ஜோசுவாவின் திருவாகமம் - அதிகாரம் 22

மனதோடும் அவரைச் சேவிக்க வேண்டும் என்பதேயாமென்றான்.

6. (என்றமாத்திரத்தில்) ஜோசுவா அவர்களை ஆசீர்வதித்துப் போக உத்தரவு கொடுத்தான். அவர்கள் புறப்பட்டுத் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போய்விட்டனர்.

7. ஆனால் மனாசேயின் பாதி கோத்திரத்தாருக்கு மோயீசன் பாசானிலே சுதந்தரங் கொடுத்திருந்தான்; மற்றப் பாதி கோத்திரத்தாருக்கு ஜோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலாகிய மேற்றிசை முகமாய் அவர்கள் சகோதரரின் நடுவிலே சுதந்தரங் கொடுத்திருந்தான். ஜோசுவா அவர்களைத் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடும்போது முதல் முதல் அவர்களுக்குப் பற்பல ஆசீர் கூறினான்.

8. பிறகு அவன் அவர்களை நோக்கி, நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும் ஆஸ்திகளோடும் வெள்ளி, பொன், செம்பு, இரும்பு (முதலியவைகளையும்) அனேக வஸ்திரங்களையும் வைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பி போகிறீர்களே. நீங்கள் சத்துருக்களிடத்திலே நீங்கள் கொள்ளை யிட்ட பொருட்களை உங்கள் சகோதரரோடு பங்கிட்டுக்கொள்ளக் கடவீர்களென்றான். 

9. அப்பொழுது ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதி கோத்திரத் தாருங் கானான் தேசத்திலுள்ள சிலோவி லிருந்த இஸ்ராயேல் புத்திரரை விட்டுக் கர்த்தருடைய கட்டளையின்படி மோயீச னால் அடைந்து தாங்கள் கைவசம் பண்ணிக் கொண்டிருந்த சுதந்தர தேசமான கலாத் நாட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள்.

10. கானான் தேசத்திலிருக்கிற யோர் தானின் அணைக்கட்டுகளுக்கு வந்தபோது அவர்கள் யோர்தானின் கரையிலே மகா பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.

11. ரூபன் புத்திரர்களும், காத் புத்திரர் களும், மனாசேயின் பாதி கோத்திரத் தார்களுங் கானான் தேசத்திலே யோர் தானின் அணைக்கட்டுகளிலே இஸ்ராயேல் புத்திரருக்கு எதிராக ஒரு பீடத்தைக் கட்டினதை நிச்சயமான சமாச்சாரத்தினால் கேள்விப்பட்டறிந்த மாத்திரத்தில் இஸ்ரா யேல் புத்திரர்,

12. சீலோவில் முழுசபையாகக்கூடி அவர்களுக்கு எதிர்த்து யுத்தம்பண்ணும்படி (யோசனைப்பண்ணினார்கள்.)

13. ஆனாலும் முதல் முதல் கலாத் தேசத்திலிருக்கிற அவர்களிடத்திற்குப் பிர தான ஆசாரியனாகிய எலெயஸாரின் குமார னான பினேயஸன்பவனையும்,

14. அவனோடுகூட பத்துக் கோத்திரங் களிலும் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ் வொரு தலைவரையுந் தூது அனுப்பினார்கள்

15. இவர்கள் கலாத் தேசத்திற்கு வந்து ரூபன் புத்திரர், காத் புத்திரர், மனாசேயின் பாதி கோத்திரத்தாராகிய அவர்களை நோக்கி:

16. தேவப்பிரஜை உங்களுக்குச் சொல்லச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் கர்த்தருடைய சட்டப் பிரமாணத்தை இப்படி மீறி நடந்தது என்ன? இஸ்ராயேலின் தேவ னாகிய ஆண்டவரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு நீங்கள் அவருடைய ஆராதனையை விட்டுப் பாஷண்ட புத்தியோடு உங்களுக்கு ஒரு பீடத்தை இயற்றின முகாந்தரமென்ன?

