சர்வப்பிரசங்கி (சீராக்) ஆகமம் - அதிகாரம் 22

சோம்பேறி துஷ்டப்பிள்ளைகள் மற்றதும்.

1. சோம்பேறி அசுத்தமான கல்லால் அடிக்கப்படுகிறான்; சகலரும் அவனைப் பற்றி நிந்தையாய்ப் பேசுவார்கள்.

2. சோம்பேறி எருதுகளின் சாணத்தால் அடிபடுகிறான்; அவனைத் தொட்டவன் எவனும் தன் கைகளை உதறுவான்.

3. தவறாகக் கற்பிக்கப்பட்டவனாகிய மகனால் தகப்பனுக்கு வெட்கமுண்டாகும்; மூடத்தனமுள்ள மகளோ அவனுடைய இழப்பின் காரணமாயிருப்பாள்.

4. ஞானமுள்ள மகள் தன் கணவனுக்கு சொத்தைக் கொண்டு வருவாள்; ஆனால் வெட்கத்துக்குரியவளான மகளோ தன் தந்தைக்கு அவமானமாகிறாள்.

5. துடுக்குள்ளவள் தந்தையையும் கணவனையும் வெட்கத்திற்கு உள்ளாக்குகிறாள். அவபக்தியுள்ளவர்களுக்கு அவள் தாழ்ந்தவளாக இருக்க மாட்டாள்; ஆனால் இரு திறத்தாராலும் அவள் அவமதிக்கப்படுவாள்.

6. சமயத்திற்குத் தகாத புறணி துக்கத்தில் பாடுவதுபோலாகும்; ஆனால் ஞானத்தின் கட்டுகளும், போதகமும் ஒருபோதும் நேரம் தப்பித் தரப்படுவதில்லை. 

7. மூடனுக்கு உபதேசம் செய்பவன் உடைந்துபோன ஓடுகளை ஒட்டுகிறவன் போலாம்.

8. செவி கொடாதவனிடம் பேசுகிறவன், ஆழ்ந்த நித்திரையில் அசந்து கிடப்பவனை எழுப்புகிறவன் போலாம்.

9. மூடனுக்கு ஞானத்தைப் போதிக்கிறவன் உறங்குகிறவனோடு பேசுகிறான்; அவன் உரையாடலின் முடிவில் இவனை நோக்கி, இவன் யார் என்பான்.

10. மரித்தவனைப்பற்றிக் கண்ணீர் விடு; ஏனெனில் அவனுடைய ஒளி அணைந்துபோனது; மூடனைப்பற்றி அழு; ஏனெனில் அவன் அறிவு தவறிப் போனது.

11. மரித்தவனைப்பற்றிக் கொஞ்ச மாக அழு; ஏனெனில் அவன் இளைப்பாற்றியில் இருக்கிறான்.

12. ஆனால் தீயவனான மூடனின் தீய வாழ்வு மரணத்தை விட மிகக் கெடுதியாயிருக்கிறது.

13. மரித்தவனுக்காகத் துக்கம் கொண்டாடுவது ஏழுநாள் வரை; மூடனுடையவும் அக்கிரமியினுடை யவும் துக்கமோ அவர்கள் சீவிய நாட்களெல்லாம்.

14. மூடனோடு அதிகம் பேசாதே, புத்தியற்றவனோடு சேர்ந்து போகாதே. 

15. உனக்கு இடைஞ்சல் உண்டா காதபடியும், அவனது பாவத்தால் நீ கறைப்படாதபடியும் அவனிடம் இருந்து தொலைவாக இருந்துகொள்.

16. அவனை விட்டு அகன்று போனால், ஓய்வைக் கண்டடை வாய், அவன் மூடத்தனத்தால் நீ மனச் சோர்வு அடையமாட்டாய்.

17. ஈயத்தைவிட அதிக கனமானது என்னவுண்டு! மூடன் என்பதைவிட அவனுக்கு வேறு பெயர் என்ன வுண்டு? 

18. புத்தியற்ற மனிதனை, அதாவது மூடத்தனமும், தீய குணமும் உள்ள ஒருவனை சகித்துக்கொள்வதைவிட மணலையும், உப்பையும், இரும்புப் பாளத்தையும் அதிக எளிதாய்ச் சுமக்கலாம்.

