அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 23

யோசியாசின் நற்செயல்கள்.

1.  அவன் சொல்லியதை அவர்கள் போய் அரசனுக்கு அறிவித்தனர்: (அவருடைய உத்திரவின் மேல்) யூதா விலும் எருசலேமிலுமுள்ள பெரியோர் கள் யாவரும் அவனிடம் வந்து கூடினர்.

2. அப்பொழுது இராசாவும், யூதா வின் சகல கனவான்களும், எருசலேம் பட்டணத்துச் சகல வாசிகளும், குருப்பிர சாதிகளும், தீர்க்கத்தரிசிகளும், பால்லி யர் துவக்கிப் பெரியோர் வரைக்குமான சகல ஜனங்களும் ஆண்டவரின் ஆலயத்திற்கு எழுந்தருளினர்; அங்கு சேர்ந்த போது இராசா கர்த்தருடைய ஆலயத் தில் கண்டுபிடிக்கப்பட்ட உடன்படிக் கைப் புத்தகத்தின் வாக்கியங்கள் யாவை யும் அவர்கள் காது கேட்க வாசித்தனன்.

3. இராசா உயர்ந்த ஒரு ஸ்தலத் திலே வீற்றிருந்தவனாய் கர்த்தரைப் பின் பற்றி நடக்கவும் அவருடைய கற்பனை களையம், கட்டளைகளையும், சடங் காசாரங்களையும் முழு இருதயத் தோடும், முழு ஆத்துமத்தோடும் அனு சரிக்கவும், அந்தப் புத்தகத்தில் எழுதப் பட்டிருக்கிற அவ்வுடன்படிக்கையின் எல்லா வாக்கியங்களையும் ஸ்திரப்படுத் தவும் கர்த்தருக்கு முன் உறுதிப்பாடு செய்தனன்; பிரசைகளும் உடனபடிக் கைக்கு உடன் பட்டார்கள்.

4. அப்போது அரசன் பாகாலுக்கும், விக்கிரகச் சோலைக்கும் வானத்துச் சகல கிரகங்களுக்கும் உபயோகப் படுத்தப் பட்ட எல்லாப் பாத்திரங்களையுங் கர்த் தரின் ஆலயத்தினின்று வெளியிலெறியும் படியாக எல்கியாஸ் பெரிய ஆசாரிய னுக்கும், இரண்டாம் வகுப்பிலிருந்த ஆசாரியர்கட்கும், வாசல் காக்கிறவர் களுக்குங் கட்டளையிட்டு அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய் கெத்ரோன் கணவாயில் சுட்டெரித்துச் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச் செய் தனன்.

5. அன்றியும் யூதாவின் பட்டணங் களிலும் எருசலேமைச் சுற்றிலுமுள்ள மேடைகளின் மேல் உயர்ந்த ஸ்தானங் களில் பலியிட்டு வருவதற்காக யூதா அரச ரால் ஏற்படுத்தப்பட்ட குருக்களையும், பாகாலுக்கும், சூரிய சந்திர கிரகங்கட்கும்; ராசி பன்னிரண்டுக்கும், வானத்துக் கிரகாதிகளி யாவற்றிற்குந் தூபாராதனை செய்து வந்தவர்களையுஞ் சங்கரித்துப் போட்டான்.

6. ஆண்டவருடைய ஆலயத்தி லிருந்த விக்கிரகச் சோலையின் சிலையை யும் எருசலேமுக்குப் புறம்பாய் கெத் ரோன் கணவாயில் கொண்டுபோய் அங்கு அதனைச் சுட்டெரித்துத் தூளாக்கி அந்தத் தூளை அற்ப ஜனங்களுடைய பிரேத குழிகளின்மேல் எறியச் செய் தனன்.

7. அன்றியுங் கர்த்தருடைய ஆலயத் திலே பெண்மையுள்ள புருஷர்களின் சாகைகளிலிருந்தன; அவ்விடத்தில் ஸ்திரீகள் விக்கிரகச் சோலையின் (ஆரா தனையைச் சேர்ந்த) கூடாரங்களைச் செய்துவருவார்கள். இராசா அவைகளை நாசமாக்கிப் போட்டான்.

