நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 21

நானூறு கன்னிப் பெண்களைப் பிடித்து பெஞ்சமீனருக்குக் கொடுத்தது.

1. மேலும் இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவில் ஆணையிட்டுச் சொன்னதாவது: நம்மில் ஒருவனுந் தன் குமாரத்திகளைப் பெஞ்சமீன் குமாரருக்குக் கொடுப்பதில்லை என்று சத்தியம் பண்ணிக்கொண்டார்கள்.

2. சகலருஞ் சீலோவில் தேவனுடைய ஆலயத்துக்கு வந்து சாயுங்காலம் வரைக்கும் அவர் சமுகத்தில் உட்கார்ந்து உரத்த சப்தமாய் ஓலமிட்டு அழுது:

3. இஸ்ராயேலின் தேவனான ஆண்டவரோ, இஸ்ராயேலில் ஒரு கோத்திரம் அறுப் புண்டுபோயிற்றே. அப்படிப்பட்ட துர்சம்பவம் உமது ஜனத்துக்கு நேரிட்டிருப்பானேன் என்று முறையிட்டார்கள்.

4. மறுநாள் அதிகாலையில் எழுந்து பீடத்தைக் கட்டிச் சர்வாங்கத் தகனப்பலிகளையும், சமாதானப்பலிகளையும் ஒப்புக்கொடுத்தார் கள்.

5. அப்போதவர்கள்: இஸ்ராயேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து கர்த்தரு டைய படையோடு வராதேபோனவர் ஆர் என்றார்கள். உள்ளபடி வராதவர்களைக் கொல்லுவதென்று மாஸ்பாவில் பெருஞ்சத்தி யஞ் செய்திருந்தார்கள்.

6. பிறகு தங்கள் சகோதரனாகிய பெஞ்ச மீனை நினைத்து மனஸ்தாபப்பட்டு: இஸ்ரா யேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற் றே என்றும்,

7. இனி அவர்களக்கு மனைவியாகப் பெண்கள் எங்கே கிடைக்கும்? நாம் ஒவ்வொ ருவரும் நம்முடைய குமாரத்திகளைக் கொ டுப்பதில்லையயன்று பொதுவில் சத்தியஞ் செய்துகொண்டோமே என்றும் வியாகுலப் பட்டுச் சொல்லிய பின்பு,

8. மறுபடியும்: இஸ்ராயேலுடைய எல் லாக் கோத்தரங்களிலும் மாஸ்பாவில் ஆண்ட வரிடத்தில் வராதவரார் என்று விசாரிக்கை யில் கலாதின் ஜாபேஸ் பட்டணத்தார் படையில் சேரவில்லையயன்று கண்டார்கள்.

9. சீலோவில் அவர்கள் இருந்த காலத்தில் அவர்களில் ஒருவரும் அவ்விடமிருந்ததில்லை:

10. ஆனபடியால் சபையார் பலவான்க ளில் பதினாயிரம் பேரை அனுப்பி அவர்க ளுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் போய் கலாதின் ஜாபேஸ் நகரத்தாரையும், அவர்கள் பெண்ஜாதிகளையுஞ் சிறுவர்களை யும் வாளால் வெட்டுங்கள்.

11. ஆனாலும் நீங்கள் அனுசரிக்கவேண்டி யதாவது: சமஸ்த ஆண்பிள்ளைகளையும், புருஷனை அறிந்த ஸ்திரீகளையும் வெட்டிப் போட்டும் நீங்கள் கன்னிகைகளைக் காப்பாற் றவேண்டும் என்றார்கள்.

12. அவர்கள் கலாதிலுள்ள ஜாபேசில் புருஷரை அறியாத நானூறு கன்னிகைக ளைக் கண்டுபிடித்து அவர்களைக் கானான் தேசமான சீலோவிலிருந்த பாளையத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

13. பிறகு சபையார் ரெம்மோன் கன்ம லையிலிருந்த பெஞ்சமீன் மக்களுக்குத் தூத ரை அனுப்பி: நீங்கள் போய் அவர்களோடு பேசிச் சமாதானம் பண்ணுங்களென்று கட்ட ளையிட்டார்கள்.

14. அப்போது பெஞ்சமீனர்திரும்ப வந் தார்கள். கலாதிலுள்ள ஜாபேசிலிருந்து வந்த பெண்கள் அவர்களுக்கு மனைவியாகக் கொ டுக்கப்பட்டார்கள்; அதே பிரகாரம் அவர்க ளுக்குக் கொடுக்கக்கூடுமானவேறு பெண்கள் அகப்படவில்லை.

