அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 22

தாவீதின் நன்றியறிந்த பாடல்.

1.  கர்த்தர் தாவீதைச் சவுலின் கைக்கும் அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்குந் தப்புவித்து மீட்டிரட்சித்த பிற்பாடு தாவீது கர்த்தருக்குப் பாடின பாடல்:

2. அவன் சொன்னதாவது:  கர்த்தர் என் கற்பாறையும், என் பலமும், என் இரட்சகருமானவர்.

3. தேவன் நான் நம்புகிற துருகமே; என் கேடயமும் என் இரட்சணியத் தாபரமும் என் மகிமையும் என் அடைக் கலமும் அவரே; என்னிரட்சகரே என் னைப் பாவத்தினின்று நீங்கலாக்கி மீட்பீராக!

4. ஸ்துதிக்குப் பாத்திரமாகிய கர்த் தரை நோக்கிக் கூப்பிடுவேன்.  அதனால் என் சத்துருக்களுக்குத் தப்பித்துக் கொள் ளுவேன்.

5. ஏனெனில் மரண பயங்கரம் என் னைச் சூழ்ந்து கொண்டது.  பெலியாலின் பிரவாகங்கள் என்னை வெருட்டி விட் டன.  

6. பாதாளத்தின் கயிறுகள் என் னைச் சுற்றி வளைத்தன; மரணக் கண்ணி கள் என் மேலே விழுந்தன.

7. எனக்குண்டான நெருக்கத்திலே ஆண்டவரைக் கூவியழைப்பேன்.  என்  தேவனை நோக்கி அபயமிடுவேன்; அவர் தமது ஆலயத்தினின்று என் சப்தத்தைக் கேட்பார். என் அபய சப்தமும் அவருடைய செவிகளில் ஏறும்.

8. பூமி திடுக்கிட்டு அதிர்ந்தது.  அவர் கோபங் கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திவாரங்களே நடுங் கிக் குலுங்கித் தகர்ந்தன.

9. அவருடைய நாசிகளினின்று புகை வெளிப்பட்டெழும்பிற்று; அவரு டைய வாயினின்று அக்கினி புறப்பட் டது;  அதினால் மரக்கரிகளும் தீப்பற்றிக் கொண்டழன்றன.

10. அவர் வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவருடைய பாதங்களின் கீழ் காரிருள் வியாபித்திருந்தது.

11. ஞானாதிக்கரின் மீதேறிப் பறந் தார்;  காற்றின் செட்டைகளின்மீது தாவிப் போய்விட்டார்.

12. அந்தகாரத்தைத் தமக்குச் சுற்றி லும் வைத்துத் தம்மை மறைத்தார்.  ஆகாயத்து மேகங்களிலே நின்று மழை வடியச் செய்தார்.

13. அவருடைய சந்நிதிப் பிரகாசத் தினால் அக்கினிக் கரிகளும் பற்றியெரிந் தன.

14. ஆண்டவர் வானத்தினின்று இடி முழக்கமுண்டாகப் பண்ணுவார்.  உந்நத மானவர் தமது குரல் சப்தத்தைத் தொனிக்கச் செய்வார்.

15. அவர் அம்புகளை எய்து அவர் களைச் சிதற அடித்தார், மின்னல்களைப் பிரயோகித்து அவர்களை அழித்துவிட் டார்.

16. கர்த்தர் அதட்டிக் கண்டித்ததினா லும் அவர் தமது கோப சுவாசத்தை வீசினதினாலும் கடலின் பாதாளங்களுந் தென்பட்டன.  பூமியின் அடிவாரங் களுங் காணப்பட்டன.

17. அவர் உயரத்திலிருந்து அனுப்பி என்னைப் பிடித்துச் சலப்பிரவாகத்தி லிருந்து என்னைத் தூக்கி எடுத்துவிட் டார்.

18. அவர் அதிமிக வல்லமையுடைய என் சத்துருவினிடத்திலே நின்றும், என்னிலும் பலவான்களாயிருந்து என் னைப் பகைத்த என் வைரிகளிடத்திலே நின்றும் என்னைத் தப்புவித்தார்.

19. என் துயரத்தின் நாளில் அவர் எனக்கு எதிரே வந்தார்; கர்த்தரே என் ஆதரவானார்.

20. விசாலமான ஸ்தலத்தில் என்னைக் கொணர்ந்தார். நான் அவருக்குப் பிரியப் பட்டேனாகையால் என்னை விடுவித்தார்.

21. ஆண்டவர் என் நீதித்தனத்திற்குத் தக்காப்போலே எனக்குப் பதில் அளிப் பார்; என் கைகளின் சத்தத்திற்குத் தக்காப்போலே எனக்குச் சரிக்கட்டுவார்.

22. ஏனெனில் நான் ஆண்டவரு டைய வழிகளைக் காத்துக் கொண்டு வந்தேனொழிய தேவனை விட்டு நான் அக்கிரமஞ் செய்தேனில்லை.

23. அவருடைய நியாயங்கள் எல் லாம் என் கண்களுக்கு முன்பாக இருக் கின்றன; அவருடைய பிரமாணங்களை விட்டு விலகினேனில்லை.

24. அவரோடு கூடி உத்தமனாயிருப் பேன்.  என் அக்கிரமத்தினின்றும் என் னைக் காத்துக் கொள்வேன்.

25. கர்த்தர் என் நீதித்தனத்துக்குத் தக்காப்போலும், அவருடைய கண்களுக் குத் தோன்றிய என் கைகளின் சுத்தத் திற்குத் தக்காப்போலும் எனக்குப் பதில் அளிப்பார்.