8. இன்னும் யூதாவின் பட்டணங் களிலுள்ள எல்லா ஆசாரியர்களையும் வரச்சொல்லி காபா துவக்கி பெற்சாபே வரைக்குங் குருக்கள் பலியிட்டு வந்த எல்லா உயர் ஸ்தானங்களையும், இராசா தீட்டுப்படுத்தச் செய்தான். பட்டணத்து வாசல்களின் பீடங்களையும் நகரத்துப் பிரதான வாசலுக்கு இடது புறமாயுள்ள ஊர் அதிகாரியான யோசுவே என்போ னின் விடுதி வாசலுக் கருகாமையிலிருந்த பீடங்களையுந் தகர்த்து இடித்துப் போட் டான்.

9. உயர் ஸ்தானங்களின் குருக்கள் எருசலேமிலிருந்த தேவாலயத்துப் பலிப் பீடத்தின்மேல் பலியிடாமல் தங்கள் சகோதரரோடு புளிப்பில்லாத அப்பங் களைச் சுட்டுச் சாப்பிட்டு வருவார்கள்.

10. மெல்லோக் விக்கிரகத்துக்குத் தோத்திரமாக ஒருவனுந் தன் குமாரனை யாகிலுந் தன் குமாரத்தியை என்கிலுந் தீக் கடக்கப் பண்ணாதபடிக்கு (இராசா) என்னோம் குமாரனின் கணவாயிலிருக் குந் தொபேத் என்னும் ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தக் கட்டளையிட்டான்.

11. கர்த்தருடைய ஆலய வாசலண் டையிலும், பாரூரிம் ஊரானாகிய நாத்தான் மெலேக்கென்னும் அண்ணக னின் அறை வீட்டுக்கருகாமையிலும் யூதாவின் இராசாக்களால் சூரியனுக் கென்று வைக்கப்பட்டகுதிரைகளை யோசியாஸ் அரசன் அகற்றினான். சூரிய னின் இரதங்களையோ அக்கினியில் சுட்டெரித்தான்.

12. பின்னும் யூதாவின் இராசாக் களால் ஏற்படுத்தப்பட்டு, ஆக்காசின் மேல் வீட்டில் ஸ்தாபிக்கப்பட்ட பலிப் பீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலுங் கட்டப்பட்ட பலிப் பீடங்களையும் யோசியாஸ் இடித்து, அவைகளின் தூளை அங்கிருந்தெடுத்து கெத்ரோன் என்னும் ஆற்றில் கொட்டினான்.

13. துர்மாதிரிகையென்னும் பர்வதம் எனப்பட்ட மலைக்கு வலதுபுறத்தில் இஸ்றாயேலின அரசனான சலொமோன் சிதோனியரின் விக்கிரகமாகிய அஸ்தா ரோத்துக்கும், மோவாபியரின் அருவருப் பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திர ருடைய இலச்சைக் கேடான மெல்போ முக்குங் கட்டியிருந்த மேடைகளையும் இராசா தீட்டுப்படுத்தினான்.

14. அன்றியும் அவன் அவைகளின் சிலைகளை உடைத்து, விக்கிரகச் சோலைகளை அழித்து, அவ்விடங்களை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.

15. அது போதாமல் இஸ்றாயேலைப் பாவஞ் செய்யப் பண்ணின நாபாத்தின் குமாரனான எரோபோவாம் பெத்தேலில் ஏற்படுத்தியிருந்த உயர் ஸ்தானத்தையும் பலிப்பீடத்தையும் யோசியாஸ் அவ் விரண்டையும் அழித்துச் சுட்டெரித்துத் தூளாக்கி விக்கிரகத் தோப்பையும் அக்கினிக்கிரையாக்கினான்.

16. யோசியாஸ் திரும்பிப்பார்த்த போது அங்கு மலையின்மேலிருந்த கல்லறைகளைக் கண்டு, ஆட்களை யனுப்பி அச்சமாதிகளிலுள்ள எலும்பு களை எடுத்து வரச்செய்து இப்படியே நடக்குமென்று முன்னந் தேவனுடைய மனுஷன் ஒருவன் கூறிய கர்த்தருடைய வாக்கியப் பிரகாரம் அவைகளைப் பலிப் பீடத்தின் மேல் சுட்டெரித்து அதைத் தீட்டுப் படுத்தினான்.