17. நீங்கள் பெல்பேகோரில் பண்ணின அக்கிரமும் போதாதா? நம்முடைய சபை யிலே நின்று அத்துரோகத்தின் தோஷம் நீங்காமல் நம்மில் எத்தனையே பேர் மாண்டு போயிருந்தாலும் அது இன்னும் நம்மை உபாதித்துக்கொண்டேயிருக்கின்றது, அதுவும் சொற்பகாரியந்தானோவென்ன?மீ

18. நீங்கள் இன்றைக்குக் கர்த்தரைத் துறந்துவிட்டதனால் அவர் நாளைக்கு இஸ்ரா யேலின் சபை அனைத்தின்மேல் கடுங்கோபங் கொள்வாரே.

19. உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டுள்ள தேசமென்று நீங்கள் எண்ணங் கொண்டிருந்தால் கர்த்தருடைய வாசஸ்தலந் தங்குகிற எங்கள் தேசத்திற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புது காணியாட்சியைப் பெற்றுக்கொள்ளலாமே. நீங்கள் கர்த்தரை யும் எங்கள் கூட்டத்தையும் விட்டகன்று போகாமல் எங்களோடு ஒரு கையாயிருக்க வேண்டும் என்றும், நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தையல்லாமல் நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்ட வேண்டாமென் றும் நாங்கள் உங்களை மன்றாடுகிறோமே யல்லாது வேறொன்றுங் கேட்கிறதில்லை.

20. ஜாரேயின் குமாரனாகிய ஆக்கான் கர் த்தருடைய கட்டளையை மீறினதினாலே இஸ்ராயேல் சபையின்மேலெல்லாந் தேவ கோபம் வரவில்லையா? அவன் ஒருவன் மாத்திரமே அக்கிரமம் பண்ணியிருக்க அவன் ஒருவன் மாத்திரம் மடிந்துபோயிருந்தாலே தாவிளை என்று சொன்னார்கள்: சொன்ன தைக்கேட்டு,

21. ரூபன் புத்திரரும், காத் புத்திரரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் இஸ்ரா யேலிய தலைவர் ஆகிய துVதுவர்களை நோக்கி:

22. மகா வல்லவரான தேவனாகிய கர்த் தருக்கு எங்கள் உட்கருத்து நன்றாகத் தெ ரியும்: தேவாதிதேவனாகிய அவர் அதை அ றிந்திருக்கிறதுபோல் இஸ்ராயேலரும் அதை அறிந்துகொள்ளட்டும்: நாங்கள் கலகப் புத்தியினாலே அந்தப் பீடத்தைக் கட்டியி ருந்தோமாகில் இந்நேரம் கர்த்தர் எங்களைக் கைநெகிழ விட்டுக் கண்டிக்கக் கடவராக!

23. நாங்கள் அந்தப் பீடத்தின்மேல் சர் வாங்கத் தகனப்பலிகளையாவது, போஜனப் பலிகளையாவது, சமாதானப் பலிகளையா வது செலுத்துகிறதற்கு அதைக் கட்டின துண்டானால் கர்த்தர் எங்களைக் கணக்குக் கேட்கவும், பழிவாங்கவுங் கடவாராக!

24. அப்படிப்பட்ட கருத்து எங்களுக்குப் பரிச்சேதமிருக்கவில்லை; ஆனால் மேலைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: உங்களுக்கும் இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தருக்கும் என்ன சம்பந்தம்?

25. ரூபனின் புத்திரரே, காதின் சந்ததி யாரே உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர், யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார். ஆதலால் கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லையயன்று சொல்லி உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கும்படி செய்தாலும் செய்வார்களென்று அஞ்சி, நாங்கள் அதை மனதில் எண்ணி,

26. எங்களுககுள்ளே பேசினது என்ன வெனில்: சர்வாங்கத் தகனப்பலி முதலிய பலிகளைச் செலுத்துவதற்கு அல்ல,

27. ஆனால் கர்த்தரிடத்தல் உங்களுக்குப் பங்கு இல்லையயன்று உங்கள் சந்ததியார் மேலைக்கு எங்கள் சந்ததியாரோடு சொல் லாதபடிக்கு நாங்கள் கர்த்தரின்மேல் அன் புள்ளவர்களாய் இருக்கிறோமென்று அவ ருக்குச் சார்வங்கத் தகனப்பலிகளையுஞ் சமாதானப்பலிகளையுஞ் செலுத்துஞ் சுத ந்தரம் எங்களுக்குண்டென்றும் எங்களுக்கும் உங்களுக்குஞ் சாட்சி உண்டாயிருப் பதற்காகவே நாங்கள் அந்தப்பீடத்தைக் கட்டினோம்.மீ

