அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 21

ஆக்காபும் நாபோத்தும்.

1.  இவைகளுக்குப் பின் அக்காலத் திலே ஜெஸ்ராயேலனாகிய நாபோத் தென்பவனுக்கு ஜெஸ்ராயேலிலே ஒரு திராட்சக் கொடித் தோட்டமிருந்தது; அது சமாரியாவின் இராசாவாகிய ஆக்கா பின் அரண்மனையண்டையில் தானிருந் தது.

2. ஆக்காப் நாபோத்தைப் பார்த்து: உன் திராட்சத் தோட்டம்  என் வீட்டை யடுத்திருக்கிறபடியால் அதைக் கீரைக் கொல்லையாகும்படி எனக்குக் கொடு; அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத் தோட்டத்தை அதற்குப் பதிலாய் உனக்குத் தருகிறேன்; அல்லது உனக்கு வேண்டுமானால் அதின் விலைக் கிரையத்தைத் தருகிறேனென்றான்.

3. அதற்கு நாபோத்: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பா ராக என்றான்.

4. இப்படி: என் பிதாக்களின் சுதந் தரத்தை உமக்குக் கொடேனென்று ஜெஸ்ராயேலனாகிய நாபோத் தன் னோடு சொன்ன வார்த்தைக்காக ஆக்காப் முனிந்து கோபமூர்க்கனாய்த் தன் பல்லைக் கடித்துத் தன் வீட்டிற்கு வந்து போஜனம் பண்ணாமல் தன் கட்டிலில் படுத்துத் தன் முகத்தைச் சுவர் பக்கமாய்த் திருப்பிக் கொண்டிருந்தான்.

5. அப்போது அவன் மனைவியாகிய எசாபேல் அவனிடத்தில் வந்து: நீர் ஏன் போஜனம்பண்ணவில்லை; உமது மனஞ் சலிப்பாயிருப்பானேன்?  இது என்ன காரணமென்று அவனைக் கேட்டதற்கு,

6. அவன் அவளை பாரத்து: நான் ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தோடு பேசி, உன் திராட்சத் தோட்டத்தை உனக்கு விலைக் கிரயமாய்க் கொடு, அல்லது உனக்கிஷ்டமானால் அதற்குப் பதிலாக வேறு திராட்சத் தோட்டத்தை உனக்குத் தருகிறேன் என்றேன்; அதற் கவன் என் திராட்சத் தோட்டத்தை உனக்குக் கொடுக்கமாட்டேனென்று சொன்னானென்றான்.

7. அப்பொழுது அவன் மனைவி யாகிய எசாபேல் அவனை நோக்கி: உம்முடைய அதிகாரம் அவ்வளவு தானோ? இவ்வளவு கெட்டித்தனமாய் நீர் இஸ்றாயேலின் மேல் இராச்சிய பாரஞ் செய்கிறீர்?  நீர் எழுந்திரும்.  போஜனம்பண்ணும், மன அமரிக்கையா யிரும்; ஜெஸ்ராயேலனாகிய நாபோத் தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுக்கிறேனென்று சொன் னாள்.

8. எசாபேல் ஆக்காபின் பேரால் உடனே நிருபங்களை எழுதி, அவை களில் அவன் முத்திரையிட்டு, அந்த நிரு பங்களை நாபோத் இருக்கும் பட்ட ணத்தில் குடியிருக்கிற மூப்பரிடத்திற்கும் பெரியோரிடத்திற்கும் அனுப்பினான்.

9. அந்த நிருபங்களில் அவள் எழுதி னது என்னவென்றால்: நீங்கள் ஓர் உப வாசத்தைப் பிரசித்தப்படுத்தி நாபோத் தை ஜனத்தின் மூப்பர்முன் நிறுத்தி,

10. அவனுக்கு விரோதமாய்ப் பெலி யாலின் மக்களாகிய இரண்டு பேரைச் சரிப்படுத்தி நாபோத் தேவனையும் இராசாவையுந் தூஷித்தானென்று அவர்  களைப் பொய்ச் சாட்சி சொல்லச்செய்து,  அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் கல்லாலெறிந்து கொன்றுபோடுங் களென்று எழுதினாள்.

11.  நாபோத்தோடு அவ்வூரில் குடி யிருந்த மூப்பர்களும் பெரியோர்களும் எசாபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங் களில் எழுதிக் கட்டளையிட்டிருந்த படியே செய்தார்கள்.

12. அவர்கள் ஓர் உபவாசத்தைப் பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் மூப்பர்முன் நிறுத்தினார்கள்.

13. அப்பொழுது அவர்கள் பசாசின் மக்களாகிய இரண்டு பேர்களை வர வழைத்து அவனுக்கு எதிராக நிறுத்தி வைத்தார்கள்.  இந்தப் பசாசு மக்களோ ஜனககூட்டத்தைப் பார்த்து: நாபோத் தேவனையும் இராசாவையுந் தூஷித்தா னென்று அவனுக்கு விரோதமாய்ச் சாட்சி சொன்னார்கள்; அந்தச் சாட்சியத்தின் பேரில் ஜனங்கள் நாபோத்தை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லா லெறிந்து கொன்றுபோட்டார்கள்.

14. பிற்பாடு எசாபேலுக்குச் சமாச் சாரமனுப்பி: நாபோத் கல்லாலெறி யுண்டு செத்தானென்று சொன்னார்கள்.

