அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 23

தாவீதரசனின் கடைசி மொழிகள்.

1.  தாவீதுடைய கடைசி வசனங்கள் வருமாறு: ஈசாயின் புதல்வனான தாவீதென்னப்பட்டவனும், யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற நியமிக்கப் பட்டவனும், இஸ்றாயேலின் கீர்த்தி பெற்ற சங்கீத வித்துவானுமாகிய நான் (பகரத் துடங்குகின்றேன்:)

2. கர்த்தருடைய ஆவியானவர்  என் மூலியமாய்ப் பேசினார்; அவருடைய வசனம் என் நாளில் இருந்தது.

3. இஸ்றாயேலின் தேவனும், இஸ் றாயேலில் வல்லவருமானவர் என்னைப் பார்த்து: மனிதர்களின்மேல் மேன்மையை அடைந்து ஆண்டுவருகிறவனும் நீதி மானாயிருந்து தேவ பயத்தோடு அரசாளுகிறவனும் எப்படிக்கிருப்பா னெனில்,

4. காலையில் சூரியனுதிக்கவே, அருணோதய வெளிச்சம் மேகமின்றித் துலங்குவது போலும், பூமியினின்று புல் மழையினால் நனைந்து தளிர்ப்பது போலுமிருப்பான் என்றருளினார்.

5. தேவனுடைய சமுகத்தில் என் வீடு அவ்வளவு பிரபலியமான வீடல்ல.  என்னோடு தேவன் எல்லாவற்றிலும் பலத்ததும் அசைக்கக் கூடாததுமான உடன்படிக்கைச் செய்வதற்கு நான் பாத் திரவானாயிருக்கவில்லை; அப்படிக்கிருந் தும் (தேவன்) எல்லா ஆபத்துக்களிலே நின்று என்னை இரட்சித்தார்.  நான் ஆசித்ததெல்லாம் அவர் எனக்குத் தந்தருளினார்; அவைகளில் எனக்கு வந்து பலிக்காத நன்மை ஒன்றுமில்லை.

6. ஆனால் (பிரமாணத்தை) மீறுகிற வர்களனைவரும், கைமேலே தொட் டெடுக்கப்படாத முட்களைப்போல் பிடுங்கப்படுவாரே.

7. அவற்றை ஒருவன் தொடப் போனால் இருப்பாயுதத்தையுங் கூரான சிராயையுங் கொண்டு அவைகளை வாங்கி அக்கினியில் போட்டு முற்றுஞ் சுட்டெரிக்கப்பண்ணுவான்.

8. தாவீதுக்கிருந்த பராக்கிரமசாலி களின் நாமங்களாவது: மூவரில் மகா ஞானமுடைய பிரபுவாய் பிரசங்கப் பீடத் தில் வீற்றிருந்தவனே முதல்வனாம்.  அவன் மிகவும் நுண்மையான மரப்பூச்சி யைப்போல் (இருந்தும்) எண்ணூறு பேர் களை ஒரே சமயத்தில் வெட்டிப்போட் டவன்.

9. அவனுக்கு இரண்டாவது அகோயீ ஊரானானவனும் முந்தினவனுடைய சிற்றப்பன் குமாரனுமான எலெயசார் என்பவன். தாவீதும் அவரோடு வேறு மூன்று பராக்கிரமசாலிகளுங் கூடி பிலிஸ்தியரை தூஷித்து நிந்தித்துப் போர்க்களத்தில் வந்தார்களே அம்மூவ ரில் இவன் ஒருவனாம்.

10. இஸ்றாயேல் புருஷர் ஓடிப் போகையில் இவன் மாத்திரம் நின்று தன் கை சலித்துப் பட்டயத்தோடு ஓடிப் போகுமட்டும் பிலிஸ்தியரை வெட்டி னான்.  அந்நாளில் ஆண்டவர் பெரிய இரட்சிப்பைச் செய்தார்;  முன்னே ஓட்டம் பிடித்த ஜனங்களோ பின்னும் வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடு வதற்குத் திரும்பி வந்தார்கள்.

11. இவனுக்கு மூன்றாவது: ஆராரி ஊரானான ஆகேயின் குமாரனாகிய செம்மா என்பவன்.  லேந்த்தென்னுஞ் சிறு பயறு நிறைந்த ஓர் வயலிலே பிலிஸ் தியர் ஏராளமாய் கூடிக் கொண்டிருந் தார்கள்; அவர்களைக் கண்டு ஜனங்கள் ஒட்டம் பிடித்திருக்கையில், 

12. இவன் ஒருவனே வயலின் நடுவே நின்று அதைக் காப்பாற்றி பிலிஸ்தியரை மடங்கடித்துப்போட்டான்.  ஆண்டவர் அன்றைக்குப் பெரிய இரட்சிப்பைச் செய்தருளினார்.

13. அல்லாமலும் அதற்குமுன் முப் பது பேரில் முதல்வரான இந்த மூவர் அறுப்புக் காலத்தில் தாவீதைப் பார்க்க ஓதுலாங் கெபிக்கு வந்திருந்தார்கள்.  பிலிஸ்தியரின் பாளையமோ இராட்சத ரின் பள்ளத்தாக்கில் இருந்தது.

14. தாவீது அரணான ஒரு இடத்தி லிருந்தான்; பிலிஸ்தியருடைய தானை யமோ அப்போது பெத்லேமிலிருந்தது. 