19. ஒரு கட்டடத்தின் அஸ்திவாரத் தில் ஒன்றாய்ச் சேர்த்துக் கட்டப் பட்ட மரச்சட்டம் அவிழ்ந்துபோவ தில்லை; நல்ல ஆலோசனையின் எண்ணத்தில் உறுதிப்பட்ட இருதய மும் தளர்ந்து போகாது.

20. எக்காலத்திலும் ஞானமுள்ள வனின் சிந்தனை பயத்தால் கெட்டுப் போவதில்லை.

21. உயர்ந்த இடங்களில் கட்டப்பட்ட கூர்முனையுள்ள பலகைகளும், செலவில்லாத பூச்சுகளும், காற்றின் முகத்தே நில்லாதது போலவே,

22. மூடனின் கற்பனையில் கோழைத்தனமுள்ள மனது கடும் பயத்திற்கு முன்னால் நிற்காது.

23. மூடனாயிருப்பவனின் நினை வில் அச்சமுள்ள இருதயம் எப்போ தும் பயப்படாது என்பது போலவே, கடவுளின் கட்டளைகளில் தொடர்ந்து நிலைத்திருப்பவனும் பயப்பட மாட்டான்.

24. கண்ணைக் குத்திக்கொள்ளு கிறவன் கண்ணீர் வரச்செய்கிறான்; அதுபோலவே இருதயத்தைக் குத்து கிறவனும் கோபத்தைத் தூண்டு கிறான்.

25. பறவைகளின்மேல் கல்லெறி கிறவன் அவற்றை விரட்டி விடுவான்; அதுபோலவே நண்பனிடம் கோபப் படுகிறவன் நட்பை முறிக்கிறான்.

26. நண்பன் மீது நீ கத்தியை உருவி யிருந்தபோதிலும் அவநம்பிக்கைப் படாதே; ஏனெனில் சிநேகம் திரும்ப உண்டாகலாம்.

27. கஸ்தி வருத்தமான வார்த்தை களை நண்பனுக்கு எதிராகச் சொல்லி யிருந்தாலும், பயப்படாதே; ஏனெனில் அவனோடு நீ மீண்டும் சமாதானமாக லாம். ஆனால் கடுங்கோபம், கண்டனம், ஆங்காரம், இரகசியங் களை வெளிப்படுத்துதல், அல்லது துரோகமான ஒரு மனக்காயம் - இவற்றை நீ செய்திருந்தால் நண்பன் உன்னை விட்டு ஓடிப் போவான்.

28. உன் நண்பனின் செல்வச் செழிப்பில் அவனோடு நீயும் அக்களிக்கும்படியாய் அவனுடைய தரித்திரத்திலும் அவனுக்குப் பிரமாணிக்கமாயிரு.

29. அவனுடைய துன்ப காலத்தில் அவனுக்குப் பிரமாணிக்கனாய் நிலைத்திரு; அவன் சந்தோஷத் திற்கும் பங்காளியாவாய்.

30. நெருப்புக்கு முன் புகைபோக்கி யின் ஆவியும், புகையும் எழுவது போல இரத்தப் பழிக்கு முன் கயப்படுத்தும் வார்த்தைகளும் நிந்தைகளும் பயமுறுத்தல்களும் உண்டாகும்.

31. சிநேகிதனுக்கு மரியாதை செய்ய நான் கூச்சப்படமாட்டேன்; அவனுக்கு முன்பாக நான் ஒளிந்து கொள்ளமாட்டேன்; அவனால் தீங்கு நேர்ந்தாலும் நான் சகித்துக்கொள் வேன்.

32. ஆனால் இதைக் கேட்கும் எவனும் பயத்தில் அவனிடம் எச்சரிக்கையாயிருப்பான்.

33. என் வாயாலும், உதடுகளாலும் நான் விழுந்து விடாதபடியும், என் நாவு என்னை அழித்து விடாதபடி யும், யார் என் வாய்க்குக் காவலும், என் உதடுகளுக்கு ஓர் உறுதியான முத்திரையும் இடுவார்கள்?