26. நீர் சிஷ்டனுக்குச் சிஷ்டனாயும் பலவானுக்கு உத்தமனாயுமிருப்பீர்.

27. புனிதனுக்குப் புனிதனாகவிருப் பீர்; துஷ்டனையோ அவன் துஷ்டத் தனத்திற்களவாகக் கண்டனை பண்ணு வீர்.

28. நீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்.  உமது கண்களைத் திருப்பித் தங்கள் மேன்மையைப் பாராட்டுகிறவர் களைத் தாழ்த்திப்போடுவீர்.

29. உள்ளபடி கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; தேவரீரே என் இருளைப் பிரகாசிக்கப் பண்ணுகிறீர்.

30. உம்மோடிருந்து நான் (யுத்தத் திற்கு) ஓடுவேன்.  என் தேவன் இருக்க நான் ஒரு மதிலையுந் தாண்டுவேன்.

31. தேவனுடைய வழி மாசற்ற வழியே. கர்த்தருடைய வசனம் புடமிடப் பட்ட வசனமே.  அவர்மேல் எவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அவர் கேடய மாயிருக்கின்றவர்.

32. கர்த்தரை அல்லாது தேவன் யார்? நம்முடைய தேவனேயன்றி வல்லமையாயிருக்கிறவன் யார்?

33. அவரல்லோ என்னையும் பலப் படுத்தினார்;  என் வழியையுஞ் செவ் வைப் படுத்தினார்.

34. அவரல்லோ என் கால்களை மான்களின காலைப் போலாக்கினார்; என் உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தி வைத்தார்.

35. அவரல்லோ என் கைகளை (யுத்தத்திற்குப்) பழக்குகின்றார்; என் புயங்களையும் வெண்கல வில்லைப் போல் ஆக்குகின்றாரே.

36. (கர்த்தரே,) உம்முடைய இரட் சண்ணியத்தின் கேடயத்தை எனக்குத் தந்தீர்; உமது கருணையே என்னைத் தழைத்திருக்கச் செய்தது.

37. என் கால்களின் அடிகளை அகலமாயிருக்கப் பண்ணுவீர், என் கால் களை வழுக்காதபடிக்கு என்னை ஸ்திரப் படுத்துவீரே.

38. என் சத்துருக்களை நான் பின் தொடர்ந்து அவர்களைச் சின்னாபின்ன மாய் வெட்டுவேன்; அவர்களை முடிவு மட்டாக நிர்மூலமாக்காமல் திரும்பி வர மாட்டேன். 

39. அவர்கள் எழுந்திருக்கக் கூடாத படிக்கு அவர்களை நொறுக்கி அழித்துப் போடுவேன்; அவர்கள் என் பாதங்களின் கீழ் விழுவார்கள்.

40. யுத்தத்திற்கு நீர் என்னைப் பலப் படுத்தினீர்; என்னை எதிர்க்கிறவர்களை என் கீழ் மடங்கச் செய்தீர்.

41. என் சத்துருக்களை எனக்குப் புறங் காட்டச் செய்தீர்; என்னைப் பகைக் கிறவர்களை அழித்துவிடுவேன்.

42. அவர்கள் கூவுவார்கள்; அவர் களை மீட்டிரட்சிப்பார் ஒருவருமில்லை.  கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்வார் கள்; அவரோ அவர்களுக்குச் செவி கொடார்.

43. பூமியின் புழுதியைப்போல் அவர்  களைச் சிதற அடிப்பேன்.  தெருக்களின் சகதியைப் போல் அவர்களை மிதித்துச் சின்னாபின்னமாக்குவேன்.

44. என் ஜனத்தின் வாக்குவாதத் துக்கு என்னைத் தப்புவித்துச் சாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைத்துக் காப் பாற்றுவீர்; நான் அறியாத ஜனங்களே என்னைச் சேவிப்பார்கள்.

45. அன்னியனின் புத்திரர் எனக்கு எதிர் நிற்பார்கள்; ஆனால் அவர்கள் என் சப்தத்தைக் காதினாலே கேட்ட மாத் திரத்தில் எனக்குக் கீழ்ப்படிவார்கள்.

46. அன்னிய புத்திரர்கள் மடிந்து போனார்கள்; தங்கள் இடுக்கண்களில் நெருக்குண்டு நிற்பார்கள்.

47. கர்த்தர் ஜீவனுள்ளவர்!  என் தேவன் ஸ்துதிக்கப்படுவாராக;  என் இரட்சணியத்தின் பலமுள்ள தேவன் உயர்த்தப்படுவாராக!

48. எனக்காகப் பழிக்குப் பழி வாங்கு கின்ற தேவன், ஜனங்களை என் கீழ் அடக்குகின்ற தேவன் நீரே.

49. என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவிக்கிறவரும், என்னை விரோதிக் கிறவர்களின்மேல் என்னை உயர்த்துகிற வரும், அக்கிரமிகளில் நின்றென்றை மீட்கிறவரும் நீரே.

50. அதினிமித்தம், என் ஆண்டவரே ஜாதிகளுக்குள்ளே உம்மை ஸ்துதித்துப் போற்றுவேன்; உம்முடைய (திரு) நாமத் துக்குப் பாட்டும் பாடுவேன்.

51. அவரே இராசாவின் இரட்சிப்பை மிகுவித்து, தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும், அவன் சந்ததிக்கும் என்றென்றைக்குங் கிருபை புரிவாராக.