15. அப்போது தாவீது: ஓ! பெத்லே மில் ஒலிமுகவாசலண்டையிலிருக்கிற கேணியிலிருந்து கொஞ்சத் தண்ணீர் என் தாகத்துக்குக் கொண்டு வருபவன் யாரா வது உண்டோ என்று ஆவல் கொண்டு உரைத்ததைக் கேட்டு,

16. அந்த மூன்று வல்லவர்கள் போய்ப் பிலிஸ்தியருடைய பாளையத் தில் துணிந்து புகுந்து பெத்லேமில் ஒலி முக வாசலண்டையிலிருந்த கேணியிலே தண்ணீரை மொண்டு தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்.  தாவீதோ அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக் கென்று ஊற்றிப்போட்டு: 

17. கர்த்தர் என்மேலே கிருபை செய்ய அப்படிப்பட்ட அநியாயம் எனக்குத் தூரமாயிருப்பதாக!  இந்த மூவ ருந் தங்கள் பிராணனை ஒரு பொருட் டாய் எண்ணாமல் போய் வந்தார்களே, அந்தத் தண்ணீரைக் குடித்தால் அவர் களுடைய இரத்தத்தையும் பிராணனை யுங் குடிப்பதற்கொக்குமன்றோ? என்று சொல்லித் தண்ணீரைக் குடிக்கத் துணியாமல் அதை ஊற்றிப் போட்டான்.  இந்த மூன்று பராக்கிரமசாலிகள் அதைச் செய்யத் துணிந்திருந்தார்கள்.

18. சார்வியாளின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயுங் கூட மூவரில் முதல்வனாயிருந்தான்.  அவனே (சத்துருக்களில்) முந்நூறு பேர் களுக்கு விரோதமாய்த் தன் ஈட்டியை யோங்கி அவர்களைக் கொன்றான், இவன் (வேறு) மூன்று பேருக்குள் புகழ் பெற்றவனாயும், 

19. இம்மூவரில் அதிமகிமையுடைய வனாயும், அவர்களுக்குத் தலைவனாயு மிருந்தான்; ஆயினும் முதல் மூவருக்கு ஒப்பானவனல்லன்.

20. செயல்களிலே மகா வல்லவனும் பராக்கிரமசாலியுங் கப்சேலூரானுமான யோயியாதாவின் குமாரனாகிய பனா யாஸ், இவன் மோவாபின் இரண்டு சிங்கங்களைக் கொன்றான்.  (இன்னொரு விசை) அவன் வெண்பனிக் காலத்தில் ஒரு கேணியிலிறங்கி மற்றொரு சிங்கத்தைக் கொன்றான்.

21. அல்லாமலும் அவன் பயங்கர மான ரூபத்தையுடைய ஒரு எஜிப்த்திய வீரனைக் கொன்றான்.  இவன் ஒரு ஈட் டியை ஏந்திக் கொண்டிருந்தாலும் பனாயாஸ் ஒரு தடியை மாத்திரம் பிடித்து அவன் மேல் பாய்ந்து பலாத்கார மாய் அவனுடைய ஈட்டியைப் பறித்து, அதைக் கொண்டுதானே அவனைக் கொன்று போட்டான்.

22. யோயியாதாவின் குமாரனான பனாயாஸ் செய்த பராக்கிரமச் செயல்கள் அதுகளேயாம்.

23. கீர்த்தி பெற்ற முப்பது பேருக்குள் இருந்த பலசாலிகளான மூவரில் அவன் மேன்மையுள்ளவன்; ஆயினும் அந்த (முந்தின) மூன்று பேருக்கும் இவன் நிகரானவனல்லன்; இவனைத் தாவீது தன் இரகசிய ஆலோசனைக்காரனாக்கி னான்.

24. முப்பது வீரர்களில் யோவாபின் சகோதரனாகிய அசாயேலும், அவ னுடைய சிற்றப்பனின் குமாரனான பெத்லேமிற் பிறந்த எலேயானானும்,

25. ஹாரோதியூரானான செம்மா வும், ஹாரோதியில் பிறந்த எலிக்காவும்,

26. பால்தியானான எலேஸும், தேக்குவாவூரில் பிறந்த அக்ஸேசின் குமாரனாகிய ஹீராவும்,

27. அனாத்தோத்தியானான அபியே ஸேரும், உசாத்தியனான மோபொன் னாவும்,

28. ஆஹோயித்தனான செல்மோ யும், நேத்தப்பாட்டியனான மகாராயும்,

29. நேத்தியப்பாட்டியனான பாஹா னாவின் குமாரனாகிய ஏலேத்தும், பெஞ்சமின் புத்திரரில் ஒருவனும், காபா வாத்தியனும், ரீபாயி குமாரன் இத்தாயும்,

30. பாரத்தோனியனான பனாயியா வும், காஹாஸ் நீரோடையனான எட்டாயியும்,

31. ஆர்பாத்தீத்தனான அபியல்போ னும், போரோமியனான அஸ்மவேட் டும், 

32. ஸலபோனியனான எலியபாவும், இயாசன் குமாரரும் யோனத்தானும், 

33. ஓறோரியனான செம்மாவும், ஆரோரியனான சாராரின் குமாரன் ஆயாமும், 

34. மக்காத்தி குமாரனான ஆஸ்பாய்க் குப் பிறந்த எலிப்பலேத்தும், கெலோனி யனான அக்கித்தோப்பேலின குமாரன் எலியாமும், 

35. கார்மேலிலிருந்து வந்த எஸ்றா யும், அர்யிபிலிருந்து வந்த பாராயும், 

36. சோபாவிலிருந்த நாட்டானின் குமாரன் இகாலும், காதியனான பொன்னியும், 

37. அம்மோனியனான சேலேக்கும், பேரோத்தியனான நஹராயும், இவன் சார்வியாளின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியாயிருந்தவன்,

38. எத்திரீத்தியனான ஈராவும், மேற் படி யூரானுமான கரேபும்,

39.  ஏத்தையனான உரியாசும் என்ப வர்களாம்;  ஆக முப்பத்தேழு பேரா யிருந்தார்கள்.