17. பின்பு அவன்: நான் காண்கிற அந்தச் சமாதி யாருடையது? எனக் கேட் டதற்கு அப்பட்டணத்து வாசிகள்: அது யூதாவினின்று வந்து: நீர் பெத்தேலின் பலிப் பீடத்திற்கு விரோதமாய் இப்படிச் செய்வீரென்று முந்தித் தெரிவித்தானே அந்தத் தேவனின் மனுஷனுடைய சமாதி தான் என்றார்கள்.

18. அதற்கவன்: இருக்கட்டும். அவனுடைய எலும்புகளைத் தொட வேண்டாமென்றான். அப்படியே அவனுடைய எலும்புகளைச் சமாரியா விலிருந்து வந்த தீர்க்கத்தரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.

19. கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்றாயேலின் இராசாக்கள் சமாரியா வின் பட்டணங்களிலே உண்டாக்கின உயர்ந்த தேவ ஸ்தானங்களையெல்லாம் யோசியாஸ் இடித்து பெத்தேலில் எப்படி செய்திருந்தானோ அப்படியே அவைகட் குஞ் சரியாய்ச் செய்தனன்.

20. அவ்விடங்களிலிருந்த உயர் ஸ்தலங்களின் பலிப்பீடங்களைக்காக்கா நின்ற குருக்களை எல்லாங் கொன்று போட்டு அப்பீடங்களின்மேல் செத்த மனுஷருடைய எலும்புகளைச் சுட் டெரித்து பின்பு எருசலேமுக்குத் திரும் பினான்.

21. பிறகு யோசியாஸ் ஜனங்களெல் லோரையும் பார்த்து: இந்த உடன்படிக் கையின் புத்தகத்தில் வரையப்பட்டுள் ளது போல், உங்கள் தேவனாகிய ஆண்ட வருக்குப் பாஸ்கா பண்டிகை கொண் டாடுங்கள் என்று கட்டளையிட்டான்.

22-23. யோசியாஸ் அரசாட்சியின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக் குத் தோத்திரமாக எருசலேமிலே கொண்டாடப்பட்ட பாஸ்காப் பண்டி கைப்போல இஸ்றாயேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாள் துடங்கி யூதாவின் அரசர் காலத்திலும் வேறேயெத்தனை சிறப்பான பாஸ்கா நடத்தப்படவேயில்லை.

24. எல்கியாஸ் என்னும் ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்திலே கண் டெடுத்த பிரபந்தத்தில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தின் வாக்கியங்களை நிறைவேற்றும்படிக்கு, யோசியாஸ் யூதா தேசத்திலும் எருசலேம் நகரத்திலும் அகப்பட்ட மந்திரவாதிகளையும், பித்தோனாவேசம் ஏறியவர்களையும், அருவருப்பான படங்களையும், அசுசிய மான காரியங்களையும், அருவருப்பான வைகளையும் நிர்மூலமாக்கி அழித் தனன்.

25. அவனைப்போல் தன் தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத் தோடும், முழு சத்துவத்தோடும் மோயீ சன் எழுதிய முழு நியாயப் பிரமாணத் திற்கேற்றபடி எல்லாங் கர்த்தரிடத்திற் குத் தன் மனந்திரும்பினவன் அவனுக்கு முன்னிருந்ததுமில்லை; அவனுக்குப் பின் அவனுக்குச் சரியொத்தவன் இருக்கப் போவதுங் கிடையா.

26. ஆகிலும் மனாசே செய்து வந்த அக்கிரமங்களால் கர்த்தருக்கிவ்வளவு கோபமுண்டானதென்று (சொன் னோமே). அதனால் யூதாவுக்கு விரோத மாய் எழும்பிய அந்த உக்கிரவேசமானது தணிந்ததேயில்லை.