15. இஸ்ராயேலர் எல்லோரும் இஸ்ராயே லில் ஒரு கோத்திரம் இப்படி அழிக்கப்பட்ட தேயயன்று மன வியாகுலப்பட்டுத்தபஞ் செய்தார்கள்.

16. பிறகு ஜனங்களில் மூப்பர்: பெஞ்சமீன் ஸ்திரீகள் எல்லாரும் ஒரே நால் சங்காரம் பண்ணப்பட்டார்களே; பெண்களில்லாத மீதியான மற்ற புருஷருக்காக நாம் என்ன செய்யலாம்.

17. இஸ்ராயேலில் ஒரு கோத்திரம் நிர்முல மாகாதபடிக்கு நாம் வெகு பிரயாசைப்பட்டு ஜாக்கிரதையாய்ப் பார்க்க வேண்டுமே.

18. நம்முடைய குமாரத்திகளில் பெஞ்சமீ னருக்குப் பெண் கொடுக்கக்கூடாது; அவர்க ளுக்குப் பெண்கொடுத்தவன் சபிக்கப்பட்ட வன் என்று நாமே சபித்துக்கொண்டோமே உள்ளபடி நாம் அந்நாளிலே நம்முடைய குமாரத்திகளை நாம் அவர்களுக்குக் கொடுப் பதில்லையயன்று சபதங் கூறினோம் என்று இருமனப்பட்டு,

19. கடைசியிலே அவர்கள் ஆலோசனை செய்து: இதோ பேட்டல் நகரத்துக்ககுத் தெற்கிலும், பேட்டலினின்று சிக்கேமுக்குப் போகிற வழிக்குக் கிழக்கிலும், லெபோனா பட்டணத்திற்கு மேற்கிலும் இருக்கிற சீலோபிலே கர்த்தருடைய வருஷாந்தர உற்சவம் கொண்டாடப்படுகிறதேயயன்று சொல்லி யோசித்து, 

20. பெஞ்சமீன் மக்களுக்கு ஜாடையாய்ச் சொன்னார்கள்: நீங்கள் போய் திராட்சத் தோட்டங்களில் பதிவிருந்து,

21. சீலோவின் குமாரத்திகள் தங்கள் வழக்கப்படி நடனஞ் செய்ய வருகிறதை நீங்கள் காணும்போது திடீரென்று திராட்சத் தோட்டங்களினின்று புறப்பட்டு ஒவ்வொரு வனும் ஒவ்வொரு பெண்ணைப்பிடித்து பெஞ்சமீன் நாட்டுக்குப் போங்கள்.

22. அப்புறம் அவர்கள் தகப்பன்மாரா கிலும் சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது நாங்கள் அவர்களை நோக்கி: சண்டை போடுகிறவர்களைப் போல வும், ஜெயமடைந்தவர்களைப் போலவும் அவர்கள் உங்கள் பெண்களைக் கொண்டு போகவில்லையயன்கிறதைப் பற்றி நீங்கள் அவர்கள்மீது தயவுபண்ணவேண்டும். அவர் கள் உங்களைப் பெண்ணைக் கேட்டும் நீங் கள் கொடுக்கமாட்டோமென்றீர்களே; குற் றம் உங்கள்மேலேதானே என்று சொல்வோம் என்றார்கள்.

23. பெஞ்சமீன் புத்திரர் அவ்விதமே செய் தார்கள். நடனம் பண்ண வந்த பெண்களில் ஒவ்வொருவனும் ஒப்வொரு பெண்ணைப் பிடித்து மனைவியாகக் கொண்டு தங்கள் சுதந்தரத்துக்குப் போய்ச் சேர்ந்து பட்டணங் களைப் புதிதாய்க் கட்டி அதுகளில் வசித்தி ருந்தார்கள்.

24. இஸ்ராயேல் புத்திரரும் அவரவர் கோத்திரத்திற்குங் குடும்பத்திற்குந் தக்கபடி தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பினார்கள். அக்காலத்தில் இஸ்ராயேலில் அரசனில்லை: ஆனால் ஒப்பொருவனுந் தன் தன்பார்வைக்குச் சரிப்போனபடி நடந்து வருவான்.நியாயதிபதிகளாகமம் முற்றிற்று.