அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 20

ஜோனத்தாஸ் தாவீது உடன்படிக்கை

1. தாவீது ராமாத்தாவிலிருந்த நயோத்தை விட்டு ஓடி ஜோனத்தாஸ் முன்பாக வந்து, உன் தகப்பன் என் உயிரை வாங்கத் தேடுகிறாரே நான் என்ன செய்தேன்? என்ன துரோகம் பண்ணினேன்? நான் அவருக்குச் செய்த அக்கிரமமென்னவென்று முறையிட,

2. அதற்கவன்: அப்படியிராது, நீ சாவதேயல்லை. எனக்குத் தெரியப்படுத் தாமல் என் தகப்பன் பெரிய காரியமா கிலுஞ் சிறிய காரியமாகிலும் ஒன்றுஞ் செய்யமாட்டார். இந்தக் காரியத்தை மாத்திரம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் மறைப்பாரோ அப்படி யிருக்க மாட்டாது என்று அவனுக்குச் சொல்லி,

3. மறுபடியுந் தாவீதுக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தான். அதற்கு அவன்: நான் உன் கண்ணுக்குப் பிரியப்பட் டிருக்கிறேனென்று உன் தகப்பனால் நன்றாயறிந்திருக்கிறார்; தெரிவித்தால் ஜோனத்தாஸ் கஸ்திப்படுவானே; மன நோய் வராதபடிக்கு உனக்கு அதை அறிவிக்கவில்லையாக்கும். கேள்; எனக் குஞ் சாவுக்கும் ஓர் அடி தூரந்தானிருக் கிறதென்று ஆண்டவர் ஜீவனையும் உன் ஆத்துமா ஜீவனையுங் கொண்டு சத்தியம் பண்ணுகிறேன் என்றான்.

4. அப்பொழுது ஜோனத்தாஸ் தாவீதை நோக்கி: உன் மனவிருப்ப மென்ன? நீ எதைச் சொன்னாலும் நான் அந்தப்படி செய்வேனென்றான்.

5. தாவீது ஜோனத்தாசை நோக்கி: இதோ நாளைக்கு மாதம் முதல் தேதி. நான் இராசாவின் பந்தியில் உட்காரு கிறது வழக்கம். நான் மூன்றாம் நாள் சாயுங்கால மட்டும் வெளியில் ஒளித்திருக்கும்படி விடைகொடு.

6. உன்னுடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால் நீ சொல்ல வேண்டி யதாவது: அவன் தன்னூராகிய பெத்லே மில் தன் குடும்பத்தார் யாவரும் ஆடம் பரமான பலிகள் ஒப்புக்கொடுக்கப் போகிறபடியால் அங்கு தீவரித்துப் போக என்னிடத்தில் உத்தரவு கேட்டான் என் பாய்.

7. அவர் நல்லதுதான் என்றால் உம்மடியானுக்குச் சமாதானமிருக்கும்; அவர் கோபித்துக் கொண்டால் அவருடைய கெட்ட குணம் முடிவுக்கு வந்ததாக அறிந்து கொள்ளும்.

8. நான் ஆண்டவருக்கு முன்பாக உம்முடன் உடன்படிக்கை செய்தபடி யால் உமதடியான் பேரில் நீர் தயவு செய்யும். என்பேரில் யாதோர் குற்ற மிருந்தால் உம்முடைய தகப்பனிடம் என்னைக் கொண்டுபோக வேண்டாம்; நீரே என்னைக் கொன்றுவிடும் என்றான்.

9. அதற்கு ஜோனத்தாஸ்: அப்படி யில்லாதிருப்பதாக! உமக்குப் பொல் லாப்புச் செய்ய என் தகப்பனார் தீர்மா னித்திருக்கிறாரென்று நான் நிச்சயமாய் அறிந்தால் உமக்கு அதைத் தெரிவிக் காமல் இருப்பேனோ என்றான்.

10. தாவீது ஜோனத்தாசை நோக்கி: சிலவிசை உம்முடைய தகப்பன் என்னைக் குறித்துக் கடுமையாய் மறு மொழி சொன்னாரேயானால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்று கேட்டதற்கு,

11. ஜோனத்தாஸ் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான். இருவரும் வயலிலே போயிருக்கும்போது ஜோனத்தாஸ் தாவீ தின் முகதாவிலே பேசி:

12. இஸ்றாயேலின் தேவனாகிய ஆண்டவரே நாளையாவது மறு நாளி லாவது என் தகப்பனுடைய கருத்தை நான் அறிந்துகொண்டு அது தாவீதுக்கு நற்காரியமாயிருக்கும் பட்சத்தில் அதை அவனுக்கு உடனே வெளிப்படுத்து வேன்; அப்படிச் செய்யாவிட்டால்,

13. ஆண்டவர் ஜோன்தாசுக்கு இதற் குச் சரியாகவும் அதற்கு மேலாகவும் செய்யக் கடவாராக! என் தகப்பனார் உமது பேரில் கொண்ட பகையை அவர் விட்டுவிடாமலிருப்பாராகில் நான் உமக் கதை வெளிப்படுத்துவேன். அப் பொழுது நீர் சமாதானமாய் ஓடிப் போகும்படிக்கும் உமக்குச் சொல்லி யனுப்புவேன்.