27. ஆனதுபற்றி ஆண்டவர்: நாம் தள்ளிவிட்டது இஸ்றாயேலைப்போல் யூதாவையும் நமது சமுகத்தினின்று அகற்றிவிடுவோம்; இங்கு நமது நாமம் விளங்குமென்று நாம் வசனித்துச் சொன்ன ஆலயத்தையும், நாம் தெரிந்து கொண்ட பட்டணமாகிய எருசலேமை யும் வெறுத்துவிடுவோமென்றார்.

28. யோசியாசுடைய மற்ற வர்த்த மானங்களும் அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய சரித்திராகமத்தில் வரையப்பட்டுள்ளன.

29. அக்காலையில் எஜிப்த்து அரச னாகிய பாரவோன் நெக்காவோ அசீரியா இராசாவுக்கு விரோதமாய்ப் புறப்பட்டு ஐப்பிராத் நதிக்குப் போகும்போது யோசியாஸ் அரசன் அவனுக்கு எதிராய் வந்தான். பாரவோன் அவனோடு சமர் செய்து அவனை மகத்தோவில் எதிர்த்துக் கொன்றுபோட்டான்.

30. அவனுடைய ஊழியர் மகெத் தோவிலிருந்து அவனுடைய சடலத்தைத் தூக்கிக் கொண்டு, எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனுடைய கல்லறை யில் அவனை அடக்கம் பண்ணினார்கள். பிறகு தேசத்தின் சனங்கள் யோசியா சுடைய குமாரனாகிய யோவாக்காசைத் தெரிந்துகொண்டு, அவனை அபிஷேகஞ் செய்து, அவன் பிதாவுக்குப் பதில் இராச னாக ஏற்படுத்தினார்கள்.

31. யோவக்காஸ் இராசாவானபோது இருபத்து மூன்று வயதுள்ளவனாயிருந் தான். எருசலேமில் மூன்று மாதம் அரசு புரிந்தனன். லொப்னா வூரானாகிய எரேமியாசுடைய குமாரத்தியான அவன் தாயின் பெயர் அமித்தாள்.

32. அவன் தன் பிதாக்கள் செய்தபடி எல்லாம் ஆண்டவருடைய சமுகத்திற்குத் தின்மையானதைச் செய்தனன்.

33. அவன் எருசலேமில் அரசாளாத படிக்குப் பாரவோன் நெக்காவோ அவனைப் பிடித்து, எமாத் தேசமான ரெப்ளாமிலே கட்டுவித்தனன். அன்றி யும் யூதா தேசம் தனக்கு நூறு தலேந்து வெள்ளியையும், ஒரு தலேந்து பொன் னையும் அபராதமாகச் செலுத்திவரக் கட்டளையிட்டான்.

34. பாரவோன் நெக்காவோ யோசி யாசின் சிரேஷ்ட புத்திரனான எலியக் கீமை அவன் தகப்பனுடைய ஸ்தானத் தில் இராசாவாக ஏற்படுத்தி, அவன் பேரை யோவாக்கீம் என்று மாற்றி யோவாக்காசைக் (கைதியாக) எஜிப்த்துக் குக் கொண்டுபோய்விட்டான். அவன் அங்குதானே மரணமடைந்தான்.

35. மேற்சொல்லிய வெள்ளியையும் பொன்னையும் ஒரே காலத்தில் செலுத்த வேணும் என்று பாரவோன் விதித்தமை யால் யோவாக்கிம் தேசத்துக் குடிகளின் தலைக்குமேல் வரிபோட்டுக் கொண் டிருந்தான். பின்னும் அவரவருடைய அவகாசப்படி அவரவர் தன் வீதஞ் சரியாய்க் கொடுக்கச் செய்து அந்தப் பொன்னையும் வெள்ளியையும் பார வோனுக்குச் செலுத்திவந்தான்.

36. இராசரீகஞ் செய்யத் துடங்கின போது யோவாக்கியமுக்கு இருபத் தைந்து வயது இருக்கும். பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டனன். ரூமாவூரானாகிய பாதாயியாவின் புத்திரி யாகிய அவன் தாயின் பெயர் செபிதாள்.

37. அவன் தன் பிதாக்கள் செய்தபடி யெல்லாங் கர்த்தருடைய சமுகத்திற்குத் தின்மையானதையே செய்தான்.