அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 23

தாவீது கெயிலா பட்டணத்தை மீட்டது.

1. இதோ பிலிஸ்தியர் கெயிலாவில் யுத்தம் பண்ணிக் களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்களென்னுஞ் செய்தி தாவீதுக்குத் தெரிவிக்கப் பட்டது.

2. அப்பொழுது தாவீது: நான் போய் அந்தப் பிலிஸ்தியரை முறிய அடிக்க வேண்டுமா என்று ஆண்டவ ரிடத்தில் ஆலோசனை கேட்டதற்கு ஆண்டவர்: நீ போ, பிலிஸ்தியரை முறிய அடித்துக் கெயிலாவை மீட்பாயென்று சொன்னார்.

3. ஆனால் தாவீதுடன் இருந்த மனிதர்கள் அவனை நோக்கி: இதோ நாங்கள் இங்கு யூதேயாவிலே இருந்தும் பயந்து கொண்டிருக்கிறோமே; பிலிஸ் தியருடைய படைகளை எதிர்க்கிறதற்குக் கெயிலாவுக்குப் போனால் எவ்வளவு அதிகமென்றார்கள்.

4. ஆதலால் தாவீது மறுபடியும் ஆண்டவரிடத்தில் ஆலோசனை கேட் டான். அவர் மறுமொழியாக: நீ எழுந் திருந்து கெயிலாவுக்குப் போ; நாம் பிலிஸ்தியரை உன் கையில் ஒப்புக் கொடுப்போமென்று அவனுக்குச் சொன் னார்.

5. அப்படியே தாவீது தன் மனிதர் களோடு கெயிலாவுக்குப் போய் பிலிஸ் தியருக்க எதிராகச் சண்டை பண்ணி அவர்களில் வெகுவெகுபேரைச் சங்காரம் பண்ணி, அவர்களுடைய பொதி மிருகங் களை ஓட்டிக் கொண்டு போனான். தாவீது அவ்விதமாய் கெயிலாக் குடிகளை மீட்டிரட்சித்து விட்டான்.

6. ஆனால் அக்கிமெலேக்கினுடைய குமாரனாகிய அபியாத்தார் கெயிலா விலிருந்த தாவீதினிடத்தில் ஓடினபோது அவன் தன்னுடன் ஒரு எப்போத்தை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

7. பிறகு தாவீது கெயிலாவில் வந்தானென்று சவுலுக்குத் தெரிவிக்கப் பட்டது. அதைக் கேள்விப்பட்டுச் சவுல்: கதவுகளும், பூட்டுகளும் உள்ள பட்ட ணத்தில் நுழைந்தான், அடைபட்டான், தேவன் அவனை என் கைகளில் ஒப்புக் கொடுத்தாரென்று சொல்லி,

8. கெயிலாவில் சண்டைக்குப் போக வும் தாவீதையும் அவன் சனங்களையும் முற்றிக்கையிடவுஞ் சனங்களுக்கெல் லாங் கட்டளையிட்டான்.

9. தனக்குப் பொல்லாப்பு செய்யச் சவுல் இரகசியமாய் எத்தனப்படுகிறா னென்று தாவீது அறிந்தபோது ஆசாரிய னான அபியாத்தாரை நோக்கி: எப்போத் தைப் போட்டுக் கொள் என்று சொன் னான்.

10. பின்பு தாவீது: இஸ்றாயேலின் தேவனாகிய ஆண்டவரே, சவுல் என் னைப் பற்றிக் கெயிலாவுக்கு வந்து பட்டணத்தை அழிக்க முஸ்திப்பாயிருக் கிறதாய் உமது தாசன் கேள்விப்பட் டான்.

11. கெயிலா மனிதர்கள் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார் களோ? உமது தாசன் கேள்விப்பட்டது போல சவுல் வருவானோ? இஸ்றாயேல் தேவனாகிய கர்த்தாவே, இதை உமதடி யானுக்குத் தெரிவியுமென்று வேண்டிக் கொண்டு விசாரித்ததற்கு: அவன் வருவா னென்று ஆண்டவர் சொன்னார்.

12. மறுபடியும் தாவீது: கெயிலா மனிதர்கள் என்னையும் என்னுடன் இருக்கிற மனிதர்களையும் சவுல் கையில் ஒப்புக்கொடுப்பார்களோவென்று கேட் டான். அதற்கு ஆண்டவர்: ஒப்புக் கொடுப்பார்களென்று சொன்னார்.

13. ஆகையால் தாவீதும் அவனோ டிருந்த ஏறக்குறைய அறுநூறு பேர்களும் கெயிலாவை விட்டுப் புறப்பட்டு எங்கு போகிறதென்று நிச்சயமாய் அறியாமல் அங்குமிங்குந் திரிந்தலையத் துடங்கி னார்கள். தாவீது கெயிலாவிலிருந்து ஓடித் தப்பித்துக் கொண்டானென்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது; ஆனது பற்றி அவன் புறப்படுகிறதை நிறுத்தி விட்டாப்போலப் பாவனை காட்டினான்.

14. தாவீதோ வனாந்தரத்திலுள்ள மகா அரணிப்பான இடங்களிலே தங்கி, ஜீப் என்னும் வனத்திலே காடடர்ந்த ஒரு மலையைக் கண்டு அங்கே தரித்துக் கொண்டிருந்தான். சவுல் அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஓயாமல் உபாயந் தேடினான்; ஆனால் கர்த்தர் தாவீதை அவன் கையில் ஒப்புக்கொடுக் கவில்லை.