14. நான் சீவித்திருப்பேனாகில் ஆண்டவரைப் பார்த்து நீர் கர்த்தருடைய நிமித்தமாய் எனக்குத் தயவு செய்யக் கடவீர்; அதற்குள்ளே நான் இறந்து போனால்,

15. ஆண்டவர் தாவீதின் சத்துராதி களாகிய ஒவ்வொருவரையும் பூமியி னின்று நிர்மூலமாக்கின பின்பு நீர் தயவு பண்ணி என் வீட்டின்மேல் என்றைக்குங் கிருபையாயிருக்க வேண்டும். நான் இந்த உடன்படிக்கையை மீறி நடப்பே னாகில் ஆண்டவர் ஜோனத்தாசைத் தன் வீட்டிலிருந்து நாசமாக்கவும், தாவீதைத் தன் சத்துராதிகளின் கையிலே நின்று மீட்டிரட்சிக்கவுங் கர்த்தர் செய்யக்கட வாராக என்றான்.

16. இவ்விதமாய் ஜோனத்தாஸ் தாவீதின் குடும்பத்தாரோடு உடன் படிக்கை பண்ணிக் கொண்டான். ஆண்டவரும் தாவீதின் சத்துராதிகளின் மேல் பழிவாங்கினார்.

17. ஜோனத்தாஸ் தாவீதை நேசித் திருந்தபடியால் பலவிசையும் அப்படியே ஆணையிட்டுச் சத்தியம் பண்ணினான். உள்ளபடி தன்னுயிர்போல் தாவீதை நேசித்திருந்தான்.

18. பிறகு ஜோனத்தாஸ் தாவீதை நோக்கி: நாளையத் தினம் மாதத்தின் முதல் தேதி திருநாளாயிருக்கிறது; என் தகப்பனார் உம்மைக் குறித்து விசாரிப் பாரே, 

19. இரண்டு நாள பரியந்தம் நீர் ஆஜராயிருக்க வேண்டியதல்லவா? வேலை செய்யக் கூடுமான மூன்றா நாளிலே நீர் உடனே இறங்கி ஒளித்திருக் குமிடத்திற்கு வந்து எசேல் என்று பேர்கொண்ட கல்லண்டையில் உட் கார்ந்திரும்.

20. அப்பொழுது அம்பு எய்வதில் பழகிக் கொள்வதுபோல நான் அந்தக் கல்லின் திசைப் பக்கமாய் மூன்று அம்பு களை விடுவேன்.

21. அம்புகளை விட்டு ஒரு பிள்ளை யாண்டானை நோக்கி: நீ போய் என் அம்புகளை எடுத்து வாவென்று சொல்லி அனுப்புவேன். 

22. அப்போது நான் அவனைப் பார்த்து இதோ அம்புகள் உனக்கிப்புறம் இருக்கின்றன; அவைகளை எடுத்து வாவென்று சொன்னேனாகில் நீர் என்னிடம் வாரும்; ஏனெனில் உமக்குச் சமாதானமுண்டு, ஆண்டவர் ஆணை உமக்குத் தின்மை ஒன்றும் வராது. ஆனால் இதோ அம்புகள் உமக்கப்புறம் இருக்கின்றனவென்று நான் பையனுக்குச் சொன்னேனாகில் நீர் சமாதானத்துடன் போகவேண்டும்; ஆண்டவர் உம்மை அனுப்பிவிட்டார் (என்றறியவும்.)

23. நீரும் நானும் பேசிக்கொண்ட இந்தக் காரியத்துக்கு ஆண்டவர் என்றென்றைக்கும் உமக்கும் எனக்கும் சாட்சியாயிருப்பாராக.

24. ஆகையால் தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டான். மாதத்தில் முதல் தேதி வந்தது. இராசா போசனத்துக்கு உட்கார்ந்தான்.

25. அவன் தன் வழக்கப் பிரகாரம் சுவர் அண்டையில் இருந்த தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்த போது ஜோனத்தாஸ் எழுந்தான். அப்நேர் சவுலின் பக்கத்திலே உட்கார்ந்தான்; அப்பொழுது தாவீதின் இடங் காலியா யிருந்தது.

26. அன்றைக்குச் சவுல் ஒன்றுஞ் சொல்லவில்லை; அவன் தீட்டாயிருக் கிறானாக்கும்; அவன் தீட்டுப்பட்டு இன்னும் பரிசுத்தனாகவில்லையென்று சவுல் நினைத்திருந்தான்.

27. மாதத்தின் முதல் தேதிக்கு மறு நாள் விடிந்தபோது தாவீதின் இடம் இன்னுங் காலியாயிருந்தது கண்டு சவுல் தன் குமாரனாகிய ஜோனத்தாசை நோக்கி: இசாய் குமாரன் நேற்றும் இன்றும் சாப்பிட ஏன் வரவில்லை என்று கேட்டான்.

