுலின் போர்வை நுனியை அறுத்துக் கொண்டதினிமித்தம் தாவீதுக்கு மனஸ்தாபம் வந்தது.

7. அவன் தன் மனிதர்களை நோக்கி: ஆண்டவர் அவரை அபிஷேகம் பண்ணி னார். அவர் கர்த்தருடைய கிறீஸ்துவான படியினாலும் என் ஆண்டவனானபடி யினாலும் அவர் மேல் கையைப் போடும் படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் எனக்குத் தயவாயிருப்பாராக என்று சொல்லி,

8. தாவீது தன் மனுஷர்களைச் சவுலின்மேல் எழுந்து விழவொட்டாமல் தன் வார்த்தைகளால் அவர்களைத் தடுத்து விட்டான்; பிறகு சவுல் கெபியை விட்டுப் புறப்பட்டுத் தன் வழியே நடந்து போனான்.

9. அப்போது தாவீதும் எழுந்து கெபியிலிருந்து வெளிப்பட்டுச் சவுலுக்குப் பின்னே போய்: இராசாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிடச் சவுல் திரும்பிப் பார்த்தான். அதோ தாவீது தரைமட்டும் முகங் குனிந்து வணங்கி,

10. சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்பு செய்யப் பார்க்கிறானென்று சொல்லுகிற மனிதருடைய வார்த்தை களை நீர் கேட்கலாமா?

11. இதோ கர்த்தர் கெபியில் உம்மை என் கையில் ஒப்புக் கொடுத்தாரென் பதை இன்றைக்கு உமது கண்களே கண் டன. நான் உம்மைக் கொல்ல வேணு மென்று நினைத்தது மெய்யே; ஆனால் என் கண் உம்மைத் தப்பவிட்டது. நீர் ஆண்டவருடைய கிறீஸ்துவாயிருக்கிற படியால் என்னெஜமான் பேரில் நான் கை நீட்டமாட்டேனென்று சொல்லிக் கொண்டேன்.

12. உருசு என்ன என்று கேட்கிறீரோ? என் பிதாவே பாரும். என் கையில் உமது போர்வையின் தொங்கலைப் பார்த்துக் கொள்ளும்; ஏனெனில் உம்மைக் கொன்று போடாமலே உம்முடைய போர்வையின் தொங்கலை அறுத்துக் கொண்டேனாதலால் நீர் யோசனை பண்ணுவீராகில் என் கையில் ஒரு குற்றமும் ஒரு துரோகமும் இல்லை என்றும், நான் உமக்கு விரோதமான பாவஞ் செய் ததில்லை என்றும் நீர் அறிந்து கொள்ளலாமே. நீரோ என் பிராணனை வாங்க வழி தேடுகிறீரே என்ன? 

13. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராயிரப்பாராக! என் காரியத்திலே ஆண்டவர் தாமே நீதியைச் சரிக்கட்டுவா ராக! உமது மேல் நான் கைபோட மாட்டேன்.

14. முதியோர் பழமொழியில் சொல் லப்படுமாப்போல்: துரோகிகளிடந் துரோகம் பிறக்கும்; ஆதலால் என் கை உமது பேரில் படலாகாது.

15. இஸ்றாயேலின் இராசாவே ஆரைப் பின்துடருகிறீர்? யாரைப் பிடிக் கப் புறப்பட்டு வந்தீர்? ஒரு செத்த நாயை, ஒரு தெள்ளுப் பூச்சியைத்தான் அன்றோ?

16. ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நியாயம் விசாரிப் பாராக! அவர் என் நியாயத்தைப் பார்த் துத் தீர்ப்புச் சொல்லவும், என்னை உமது கையினின்று மீட்டிரட்சிக்கவுங் கடவா ராக என்று சொன்னான்.

17. தாவீது சவுலை நோக்கி வார்த்தை களைச் சொல்லி முடிந்தபோது சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன் குரல் சப்தந்தானாவென்ற சொல்லி, சப்தமிட்டழுதான்.

18. பின்பு தாவீதை நோக்கி: நீ என் னிலும் நீதிமான்: நீ எனக்கு நன்மை செய்தாய், நானோ உனக்குத் தின்மை செய்தேன்.

19. நீ எனக்கு நன்மை செய்ததை இன்று எனக்குக் காண்பித்தாய்; ஆண்ட வர் என்னை உன் கையில் ஒப்பித்திருந் தாலும் நீ என்னைக் கொல்லவில்லையே.

20. ஒருவன் தன் சத்துருவைக் கண்டு பிடிப்பானாகில் அவனைச் சுகமே போக விடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக ஆண்டவர் உனக்கு நன்மை செய்வாராக!

21. நீ தப்பாதே அரசாளுவாயென் றும், இஸ்றாயேலின் இராச்சியத்தை நிச்சயமாய் அடைவாயென்றும் இப் போது நான் அறிவேன்.

22. ஆதலால் எனக்குப் பின் இருக்கும் என் சந்ததியை வேர் அறுப்பதில்லை என் றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழிக்கப் போவதில்லையென் றுங் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுச் சத்தியம் பண்ணிக் கொடுவென்றான்.

23. தாவீது அவ்விதமாய்ச் சவுலுக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தான்; அப்பொழுது சவுல் தன் வீட்டுக்குப் போனான்; தாவீதும், அவனுடைய மனுஷர்களும் அரணிப்பான இடங்களில் ஏறிப் போனார்கள்.