சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 23

நாவை மட்டுப்படுத்தவும், ஆங்காரம், போசனப்பிரியம், மோகம் இவைகளை அடக்கவும் மன்றாட்டு.

1. தந்தையாகிய ஆண்டவரே! என் வாழ்வின் இராஜரீக அரசரே, அவர்களுடைய ஆலோசனைக்கு என்னைக் கையளித்து விடாதேயும்; அவர்களால் நான் விழ விட்டுவிடாதேயும்.

2. அவர்களது அறியாமைகளை எனக்கு அவர்கள் கற்பிக்காதபடியும், அவர்களது பாவங்கள் என்னில் தோன்றாதபடியும், என் எண்ணங்களின்மீது கசைகளையும், என் இருதயத்தின்மீது ஞானத்தின் கட்டுப்பாட்டையும் வைப்பவன் யார்?

3. என் அறிவீனங்கள் அதிகரியாதபடியும், என் குற்றங்கள் பெருகாதபடியும். என் பாவங்கள் மிகுதியாகாதபடியும், என் எதிரிகள் முன்பாக நான் விழாதபடியும், என் எதிரி என்னைப்பற்றி அக்களிக்காதபடியும் எனக்கு இவற்றைச் செய்பவன் யார்?

4. தந்தையாகிய ஆண்டவரே! என் வாழ்வின் தேவனே! அவர்களுடைய சதித் திட்டத்திற்கு என்னைக் கையளித்து விடாதேயும்.

5. என் கண்களின் அகந்தையை எனக்குத் தராதிரும்; சகல இச்சையையும் என்னை விட்டகற்றும்.

6. என் வயிற்றின் பேராசையை என்னிடமிருந்து எடுத்துவிடும்; சரீர மோக இச்சைகள் என்னைப் பற்றிக் கொள்ளாதிருப்பனவாக. வெட்கங் கெட்டதும், மடமையுள்ளதுமான ஒரு மனதிற்கு என்னைக் கையளிக்காதிரும்.

7. மக்களே! வாயை அடக்கும் போதகத்திற்கு செவி கொடுங்கள்: அதை அனுசரிப்பவன் தன் உதடுகளால் அழியமாட்டான். மிகத் தீமையான செயல்களில் விழ அனுமதிக்கப்பட மாட்டான்..

8. பாவி தன் வீண் பெருமையில் பிடிபடுவான்; ஆங்காரியும் தீயதைப் பேசுகிறவனும் அவற்றால் விழுவார்கள்.

9. உன் வாய் சத்தியம் செய்வதற்குப் பழகாதிருக்கக் கடவது; ஏனெனில் அதில் பல வீழ்ச்சிகள் இருக் கின்றன.

10. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பது உன் வாயில் வழக்கமாக இராதிருக்கக்கடவது. அர்ச்சிய சிஷ்டவர்களின் பெயர்களையும் வீணில் சொல்லாதே; ஏனெனில் அவர்களிடமிருந்து நீ சுதந்திரமாகத் தப்ப மாட்டாய்.

11. ஏனெனில், இடைவிடாமல் வாதிக்கப்படும் அடிமை அந்த வாதை களின் அடையாளத்தை எப்போதும் கொண்டிருப்பதுபோல, ஆணை யிடுபவனும், ஆண்டவரின் பெயரை வீணாக உச்சரிப்பவனும் பாவத்தி னின்று முழுவதும் சுத்தமாக மாட் டான்.

12. அதிகமாய் சத்தியஞ் செய்யும் மனிதன் அக்கிரமத்தால் நிரப்பப் படுவான்; அவன் இல்லத்தினின்று வாதை அகலாது.

13. அவன் அதை வெறுமையாக்கி னால், அவனுடைய பாவம் அவன் மீதிருக்கும்: அதைப் பற்றி எதுவும் அறியாதவன்போல நடப்பானாகில் இரு மடங்கு குற்றம் செய்கிறான்.

14. வீணாக சத்தியம் செய்வான் எனில் நீதிமானாக்கப்படமாட்டான். அவனுடைய இல்லம் தண்டனை யால் நிரப்பப்படும்.

15. மரணத்திற்கெதிரான மற்றொரு பேச்சும் உண்டு; யாக்கோபின் சந்ததி யில் அது காணப்படாதிருப்பதாக.

16. ஏனெனில் இரக்கமுள்ளவர் களிடமிருந்து இவையெல்லாம் அகற்றப்படும்; அவர்கள் பாவங் களில் புரண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

17. விவேகமற்ற பேச்சில் உன் வாய் பழகாதிருக்கக் கடவது; ஏனெனில் அதில் பாவமான வார்த்தையுண்டு.

18. உன் தந்தை தாயை நினைத்துக்கொள். ஏனெனில் நீ பெரியோரின் மத்தியில் அமர்ந்திருக்கிறாய்.

19. அவர்களின் பார்வையில் கடவுள் உன்னை மறந்துபோகாத படியும், நீ உன் அன்றாட வழக்கப் படி, வசீகரிக்கப்பட்டு கண்டிக்கப் படாதபடியும், நீ பிறவாதிருந்தால் நலமாயிருந்திருக்கும் என்றெண்ணி, உன் பிறந்த நாளைச் சபிக்காத படியும், உன் தந்தை தாயை எப்போ தும் நினைத்துக்கொள்.