28. அதற்கு ஜோனத்தாஸ்: அவன் பெத்லேமுக்குப் போக என்னை வருந்திக் கேட்டுக் கொண்டு

29. என் ஊரில் ஆடம்பரப் பலியா யிருக்கிறது; என் சகோதரர்களில் ஒருவன் தன்னிடத்திற்கு வரும்படி கட்டளையிட்டான்; ஆகையால் உமது கண்களில் எனக்குத் தயை கிடைத்த தாகில் என்னை அனுப்பிவிடும்; நான் சீக்கிரம் போய் என் சகோதரர்களைப் பார்த்து வருகிறேன் என்றான். இது காரணத்தைப் பற்றித் தான் அவன் இராச பந்திக்கு வரவில்லையென்று ஜோனத் தாஸ் (சவுலுக்கு மறுமொழி சொன் னான்.)

30. சவுல் ஜோனத்தாஸ் மேல் கோப முண்டவனாய்: வேசி மகனே பேசாதிரு! உனக்கு வெட்கமாகவும், மானங்கெட்ட உன் தாய்க்கு வெட்கமாகவும் இசாய் குமாரனை நீ நேசிக்கிறாயென்று எனக்குத் தெரியாதோ?

31. இசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்குந்தனையும், நீயாவது உன் இராச்சியமாவது ஸ்திரமாயிருக்க மாட்டாது. ஆகையால் இப்போதே அவனை அழைப்பித்து என்னிடத்தில் கொண்டுவா; ஏனெனில் அவன் சாக வேண்டும் என்று சொன்னான்.

32. ஜோனத்தாஸ் தன் தகப்பனாகிய சவுலுக்கு மறுமொழியாக: அவன் ஏன் சாக வேண்டும்? அவன் என்ன செய் தான்? என,

33. சவுல் அவனைக் குத்திப்போடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறா னென்று ஜோனத்தாஸ் அறிந்துகொண் டான்.

34. ஜோனத்தாஸ் கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்த முதல் தேதிக்கு மறுநாளாகிய அன்றையத் தினம் ஒன்றும் சாப்பிடவில்லை. ஏனென்றால் தன் தகப்பன் தன்னை அவமானப்படுத்தின தைப் பற்றியும், தாவீதைக் குறித்து நிந்தையாய்ப் பேசினதைப் பற்றியும் அவனுக்கு மனத் துயரம் வந்தது.

35. காலமே வெளிச்சமானபோது ஜோனத்தாஸ் தாவீதுடன் தீர்மானித்த பிரகாரம் தானும் தன்னுடன் ஒரு சிறு பையனுமாக வயலில் வந்து,

36. சிறு பையனை நோக்கி: போய் நான் எறிகிற அம்புகளைக் கொண்டுவா என்றான்; பையன் ஓடும்போது பைய னுக்கு அப்பாலே ஓர் அம்பை எய்தான்.

37. ஜோனத்தாஸ் விட்ட அம்பு இருக்குமிடத்தில் பையன் போனபோது ஜோனத்தாஸ் பையனுக்குப் பிறகாலே கூவி: இன்னும் அம்பு உனக்கு அப்பால் இருக்கிறது என்றான்.

38. மறுபடியும் ஜோனத்தாஸ் பைய னுக்குப் பின்னாலே கூவி: நிற்காதே சீக்கிரமாய்ப் போ என்றான். பையன் ஜோனத்தாஸின் அம்புகளைப் பொறுக்கி யெடுத்துத் தன் எசமானுக்குக் கொண்டு வந்தான்.

39. ஜோனத்தாசும் தாவீதும் மாத்தி ரம் காரியத்தை அறிந்திருந்தார்களேயன்றிப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றுந் தெரியாதிருந்தது.

40. அப்பொழுது ஜோனத்தாஸ் பையனிடத்தில் தன் ஆயுதங்களைக் கொடுத்து: இவைகளைப் பட்டணத்துக் குக் கொண்டு போ என்றான்.

41. பையன் போனபின்பு தாவீது தென்புறத்து முகமான இடத்திலிருந்து எழுந்து வந்து தரை மட்டுங் குனிந்து விழுந்து மூன்று விசை வணங்கினான். அவர்களில் ஒருவரை ஒருவர் முத்தஞ் செய்து இருவரும் அழுதார்கள்; ஆயினும் தாவீது அதிகமாய் அழுதான். 

42. பின்பு ஜோனத்தாஸ் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடு போம். ஆண்டவர் நாமத்தால் நாமிருவருஞ் சத்தியம் பண்ணிக் கொண்டு கர்த்தர் உமக்கும் எனக்கும் உமது சந்ததிக்கும் என் சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லிச் செய்த உடன்படிக் கையை மறவாதீர் என்றான்.

43. பிறகு தாவீது எழுந்து புறப் பட்டான். ஜோனத்தாஸ் பட்டணத் துக்குப் போய்விட்டான்.