அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 22

யோசியாசின் ஆட்சி

1.  யோசியாஸ் சிம்மாசனம் ஏறிய போது எட்டு வயதாயிருந்தான்; முப்பத் தொரு வருஷம் எருசலேமிலே அரசாண் டான். பேசகாத் ஊரில் பிறந்த அதாயா வின் குமாரத்தி இதிதா என்பவள் அவனைப் பெற்றிருந்தனள்.

2. அவன் ஆண்டவருக்குப் பிரீதி யானதையே செய்தனன்; தன் பிதாவான தாவீதின் எல்லா வழிகளிலும் வலது புறம், இடதுபுறம் சாயாமல் நடந் தனன்.

3. தன்னுடைய ஆளுகையின் பதி னெட்டாம் வருஷத்திலே யோசியாஸ் தேவாலயத்தின் கணக்கனும் மெச்சுலா முக்குப் பிறந்த அஸ்லியா குமாரனு மாகிய சாப்பானென்போனை வர வழைத்து: 

4. நீ பெரிய குருவான எல்கியாசிடத் திற்குப் போய், ஆண்டவருடைய ஆலயத் துக்குக் கொண்டுவரப்பட்டதும், தேவா லயத்து வாசல் காவலர்கள் ஜனங்கள் கையிலே வாங்கியதுமான பணத்தைச் சேர்க்க வேணுமென்றும்,

5. பிற்பாடு அவர்கள் அதை ஆண்டவருடைய ஆலயத்துக் காரியஸ்தர் கையிலே கொடுத்து இவர்கள் அதனைத் தேவாலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக அதில் வேலை செய்துவருகிற வேலைக் காரராகிய

6. சிற்பாசாரிகட்கும், தச்சர்கட்கும் பழுதுபார்க்கிற கொல்லற்றுக்காரர்கட் கும், அவசரமானபடி கருங்கல்லுகளை யும், மரங்களையும் விலைக்கு வாங்கு வதற்குஞ் செலவழிக்கவேணுமென்றும்,

7. ஆயினும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் பணத்தின் கணக்கை அவர் களிடத்தில் கேட்கவேண்டியதில்லை யென்றும், அவர்கள் அதைத் தங்கள் வசத்தில் வைத்துக்கொண்டு சொந்தக் காரர்போல் நியாயமாய்ச் செலவிட வேணுமென்றுஞ் சொல்வாயென்றான்.

8. பிரதான ஆசாரியனான எல்கியா சென்பவன் சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: தேவாலயத்திலே நியாயப்பிர மாணப் புத்தகத்தை நான் கண்டுபிடித் தேன் எனச் சொல்லி எல்கியாஸ் அப்புத் தகத்தைச் சாப்பானுக்குக் கொடுக்க, அவன் அதை வாசித்தான். 

9. அப்பொழுது சம்பிரதியான சாப்பான் அரசனிடத்தில் வந்து இராசா கொடுத்திருந்த கட்டளைகளைக் குறித்து மறுவுத்தரவு சொல்லி: ஆண்ட வனே உம்முடைய அடியார்கள் தேவா லயத்தில் அகப்பட்ட பணத்தைச் சேக ரித்து வேலையாட்களுக்கு அதனைக் கொடுக்கும்படியாகத் தேவாலயத்துக் காரியஸ்தர்கட்குக் கொடுத்தனர் என்று சொன்னான்.

10. பின்னுஞ் சாப்பான் அரசனைப் பார்த்து: எல்கியாஸ் குருவானவர் என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத் தார் என்றான். பின்பு அவன் அதை இராசாவுக்கு முன்பாக வாசித்தான்.