15. பின்பு தன் பிராணனை வாங்கு வதற்குச் சவுல் புறப்பட்டானென்று அறிந்து கொண்டதினாலே தாவீது வனாந்தரத்திலுள்ள ஜீப் என்கிற ஆரணியத்தில் இருந்து விட்டான்.

16. (அந்தத் தறுவாயில்) சவுலின் குமாரனாகிய ஜோனத்தாஸ் காட்டி லிருந்த தாவீதினிடத்தில் வந்து தேவ விஷயங்களைச் சொல்லி அவனைத் தேற்றிக் கொடுத்து: நீர் எதுக்கும் அஞ்ச வேண்டாம்; என் தகப்பனான சவுல் பரிச்சேதம் உம்மைக் கண்டுபிடிக்க மாட்டார் என்றும், 

17. நீர் இஸ்றாயேலின்மேல் இரா சாங்கம் பண்ணுவீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன். இவையெல்லாம் என் தகப்பனான சவுலுக்குத் தெரியுமென்றும் ஆறுதலாகச் சொன்னான்.

18. அப்பொழுது அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினார்கள்; பிற்பாடு தாவீது இருந்த காட்டிலே தரித்துக் கொண் டான். ஜோனத்தாஸ் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.

19. அப்புறம் ஜீப் ஊரார் காபா விலிருந்த சவுலண்டை போய்: தாவீது எங்கள் நாட்டைச் சேர்ந்த வனாந்தரத் துத்தென் திசையிலிரா நின்ற அக்கிலா மலையின் ஒரு காட்டிலே ஒளித்துக் கொண்டிருக்கிறான். மகா அரணிப் புள்ள ஸ்தானம்.

20. (அவனைப் பிடித்துக் கொள்ளும் படி) நீர் வர விரும்பினீரே; இப்போதே வாரும். ஆனால் உம்முடைய வசத்தில் அவனை ஒப்புக்கொடுப்பது எங்கள் பாடு.

21. அதைக் கேட்டுச் சவுல் நீங்கள் என் பேரில் தயவு காட்டினதினாலே ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கக் கட வாராக.

22. நீங்கள் எனக்கு உபகாரம் பண்ணி, அங்கே போய் எல்லாவற்றை யும் முஸ்திப்புப் படுத்த வேண்டும். சாவ தானமாயிருங்கள். அவன் நடமாடுகிற ஸ்தானம் இன்னதென்றும் அவ்விடத்தில் அவனைக் கண்டர்கள் இன்னாரென்றும் சூசனையாய் ஆராய்ந்து பாருங்கள். உள்ளபடி நான் அவனைப் பிடிக்க உபாயம் பண்ணி வருகிறேனென்று அவ னுக்கு நன்றாய்த் தெரியும்.

23. அவன் ஒளித்துக் கொண்டிருக்கிற மறைவிடங்களை எல்லாம் ஆராய்ந்து நிச்சயப்படுத்தின உடனே நீங்கள் திரும்ப என்னிடத்தில் வந்து சொல்லுங்கள்; அப்பொழுது நான் உங்களோடுகூடப் போவேன். அவன் தன்னைப் பூமிக் குள்ளே ஒளித்தாலும் யூதாவின் சகல வீரர்களை நாம் கொண்டுவந்து நிச்சயமாய்க் கண்டுபிடிப்போமென் றான்.

24. (சரிதான் என்று சொல்லி) அவர்கள் எழுந்து சவுலுக்கு முந்தியே ஜீப் புக்குப் போனார்கள். அந்நேரத் திலேயோவெனில், தாவீதும் அவனு டைய மனுஷர்களும் எசிமோனுக்குத் தென்புறத்து அந்தர வெளியாகிய மகோன் என்னும் வனாந்தரத்திலே இருந் தார்கள்.

25. (ஏனெனில்) அவனைத் தேடச் சவுலும் அவன் மனுஷர்களும் புறப்பட்டு வருகிறார்கள் என்கிற சமாச்சாரம் தாவீ துக்குத் தெரிவிக்கப்பட்ட மாத்திரத்தில் அவன் பாறையருகில் வந்து மகோன் வனாந்தரத்தில் தரித்தான். சவுல் இதைக் கேள்விப் பட்ட போது கோமன் வனாந்தரத்தில் தாவீதைத் துடர்ந்து போனான்.

26. சவுல் மலையின் இந்தப் பக்கத் திலும், தாவீதும் அவன் மனிதர்களும் மலையின் அந்தப் பக்கத்திலும் நடந் தார்கள். சவுலின் சமுகத்திற்குத் தப்பிப் போகலாமென்கிற நம்பிக்கை தாவீதுக்கு இல்லை. ஏனெனில் சவுலும் அவன் மனிதர்களுந் தாவீதையும் அவன் மனிதர்களையும் பிடிக்கும் பொருட்டுச் சுற்றிலுமே அவர்களை வளைந்து கொண்டார்கள்.

27. அந்தச் சமயத்தில் ஒரு தூதன் சவுலிடத்திற்கு வந்து: பிலிஸ்தியர் உமது தேசத்தைப் பிடிக்க வந்திருக்கிறார்கள். நீர் தீவரித்து வாரும் என்று சொன்னான். 

28. ஆகையால் சவுல் தாவீதைத் துடர்வதை விட்டுத் திரும்பிப் பிலிஸ் தியரை எதிர்க்கும்படி போனான். ஆனதுபற்றி அந்தவிடத்திற்குப் பிரிக்கிற கல்லென்று பேரிடப்பட்டதாம்.