அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 21

நோபே நகரில் தாவீது

1. தாவீது நோபே ஊரிலிருந்து குருப்பிரசாதியான அக்கிமெலேக்கிடத் தில் வந்து சேர்ந்தான். அக்கிமெலேக் தாவீது வந்ததைப் பற்றித் திடுக்கிட்டு ஒருவரும் உம்மோடு கூட வராமல் நீர் ஒண்டியாய் வந்தது என்னவென்று வினவ,

2. தாவீது குருப்பிரசாதி அக்கிமெ லேக்கை நோக்கி: இராசா எனக்கு ஒரு காரியம் கட்டளையிட்டார்; நீ அனுப்பப்பட்ட காரியமும் நான் உனக்குக் கொடுத்த கட்டளையும் இன்னதென்று ஒருவரும் அறியலாகாதென்றார்; இன்ன இடத்திற்கு வரவேண்டுமென்று நான் சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.

3. இப்போது உமது கையிலே ஐந்து அப்பமாகிலும் வேறென்னவாகிலும் எது கிடைக்குமோ அதை எனக்குக் கொடு மென்று சொன்னான்.

4. குருபபிரசாதி தாவீதுக்கு மறு மொழியாக: என் கையில் பரிசுத்த அப்பங்களிருக்கிறதொழிய சாதாரண அப்பங்கள் இல்லை. வாலிபரான நீங்கள் ஸ்திரீகளோடு சேராமல் இருந்தால் (கொடுப்பேன்) என்றான்.

5. அதற்கு தாவீது ஆசாரியரை நோக்கி: ஸ்திரீகளுடைய விஷயத்தில் எங் களுக்குத் தீட்டுக் கிடையாது. நாங்கள் புறப்பட்டது முதல் நேற்றும் மூன்றாம் நாளும் அவர்களை ஸ்பர்சிக்கவில்லை யாதலால் வாலிபருடைய வஸ்திர முதலி யவை பரிசுத்தமாகவே இருந்தன. இந்த யாத்திரையில் ஏதாகிலும் தீட்டுப்பட்ட தாகில் இன்றைக்குத்தான் பரிசுத்தமாகு மென்றான்.

6. ஆகையால் குருப்பிரசாதி அர்ச்சிக் கப்பட்டஅப்பத்தை அவனுக்குக் கொடுத் தான். உள்ளபடி சூடான அப்பங்களை வைக்கும்பொருட்டு ஆண்டவருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட தேவ சமுகத்து அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இருந்ததில்லை.

7. அந்நேரத்தில் சவுலின் ஊழியர் களிலே ஒரு மனிதன் கர்த்தருடைய கூடாரத்துக்குள் இருந்தான். அவனு டைய பேர் தோயேக். அவன் இதுமே யன்; சவுலுடைய மேய்ப்பர்களுக்கு அவன் தலைவன்.

8. தாவீது அக்கிமெலேக்கை நோக்கி: இங்கு ஈட்டியாவது பட்டய மாவது உமது கையிலுண்டோ? இராசா வின் கட்டளை அவசரமானதாயிருந்தது. ஆனதைப் பற்றி என் பட்டயத்தையும் என் ஆயுதங்களையும் நான் எடுத்துக் கொண்டு வரவில்லையென்று சொன் னான்.

9. அதற்கு ஆசாரியன்: நீர் தெரே பெண்ட் கணவாயில் கொன்ற பிலிஸ்திய னாகிய கோலியாத்துடைய பட்டயம் அதோ எப்போத்துக்குப் பின்னால் துணியில் சுருட்டி வைத்திருக்கின்றது. அதை எடுத்துக்கொள்ள இஷ்டமானால் எடுத்துக்கொள்ளலாம்; அதைவிட வேறு பட்டயம் இங்கு இல்லையென்று சொன் னான். அப்போது தாவீது: அதற்கு நிகரானது வேறில்லை; அதை எனக்குக் கொடுமென்று சொன்னான்.

10. அன்றைய தினமே தாவீது எழுந்து சவுல் சமுகத்தை விட்டு ஓடிப் போனான். கேத் அரசனாகிய ஆக்கீஸ் இடத்தில் போய்ச் சேர்ந்தான்.

11. ஆக்கீஸ் ஊழியர்கள் தாவீதைப் பார்த்தபோது அவனைக் குறித்து: இவன் தாவீது அல்லவா? இவன் தேசத்து அரசனல்லவா? சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றானென்று சொல்லி இவனைக் குறித்தல்லோ பாடியாடிக் கொண்டாடினார்களென்றார்கள்.

12. தாவீது இந்த வார்த்தைகளைத் தன் மனதில் வைத்துக் கொண்டு கேத் இராசாவாகிய ஆக்கீசுக்கு மிகவும் பயப் பட்டு,

13. அவர்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்திப் (பித்தங் கொண்டவன் போல் வேஷம்போட்டு) திடுக்கென்று அவர்கள்மேல் விழுந்து போவான், அல்லது வாசல் கதவுகளில் மோதிக் கொண்டிருப்பான்; வாய்நீர் அவனுடைய தாடியில் ஒழுகிக் கொண் டிருந்தது.

14. ஆக்கீஸ் தன் ஊழியர்களை நோக்கி: இநத மனிதன் பித்தங் கொண்ட வனென்று காண்கிறீர்களே; அவனை நீங்கள் என்னிடத்தில் ஏன் கொண்டு வந்தீர்கள்? 

15. என் சமுகத்திலே பயித்திய சேஷ்டை செய்ய நீங்கள் இவனைக் கொண்டு வருகிறதற்கு நம்மூரில் பயித் தியக்காரர் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.