11. இராசா கர்த்தருடைய நியாயப் பிரமாணத்தின் வாக்கியங்களைக் கேட்ட போது தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு,

12. எல்கியாயஸன்னும் குருவான வரையும், சாப்பான் குமாரனான அயிக் காமையும், மிக்கா குமாரன் அக்கோ பாரையும், சம்பிரதியான சாப்பானை யும், அரசனினூழியனாகிய அசாயியாசை யும் பார்த்து: 

13. நீங்கள் போய் அகப்பட்ட புத்தகத்தின் வாக்கியங்கள் நிமித்தமாக என்னைப் பற்றியும், பிரசையைப் பற்றியும், யூதா சனமெல்லாத்தையுங் குறித்தும், கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; ஏனெனில் நமக்காகவே எழுதியிருக்கிற எல்லா வாக்கியங்களின்படி நடக்க நமது பிதாக்கள் இப்புத்தகத்தின் வாக்கியங் களுக்குச் செவிகொடாதபடியினாலே அன்றோ, கர்த்தருடைய பெருங் கோபாக்கினியானது நமக்கு விரோத மாய்ப் பற்றியெரிகிறது என்றான்.

14. அப்போது குருவாகிய எல்கியா சும், அயிக்காமும், அக்கோபோரும், சாப் பானும், அசாயியாசும், எருசலேமில் இரண்டாம் (சுற்று வட்டத்தெருவில்) குடியிருந்த தேவாலய வஸ்திரசாலை விசாரிக்கிறவனாகிய ஆரவாஸ் பெளத் திரனும்,தேக்குவா குமாரனுமான செல்லோமின் மனைவியான ஒல்தாம் என்னும் தீர்க்க்தரிசியானவளுடைய இடத்திற்குப் போய் அவளோடு பேசி னார்கள்.

15. ஒல்தாம் அவர்களை நோக்கி: இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்த ருடைய வார்த்தைகளைக் கேளுங்கள். என்னிடமாய் உங்களை அனுப்பிய புருஷோத்தமனுக்கு நீங்கள் போய்ச் சொல்ல வேண்டியதாவது: 

16. யூதா அரசன் வாசித்த வேதாகம வசனங்களெல்லாம் நிறைவேறத் தக்க தாக, இதோ நாம் இந்த நகரத்தின் மேலும் அதின் வாசிகளின்மேலும் அப்புத்தகத்தில் காட்டியிருக்கிற பொல் லாப்பை வரப் பண்ணுவோம்.

17. ஏனெனில் அவர்கள் என்னை விட்டுத் தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் நமக்குக் கோபமுண் டாக்க அந்நிய தேவர்கட்குப் பலியாரா தனை செய்தபடியினாலே நமது கோபாக் கிரமானது இந்த ஸ்தலத்தின்மேல் பற்றி எரியும்; அது அவிக்கப்படமாட்டா.

18. கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பிய யூதா அரசனுக்கு நீங்கள் போய்ச்சொல்ல வேண்டிய தாவது: நீர் இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர் வசனிக்கிறது என்னவென்றால்: நீர் அந்தப் புத்தகத்தின் வாக்கியங் களைக் கேட்டதினாலும்,

19. நான் இந்த ஸ்தலத்திற்கும் அதன் வாசிகளுக்கும் விரோதமாக அவர்கள் சபிக்கப்பட்டவர்களாய் பயங்கரத்துக்குப் பாத்திரமானவர்களாய் எண்ணப்படு வார்களென்று சொன்னதை நீ கேட்டு, உள்ளங்கலங்கி ஆண்டவர் முன்பாக உன்னைத் தாழ்த்தினதினாலும், உன் உடைகளைக் கிழித்துக் கொண்டு நமது முன் அழுததினாலும் நாமும் உன் வேண்டுதலுக்குச் செவிகொடுத்தோம்.

20. ஆதலால் இப்பட்டணத்தின்மேல் நாம் வருவிக்கப் போகிற தின்மைகளை யெல்லாம் உன் கண்கள் பார்க்காதிருக்க உன்னை உன் பிதாக்களோடு சேர்ப் போம். நீ சமாதானத்துடன் உன் கல் லறைக்குப் போவாயென்று கர்த்தர் சொல்லுகிறார் (என்றனள்.)