28. (உங்கள் பிள்ளைகள்) எப்போதாவது (எங்கள் பிள்ளைகளோடு) அவ்விதமாகப் பேசுவார்களேயாமாகில் எங்கள் பிள்ளைகள் அவர்களை நோக்கி: இந்தப் பீடம் சர்வாங்கத் தகனப்பலிகளையும் மற்றப் பலிகளையுஞ் செலுத்துவதற்கல்ல, உங்களுக்கும் எங்களுக் குஞ் சாட்சியாயிருக்கத் தக்கதாகவே எங்கள் பிதாக்களால் உண்டுபண்ணப்பட்டது என்பார்கள்.

29. கர்த்தருக்கு வாசஸ்தலத்திற்கு மு ன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர நாங்கள் சர்வாங்கத் தகனப்பலி களையாகிலும் போசனமுதலிய பலிகளையய ன்கிலும் ஒப்புக்கெடுப்பதற்காக வேறொரு பீடத்தைக் கட்டுகிறதாயிருந்தால் அது கர்த்தருக்கு விரோதமாய் கலகம் பண்ணு வதும், அவரை பின்செல்லாமல் கைவிட் டகலுவதுமாகவிருக்குமே. அப்படிபட்ட அக்கிரமத்தின் நினைவுக்கு நாங்கள் உட்ப டாதபடிக்குத் தேவன் எங்களைக் காப்பாற்றி இரட்சிப்பாராக என்று மறுமொழி சொன்னார்கள்.

30. ரூபன் புத்திரரும் காத் புத்திரரும்மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் முன் சொல்லிய வார்த்தைளைக் கேட்டபோது ஆசாரியனான பினேசும் அவனோடு துVது அனுப்பப்பட்டிருந்த சபையின் தலை வர்களும் கோபத்தை விட்டு மிகுந்த திருப்தி அடைந்தார்கள்.

31. அப்பொழுது ஆசாரியனான எலெய ஸார் குமாரனாகிய பினேஸ் அவர்களை நோ க்கி: நீங்கள் அப்படிப்பட்ட வஞ்சனையைச் செய்தவற்கு அதிதுVரமாயிருந்து இஸ்ராயேல் புத்திரரைக் கர்த்தரின் கோபத்திற்குத் தப்பு வித்தபடியினாலே கர்த்தர் நம்மோடு இருக்கிறாரென்பதை இப்பொழுது அறிந்தி ருக்கிறோம் என்றான்.

32. பிறகு பினேசென்பவன் ரூபன் புத்திரரையும், காத் புத்திரரையும் விட்டுத் த ன்னோடு வந்திருந்த சபையின் தலைவரோடு கூட காலாத் தேசத்தில் இருந்து புறப்பட்டுக் கானான் தேசத்திற்குத் திரும்பி இஸ்ராயேலி ன் புத்திரரிடத்திற்கு வந்து நடந்த சமாச்சாரஞ் சொன்னான்.

33. அந்தச் செய்தியைக் கேட்டவர்கள் யாவருஞ் சந்தோஷப்பட்டார்கள். இஸ்ரா¼ யல் புத்திரர் தேவனுக்குத் தோத்திரம் பண்ணித் தங்கள் சகோதரர்மேல் யுத்தத்துக்கு ப் புறப்படுவோம்; அவர்களுடைய தேசத்தை அழித்துப்போடுவோமென்கிற பேச்சை விட்டுவிட்டார்கள். 

34. பின்னும்: கர்த்தரே மெய்யான தே வன் என்பதற்கு அந்தப் பீடம் எங்களுக்குச் சாட்சியாயிருக்கும் என்று சொல்லி ரூபன் புத்திரரும், காத் புத்திரருந் தாங்கள் கட்டின பீடத்திற்கு அந்த அர்த்தங் கொண்ட பேரிட்டார்கள்.