15. நாபோத் கல்லாலெறியுண்டு செத்ததை எசாபேல் கேட்டபோது, அவள் ஆக்காபை நோக்கி: நீர் போய் ஜெஸ்ராயேலனாகிய நாபோத் உமது விருப்பத்துக்கு இசையாமல் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டே னென்று சொன்ன திராட்சத் தோட் டத்தை நீர் சொந்தமாயெடுத்துக் கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப்போனானென்றான்.

16. நாபோத் செத்துப்போனதை ஆக்காப் கேட்டெழுந்து ஜெஸ்ராயேல னாகிய நாபோத்தின் திராட்சத் தோட் டத்தைச் சொந்தப்படுத்திக்கொள்ளப் போனான். 

17. அந்நேரத்திலேயே தெஸ்பேய னாகிய எலியாசுக்குக் கர்த்தர் திருவுள மாகிச் சொன்னதாவது:

18. சமாரியாவிலிருக்கிற இஸ்றாயே லின் இராசாவாகிய ஆக்காபை நீ சந்திக் கும்படி போ; அதோ அவன் நாபோத் தின் திராட்சத் தோட்டத்தைச் சொந் தப்படுத்திக் கொள்ள அங்கே போகி றான்.

19. அவனைப் பார்த்து: சர்வேசுரன் செல்லுகிற வாக்கியத்தைக் கேளும்; நீ நாபோத்தைக் கொன்றதுமல்லாமல் அவனுடைய திராட்சத் தோட்டத்தை யும் அபகரித்தாயென்கிறாரென்று சொல்லு.  பிறகு நீ மீண்டும் அவனை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறதேதெனில், நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலேயே உன்னுடைய இரத்தத்தையும் நக்கும் என்று சொல் லென்றார்.

20. அப்போது ஆக்காப் எலியாசை நோக்கி: நான் உனக்குப் பகையாளியென நீ எந்த விஷயத்திலாவது கண்டாயா என்றான். அதற்கு அவன்: ஆம் நீர் கர்த்த ருடைய பார்வைக்கு அடாதவைகளைச் செய்ய உம்மைக் கையளித்துப் போட்டீ ரன்றோ?  ஆனதினாலே கர்த்தர் சொல்லு கிற வாக்கியத்தைக் கேளும்:

21. நாம் உனக்குச் சகலவிதத் தீமை யையும் வரப்பண்ணுவோம்.  உன் சந்த தியை அழித்துப்போட்டு, உன் வீட்டிலே சுவர்பக்கத்தில் சலபாதிக்குப் போகிற குழந்தையையும், இஸ்றாயேலிலே கடை சியானவனையும் இன்னுங் (கருப்பத்தில்)  அடைக்கப்பட்டிருக்கிற சிசுவையுஞ் சங்கரித்துப் போடுவோம்.

22. நீ உன் துற்செய்கைகளினால் நமக்குக் கோபமுண்டாக்கி இஸ்றாயே லைப் பாவம் செய்யப்பண்ணினதி னிமித்தம் நாம் உன் குடும்பத்தை நாபோத்தின் குமாரனாகிய எரோபோ வாமின் குடும்பத்துக்கும், ஆகியாவின் குமாரனான பாசாவின் குடும்பத்துக்குஞ் சமானமாக்குவோம் என்கிறார் என் றான்.

23. இன்னும் எசாபேலுக்குப் பிரதி கூலமாய்க் கர்த்தர் உரைத்த தீர்ப்பாவது: ஜெஸ்றாயேலின் நிலத்திலே நாய்கள் எசாபேலைத் தின்னும்.

24. ஆக்காப் பட்டணத்தில் செத்தால் நாய்களுக்கிரையாவான்; வெளியில் செத்தால் ஆகாயப் பறவைகளுக்கிரை யாவானென்கிறார் என்றான்.

25. கர்த்தருடைய பார்வைக்கு அடா ததைச் செய்யத் தன்னை உட்படுத்தின ஆக்காபைப் போல் துர்மார்க்கன் ஒருவனுமில்லை.  மேலும் அவனுடைய மனைவியான எசாபேல் அவனை (அடாததைச் செய்ய) ஏவி விடுவான்.

26. அவன் எவ்வளவு அக்கிரமியானா னென்றால்: இஸ்றாயேலின் புத்திரர் களுக்கு முன்பாகக் கர்த்தர் நிர்த்தூளி யாக்கி யளித்திருந்த அமோறையரின் விக்கிரகங்களையும் அவன் அநுசரித்து வந்தான்.

27. (தீர்க்கத்தரிசியின்) வார்த்தை களைக் கேட்ட பிற்பாடு ஆக்காப் தன்  வஸ்திரங்களைக் கிழித்துப் போட்டுத் தன் சரீரத்தின்மேல் பருமனான இரட் டைக் கம்பளியைப் போட்டுக்கொண்டு உபவாசமாயிருந்து கோணி சாக்கிலேயே படுத்துக் கொள்வான்; (வெளியே போனால்) அவன் சிரசு கவிழ்ந்தே நடப் பான்.

28. அப்பொழுது தெஸ்பேயனான எலியாசுக்குக் கர்த்தர் திருவுளம்பற்றின தாவது:

29. நமக்கு முன்பாக ஆக்காப் தன்னைத் தாழ்த்தினபடியால் நாம் அவ னுக்கு உயிர்க்காலத்தில் அந்தத் தீமை களை வரச்செய்யாமல் அவனுடைய குமாரன் நாட்களிலே அவன் சந்ததியின் மேல் வரச் செய்வோமென்றார்.