20. மிக நிந்தையான வார்த்தை களைச் சொல்லப் பழக்கப்பட்ட மனிதன் தன் வாழ்நாள் முழுவதுமே ஒருபோதும் திருந்துவதில்லை.

21. இருவித மனிதர் பாவங்களில் மிகுந்திருக்கிறார்கள். மூன்றாவது வகையினர் தேவகோபத்தையும், அழிவையும் கொண்டு வருகிறார்கள்.

22. பேராசையின் உஷ்ணமுள்ள ஆத்துமம் எரியும் நெருப்பைப் போன்றது. எதையாவது சுட்டெரிக் காத வரைக்கும் அது ஒருபோதும் அணைக்கப்படுவதில்லை.

23. தன் வாயில் கொடிய வார்த்தை களைக் கொண்டுள்ள மனிதன், ஒரு நெருப்பை மூட்டும் வரையில் அகன்றுபோக மாட்டான்.

24. விபசாரனுக்கு அப்பமெல்லாம் இனிப்பானதுதான்; சாகிற வரை பாவம் செய்வதில் அவன் சோர்ந்து போக மாட்டான்.

25. தன் திருமணப் படுக்கையைக் கடந்து விபசாரம் செய்கிறவன் தன் ஆத்துமத்தையே புறக்கணித்து, என்னைப் பார்க்கிறவர் யார் என்கிறான்.

26. இருள் என்னைச் சூழ்ந்திருக் கிறது; சுவர்கள் என்னை மூடியிருக் கின்றன. ஒருவரும் என்னைப் பார்க்க வில்லை; யாருக்கு நான் பயப்படு வேன்? உன்னத கடவுள் என் பாவங் களை நினைக்கமாட்டார் என்பான்.

27. ஆனால் அவருடைய கண் அனைத்தையும் பார்க்கிறது என்று அவன் புரிந்துகொள்வதில்லை; ஏனெனில் அத்தகைய ஒரு மனிதனின் பயம் தெய்வ பயத்தையும், அவருக்கு பயப்படும் மனிதரின் கண்களையும் அவனிடமிருந்து அகற்றி விடுகிறது.

28. ஆண்டவரின் கண்கள் சூரியனை விட மிக அதிகப் பிரகாசமாய் இருக்கின்றன என்பதையும், மனிதருடைய சகல வழிகளையும், பாதாளத்தின் ஆழத்தையும் அவை சுற்றிப் பார்க்கின்றன என்பதையும், மனிதருடைய இருதயங்களின் மிக மறைவான பகுதிகளையும் அவை பார்க்கின்றன என்பதையும் அவன் அறிவதில்லை.

29. ஏனெனில் சகலமும் படைக்கப் படுமுன்பே ஆண்டவரான கடவுள் அவற்றை அறிந்திருக்கிறார், அவ்வாறே அவை உத்தமமான விதத் தில் படைக்கப்பட்ட பிறகும், அவர் எல்லாவற்றையும் நோக்குகிறார்.

30. இந்த மனிதன் நகர வீதிகளில் தண்டிக்கப்படுவான். இளம் ஆண் குதிரையைப்போல துரத்தப்படுவான்; தான் நினையாத இடத்தில் அவன் பிடிபடுவான்.

31. தேவ பயத்தை அவன் புரிந்து கொள்ளாததால், கண்டுபிடியாததால் சகலராலும் அவமதிக்கப்படுவான்.

32. இவ்வாறே, தன் கணவனை விட்டு விலகி, மற்றொருவனைக் கொண்டு தனக்கு வாரிசை உண்டு பண்ணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நிகழும்.

33. ஏனெனில் முதலில் உன்னத ரான தேவனின் திருச்சட்டத்துக்கு அவள் பிரமாணிக்கமாய் இருக்கவில்லை; இரண்டாவது, தன் கணவனுக்கு எதிராக அவள் பாவம் குற்றம் செய்திருக்கிறாள்; மூன்றாவது விபசாரமென்னும் குற்றம் செய்திருக் கிறாள்; வேறொரு மனிதனுக்குப் பிள்ளைகள் பெற்றிருக்கிறாள்.

34. இந்தப் பெண் சபைக்குக் கூட்டிக் கொண்டுவரப்படுவாள்; அங்கே அவளுடைய பிள்ளைகளைப்பற்றி விசாரிக்கப்படும்.

35. அவளது மக்கள் வேரூன்றமாட் டார்கள்; அவளுடைய கிளைகளும் கனிகொடாது.

36. அவள் தன் சபிக்கப்பட்ட நினைவை விட்டுச் செல்வாள், அவளுடைய அவமானம் அகற்றப் படாது.

37. அவளுக்குப் பின் எஞ்சியிருக் கிறவர்கள் தேவ பயத்தைவிட உத்தமமானது ஏதுமில்லையென்று அறிந்துகொள்வார்கள்; ஆண்டவ ரின் கட்டளைகளை மதித்து நடப்பதை விட இனிதானது ஏது மில்லையென்றும் கண்டுகொள்ளுவார்கள்.

38. ஆண்டவரைப் பின்பற்றுவது பெரும் மகிமையாகும்; ஏனெனில், நீண்ட வாழ்நாட்கள் அவரிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படும்.